Thursday 30 July 2015

ஞானிகள் சொன்னவை

                                   ஞானிகள் சொன்னவை 


மனிதன் சுகம், சொகுசை விரும்புகிறவன். சிரமங்களையும், எளிமையையும் விரும்பாதவன். தன்னை புகழ்வதை  விரும்புகிறவன். தன்மீது குற்றங்கூறுவதை விரும்பாதவன்.  அதற்காக சிந்தித்து செயல்படுபவன். 

சிலர் நியாயத்துக்கு பயந்து நடப்பார்கள். சிலர் சாமர்த்தியமாய் பேசி நடப்பார்கள்.

ஆனால், சித்தர்கள் என்பவர்கள் லௌகிக வாழ்க்கையில்அதாவது ருசியான உணவு, ஒப்பனைக்குஉடை,சொகுசான உறைவிடம் போன்ற வற்றில்   நாட்டம் கொள்ளாமல், உலகப் பொருட்களில் ஆசை கொள்ளாமல் இயற்கை யின் செயல் களையும் பிரபஞ்ச இயக்கத்தையும் இறை யின் தன்மை யையும் உணர்ந்தவர்கள். தனது  உடல் சக்தியையும், மனசக்தியையும், உயிர்சக்தியையும் வசப்படுத்திக்கொண்டவர்கள். ஆரவாரமின்றி, உறுதியாய், தெளிவாய், சக்தியாய் வாழ்ந்தார்கள்.

தனக்குள் மேற்கொண்ட சுய விசாரணையில் வைராக்கியமாய் இருந்தார்கள். தன்னுள் பிரபஞ்ச சக்தி  இருப்பதை உணர்ந்தார்கள். பற்றற்று இருந்ததினால் அவர்களுக்கு தனி சக்தி இருந்தது. உலக இன்பத்திலும், பற்றிலும் குறியாய் வாழ்ந்த மக்களுக்கு சரியான் வழிகளை சொன்னார்கள்.

                                               Imagesநடராஜா.jpg









எண்ணிய முடிதல் வேண்டும்

    நல்லவே எண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
    தெளிந்தநல் லறிவு வேண்டும்
பண்ணிய பாவ மெல்லாம்
    பரிதிமுன் பனியே போல
நண்ணிய நின்முன் னிங்கு
    நசித்திடல் வேண்டும் அன்னாய்!!


சிவாய நம என்று சிந்தித் திருப்போர்க்கு
அபாயம் ஒருநாளும் இல்லை - உபாயம்
இதுவே(;) மதியாகும் அல்லாத எல்லாம் 
விதியே மதியாய் விடும்  

எம்பெருமான் பள்ளியெழுந் தருளாயே=என்னுள்ளே உள்ள இறை உணர்வைத் தட்டி எழுப்பச் செய், எம்பெருமானே பள்ளி எழுந்தருள்வாய், என்னுள்ளே நீ உனக்குரிய இடத்தில் அமர்வாய்.


ஈசன் அடிபோற்றி! எந்தை அடிபோற்றி!
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி!
நேயத்தே நின்ற நிமலன் அடிபோற்றி!
மாயப் பிறப்பறுக்கம் மன்னன் அடிபோற்றி
சீரார் பெருந்துறைநம் தேவன் அடிபோற்றி!

எல்லாவற்றையும் உடைமையாகக் கொண்டவனின் திருவடி போற்றி.
எம் தந்தை என நின்று அருளுபவனின் திருவடி போற்றி.
ஒளி வடிவானவனின் திருவடி போற்றி.
சிவன் எனப்பெறும் செம்பொருளின் சிவந்த திருவடி போற்றி.
அன்பினில் நிற்பவனான தூயவனின் திருவடி போற்றி.
மாயப் பிறப்பினை நீக்கும் உயர்ந்தோனின் திருவடி போற்றி.
அமைப்பு சிறந்து விளங்கும் திருப்பெருந்துறையில் இருக்கும் நம் தேவனின் திருவடி போற்றி.

நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க 5

நமச்சிவாய வாழ்க. நாதன் திருவடி வாழ்க.
கண்ணிமைக்கும் நேரமும் என் நெஞ்சம் பிரியாதவனுடைய திருவடி வாழ்க.
திருவாவடுதுறை ஆண்டருளும் குருவாகிய மாணிக்கத்தின் திருவடி வாழ்க.
தானே ஆகமமாகி நின்று நமக்கு அருகில் வருபவனுடைய திருவடி வாழ்க.
ஒருவனாகியும் பலவுருக்கொண்டும் இருக்கும் இறைவனின் திருவடி வாழ்க.

தென் நாடு உடைய சிவனே போற்றி
எந் நாட்டவர்க்கும் இறைவா போற்றி

தென் நாட்டை உரிமையாக கொண்ட சிவனே போற்றி
எந்த நாட்டில்வாழ்பவர்க்கும் இறைவனாக இருப்பவனே போற்றி


நமப் பார்வதி பதையே
அரகர மகா தேவா

பார்வதியின் கணவன் என்ற பெயரால் அழைக்கப்படுபவனே
மறைகளின் (வேதங்களின்) தலைவனே
































ட்டமுடன் என்தலையில் இன்னபடி என்றெழுதி
விட்டசிவ னுஞ்செத்து விட்டானோ – முட்டமுட்டப்
பஞ்சமே யானாலும் பாரமவ னுக்கென்னாய்
கொஞ்சமே அஞ்சாதே நீ.

நெஞ்சமே! பெரும் பஞ்சமே ஆனாலும் அஞ்சாதே. இதுதான் உனக்கு என்று தலையில் எழுதிய சிவன் சாகவில்லை. காப்பான்.

தன்னை அறிய தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அர்ச்சிக்க தானிருந்தானே.

மனிதன் தன்னுள் இருக்கும் சக்தியை தேடாமல், உலகப்பொருட்களை தேடி தவிக்கிறான்.அதிலிருந்து மீண்டுவரமுடியாத சிக்கலில் மாட்டி, ஒரு நாள் மாய்ந்து போகிறான்.சுயவிசாரணை செய்து தன்னை அறிந்தவன் நியாயத்தை முன்வைத்து வாழ்கிறான் என்கிறது இப்பாடல்

தானே தனக்குப் பகைவனும், நண்பனும்
தானே தனக்கு இம்மையும்,மறுமையும்
தானே தனக்கு வினைப்பயனும்,தூய்ப்பானும்
தானே தனக்கு தலைவனும் ஆமே.

மனிதன் தனது விருப்பு அல்லது வெறுப்பினால் செயல் படுகிறான். அது சரியா,தவறா என்பதை நியாயம் கவனிக் கிறது. தனது  தவறை உணர்ந்தவன் சரியாகி விடுவான். தனது தவறை எண்ணி சரணடைந்தவன் மன்னிக்கப் படுவான். தனது தவறுகளுக்கு பரிகாரம் செய்தவன் கர்மவினைகளிலி ருந்து விடுவிக்கப் படுவான், தவறு செய்து திருந்தியவன் தன்னை சரியான படி நிர்வகித்துக்கொள்வான் அதுவே நியாயத்தின் சக்தி என்கிறது இப்பாடல்


உடம்பினை முன்னம் இழுக்கு என்று இருந்தேன்
உடம்பினுக்கு உள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில் கொண்டான் என்று
உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே

உடம்பானது ஏதாவது ஒரு வழியில் தவறு செய்து துன்பம் அனுபவிக் கக்கூடியது. அந்த உடம்பினுள் இருக்கும்  பிரகஷைக்கு வைராக்கியத்துடன் நியாயத்தை வழிகாட்டினால் அது உடலுள் தோன்றும் எண்ணங்களை சரிப்படுத்தும் (சக்திப்படுத்தும்)  என்கிறது இப்பாடல்

உரெலாங் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கிப்  பிணமென்று பேரிட்டு
சூரையங்காட் டிடை க்கொண்டு போய்ச்சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பொழிந்தார்களே.

உடலிலிருந்து உயிர் பிரிந்ததும் வேண்டியவர்கள் எல்லோரும் கூடி, அந்த உடலுக்கு அதுநேரம்  வரை இருந்த பெயரை மாற்றி, பிணம் என்று பெயரிட்டு  பேச ஆரம்பித்து விடுவார்கள். எப்போது எடுக்கலாம் என்று நேரம் குறிப்பிட்டு, சுடு காட்டில் கொண்டுபோய் எரித்து தலைக்கு குளித்து அந்த நிமிடத்திலிருந்து மறக்க ஆரம்பித்து விடுவார்கள், என்று நியாயத்தை பெரிதாக எண்ணாமல் நானே மேலானவன் என்று நடப்பவர்களுக்கு நினைவு படுத்துகிறது இப்பாடல்

அணுவின் அணுவினை ஆதிபிரானை
அணுவின் அணுவினை ஆயிரங் கூறிட்டு
அணுவின் அணுவினை அணுக விலார்க்கு
அணுவின் அணுவினை அணுகலுமாமே

இன்றைய விஞ்ஞானிகள் "ஹிக்ஸ் போஸான்"  என்று பெயரிட்டு அணுவுக்குள் இருக்கும் நுண் அணுக்களை ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். இதை  கடவுள் துகள்கள் என்று  கூறுகிறார்கள். கண்ணுக்கு தெரியாத இந்த நுண்துகள்கள் மலையையும்,கடலையும்,பூமியையும்,பிரபஞ்சத்தையும் ஊடிருவி நிறைந்திருக்கின்றன. நாம் அதனுள் மூழ்கியிருக்கிறோம். நம்முள் அது நிறைந்திருக்கிறது என்பது தற்போதைய விஞ்ஞான ஆராய்ச்சியின் கண்டு பிடிப்பு. இதை சிந்தனை மூலம் அன்றே உணர்ந்து பாடல் எழுதினார்.  நியாயமாய் நடக்க வேண்டும் என்று அதில் உண்மையாய் இருப்பவர்களின் சிந்தனைகள்  மட்டுமே சக்தியாய் மாறி  இறைவனை அணுக வைக்கும், என்கிறது இப்பாடல்

மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா
மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா
மனமது செம்மையானால் வாசியை  நிறுத்த  வேண்டா
மனமது செம்மையானால் மந்திரம்  செம்மையாமே

நானே மேலானவன், சுயநலம், பொறாமை, பொய் போன்றவை தவறு செய்ய வைத்து கர்ம த்தை ஏற்படுத்தும். இம்மாதிரி எண்ணங்களை மனதி லிருந்து அப்புறப்படுத்தினால், அறம் மேலோங்கி  மனம் சுத்தமடையும்.  அவ்வாறு சுத்தமடைந்த மனம் மந்திரங்களை சொல்லாமலே தெய்வசக்தி பெறும். சுத்தமான மனதிற்கு  மூச்சினை உயர்த்தி,அடக்கி ஆகிய பிராணயாம பயிற்சிகள்  தேவையில்லை.சுத்த மான மனம் சொல்லும் மந்திரங்கள்  யாவும்  வலிமை பெற்று நற்பலனை தரும் என்கிறது இப்பாடல்.   

திருவள்ளுவர் கூறியவற்றில் சில.


1.அன்றறிவாம் என்னாது அறம் செய்க மற்றது 
   பொன்றுங்கால் பொன்றாத்துணை.

இளமையில் கடைபிடிக்கும் நல்ல குணங்கள், முதுமையில் துணையாக இருக்கும். 

2.கெடுவல் யான் என்பது அறிக தன நெஞ்சம் 
   நடுஒரீஇ அல்ல செயின்.

நியாயம் இல்லாமல் நடப்பவர்களுக்கு நிம்மதி இருக்காது.

3.ஏதிலார் குற்றம்போல் தங்குற்றம் காண்கிற்பின் 
  தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.

பிறர் மீது குற்றம் காண்பது போல் தான் செய்யும் குற்றங்களையும் சுய விசாரணை செய்து கொள்பவர்களுக்கு பிரச்சினைகளே இல்லாமற் போகும்.

4.அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
  இவ்வுலகம் இல்லாகி யாங்கு.

பணம் இல்லாதவர்களுக்கு  இவ்வுலகில் நிச்சயம் மகிழ்ச்சி இல்லை என்பது போல்,  ( தன் மீது அன்புகாட்டுபவர் களிடம் பரஸ்பரம் அன்புகாட்டும் ) அருள் இல்லாதவர்கட்க்கு அவ்வுலகில் மகிழ்ச்சி இல்லை.

5.இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த 
  வகுத்தலும் வல்ல தரசு.

வருமானம் வரும் உழைப்பை மேற்கொண்டு, பணத்தை சம்பாதித்து ,திட்ட மிட்டு செலவு செய்து, சேமித்து, சேமித்த பணத்தை முதலீடு செய்து, அதை காப்பாற்றி, கடமைகளை செய்வது சிறப்பு. 

6.கற்க கசடறக் கற்பவை கற்றபின் 
   நிற்க அதற்குத்  தக. 

கற்ப வற்றில் உண்மை என்று உணர்ந் தவைகளை வாழ்க்கையில் கடை பிடிக்காவிடில் கற்றது வீண்.

7.எப்பொருள் யார் யார் வாய்க்  கேட்பினும் அப்பொருள் 
மெய்ப் பொருள் அறிவு.

யார் எதை சொன்னாலும் அதை சரியாக விசாரித்த பிறகே நம்பவேண்டும்.

8.இடிப்பாரை இல்லாத் ஏமரா மன்னன் 
  கெடுப்பார் இலானும் கெடும்.

தன்னுடைய குற்றங்களை தட்டிக்கேட்டு அறிவுரை கூற ஆள் இல்லா விட்டால்,பெரிய திறமை சாலியும் கெடுக்க யாரும் இல்லையானாலும் தானே கெட்டுப் போவான்.

9.செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க 
    செய்யாமை யானும் கெடும்.

செய்யக்கூடாததை செய்வதால்  கெட்டுப் போவான்.செய்ய வேண்டியதை செய்யாமல் போனாலும் கெட்டுப்போவான்.

10.வேலன்று வெற்றி தருவது மன்னவன் 
    கோலதூஉம் கோடா தெனின்.

பொறாமை, பழிக்குப்பழி  வெற்றியை தராது. கடமை, நியாயங்களில் நேர்மையாய் நடப்பதே வெற்றியாகும்.

பட்டினத்தார் கூறும்  அறிவுரை.

 ஒன்றென்றிரு தெய்வம் உண்டென்றிரு உயர் செல்வமெல்லாம் 
அன்றென்றிரு பசித்தோர் முகம்பார் நல்லறமும் நட்பும் 
நன்றென்றிரு  நடு நீங்காமலே நமக்கு இட்டபடி 
என்றென்றிரு  மனமே உனக்கு  உபதேசமிதே .


தெய்வம் ஒன்றுதான் உண்மையில் உயர்ந்தது. பணம் தான் உயர்ந்தது என்று தெரியும் போது குணம் இல்லாமல் போய்விடும். பிறர் கஷ்ட காலங்களில் இயன்றதை செய்வதும், கடமை என்னும் அறனிலும், நட்பு என்னும் ஒற்றுமையிலும் அக்கறையாய் இருப்பதும் தெய்வ வழிபாட்டிற்கு சமமாகும். நியாயமாய் நடப்பதில் பிடிவாதமாய் இருப்பதால் அதனால் வரும் லாப, நஷ்டங்கள் நன்மை செய்யும் ன்பது பட்டினத்தார் உபதேசம்.

பத்திரகிரியார்  உபதேசம் 

ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலன்ச் சுட் டெரித்துத் 
தூங்காமல் தூங்கிச்  சுகம் பெறுவ தெக்காலம்.
பேய் போல்திரிந்து பிணம்போல் கிடந்து பெண்ணைத்
தாய்போல் நினைத்து தவம் முடிப்பது எக்காலம்.

நானே மேலானவன் என்னும் அகந்தையை அடக்கி, ஐம்புலன்களும் ஏங்கும் ருசி, பாராட்டு, அழகு, சாமர்த்திய பேச்சு, சொகுசு  போன்றவைகளை மனதிலிருந்து நீக்கி செத்தவரை போல் திரிய பயிற்சி செய்து அதில் சுகம் காணு  மனமே என்று பத்திரகிரியார் உபதேசிக்கிறார். 

மகாத்மா காந்தி கூறியது.

மனிதன் தவறு செய்யக்கூடியவன்.
தான் செய்யும் குறை, குற்றங்களை அறியாதவன் குருடன்.
பிறரை சார்ந்து வாழவேண்டியதை அறியாதவன் மூடன்.
சுதந்திரம் உரிமை. உரிமையை மதிக்க வேண்டியது கடமை.
மயக்கம் காப்பாற்றாது. நம்பிக்கைதான் காப்பாற்றும்.

 ஸ்ரீ ரமண மகர்ஷி கூறியது.

ஆத்திரத்தோடு பார்க்கும் போது நிரபராதி குற்றவாளியாய் தெரிவான்.
அனுதாபத்தோடு பார்க்கும்போது குற்றவாளி நிரபராதியாய் தெரிவான்.

ஆசை குறைந்தால் லாபமும் குறைவு, பாவமும் குறைவு.
ஆசை அறத்தை புறக்கணிக்கும்.

தவறை உணர்ந்தால் தவறு பாதியாக குறையும்.
தவறை நியாயப் படுத்தினால் தவறு இரட்டிப்பாக வளரும்.
  

ஒரு குற்றவாளியை உண்மைகளை மறைத்து நிரபராதி ஆக்கிவிடுவதும், ஒரு பாதிக்கப் பட்டவனை சாமர்த்தியமாய் பேசி குற்றவாளி ஆக்கி விடுவதும்   மனிதர்களால் மட்டுமே இயலும். பூவினை சேதப்படுத்தாமல் தேனை உண்டு வாழும் வண்டினைப் போல், மனிதனும் உலகை சேதப் படுத்தாமல் வாழ வேண்டும். சிறிது உணவைக் கண்ட காகம் பிற காக்கைகளுடன் சேர்ந்து உண்ணுவதைப்போல மனிதனும் பிறருடைய தேவை, உரிமைகளை பரஸ்பரம் மதித்து வாழவேண் டும். இதனால் உலகம் வளமாய் இருக்கும். உயிரினங்கள் நிம்மதியாய் வாழும். இதையே அனைத்து சாதுக்களும் ஒருப்போல் கூறுகிறார்கள்.