Friday 15 January 2016

இனிப்பு (SWEET)

                                                     இனிப்பு   (SWEET)

இனிப்பு சுவையை அனைவரும் விரும்புகிறோம். அதனைப்பற்றிய முக்கியமான விவரங்களை தெரிந்து வைத்திருப்பது அவரவர் கடமையாகும். .

நாம் உண்ணும் சீனி,சிரப்,குளுக்கோஸ்  போன்ற வைகளை கல்லீரல் கெட்ட  கொழுப்பாக மாற்றுகிறது. இந்த கொழுப்பு இரத்த உயர் அழுத்தத் திற்கும்,  இருதய நோய்க்கும் காரணமாகிறது. இனிப்பு இன்சுலின் குறை பாட்டிற்கும், அதிக உடல் எடைக்கும்  காரணமாகிறது.  

விளம்பரப்படுத்தி கடையில் விற்கப்படும் சுவையான குளிர்பானங்கள், பழரசங்கள் அனைத்தும் சீனி,சிரப் பயன்படுத்தியே செய்யப்படுகின்றன. இந்த வகை உணவுகளும், பானங்களும் ஆரோக்கியத்தின் முதல் எதிரி. 

பழங்களில் இருக்கும் இனிப்பு நார்ச்சத்து, வைட்டமின்,எலெக்ட்ரோலைட்  போன்றவைகளுடன் சேர்ந்து இருப்பதால் நன்மையாக இருக்கிறது. நார்ச்சத்தை பாதுகாக்க முடியாது,  எனவே பழங்களிலுள்ள நார்ச்சத்தை நீக்கிவிட்டு பழரசங்களை பாட்டிலில் அடைத்து விற்கிறார்கள். இதில் இனிப்பைத்தவிர வேறெந்த சத்தும் இல்லை. அதைக்குடித்தவுடன்  இரத்தத்தில் சுகர் அதிகமாகி விடுகிறது.

சீனிஇனிப்பு, மாவுப்பொருளில் இருக்கும் இனிப்பை விட எட்டு மடங்கு அதிக மானது. இனிப்பாக இருந்து மரணத்திற்கு அழைத்துச்செல்லக் கூடியது.  சீனியை மெல்லக் கொல்லும் ஒரு விஷம் என்கிறார்கள்.

சீனி, கரும்புச்சாரிலுள்ள தாதுக்களையும், வைட்டமின்களையும் இழந்து தனி கார்போஹைட்ரேட் ஆக இருக்கிறது. தனி கார்போஹைட்ரேட் ஆரோக்கியத் திற்கு நல்லதல்ல.

கார்போஹைட்ரேட்டை வைட்டமின் களுடன்தான் உண்ணவேண்டும்.
உடலுள் சீனியை ஜீரணிக்க தேவையான வைட்டமின் சத்துக்களை உடலின் சேமிப்பிலிருந்து எடுத்துக்கொள்வதால் வைட்டமின் இழப்பு ஏற்பட்டு உடல் நோய் வாய் ப்படுகிறது. தினமும் பலவகை யான உணவு, பானங்கள் மூலம் அதிக அளவு இனிப்பை நாம் உட்கொள் கிறோம்.

அடிக்கடி, குளிர்பானம், பழரசம் சாப்பிடுபவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பாதுகாக்கப்பட்ட பானங்களை தொடர்ந்து உட்கொள்ளும் போது  மதுவைப்போன்று கல்லீரலை பாதிக்கிறது.

கார்போஹைட்ரேட் உணவுகளை, புரோட்டீன், கொழுப்பு, காய்கள் போன்ற உணவுகளுடன் சேர்த்து உண்ணும் போது  இன்சுலின் தேவை குறைவாகவும், சீராகவும் இருக்கிறது. சீனி அதிகம் உள்ள உணவுகள் உடல்ச்சமநிலையை   கெடுத்துவிடுகிறது.

குறைவான சீனி, மிகுந்த கொழுப்பு உண்பவர்களைவிட, அதிக சீனி, குறைந்த கொழுப்பு உணவு உண்பவர்களுக்கு கொலஸ்டிரால்  பிரச்சினை  அதிக மாய் இருக்கிறது.

சீனி இயற்கையான உணவு அல்ல. 1900 ம் ஆண்டுகளுக்கு பிறகுதான் பிரபலமான ஒரு புதிய உணவாகும். எந்த சத்தும் இல்லாத, உடலுக்கு தேவையே இல்லாத ஒரு உணவாகும். தற்போது சீனியை விட மோசமான மக்கா சோளத்திலிருந்து எடுக்கப்படும்  "கார்ன் சிரப்"  பிரபலமாகி வருகிறது.

செயற்கையாக அல்லாமல் இயற்கையாகத்  தயாரிக்கப்படும் வெல்லம், கருப்பட்டி, பனங்கற்கண்டு, தேன் முதலிய வைகளை கிடைக்கும் இடம் தேடி அலைந்து வாங்கி உபயோகிப்பது நல்லது.

இளமையில் முதுமை நோய்கள் என்பது சாதாரண மாகிவிட்டதை ஆஸ்பத்திரிகளில் காணலாம்.

                                          ------------------------------------------























No comments:

Post a Comment