Monday 1 August 2016

   உடல் எடையயை கட்டுப்படுத்துவது எப்படி 

நம்மில் பலபேருக்கு உடல் எடை அதிக மாகிக்கொண்டு போவதைப் பார்க்கிறோம்.

உடல் உழைப்பிற்கேற்ற உணவு, அல்லது உணவிற்கேற்ற உடலுழைப்பு என்கிற சமநிலை தவறி  தேவைக்கு அதிகமான அளவு உணவை உண்பது அல்லது தனது உடல் ஒத்துக்கொள்ளாத தவறான உணவுகளை உண்பது போன்றவைகள் உடலின் எடை கூடுவதற்கு முக்கிய காரணம். உட்கார்ந்து வேலை செய்பவர்கள் தினசரி பயிற்சிகளால் உட்கார்ந்து இருப்பதை   ஈடுகட்டவேண்டும் என்கிறார்கள். ஆனால் எல்லோரும் தினசரி பயிற்சி செய்து உடல் எடையை பராமரிப்பதில்லை. அதனால் உடல் எடை கூடுகிறது.
சிலருக்கு ஹார்மோன் போன்ற பிரச்சினைகளாலும் உடல் எடைகூடும்.

 பலபேர் உடல் எடையை குறைக்க உணவுப் பழக்கத்தை மாற்றி, உடற் பயிற்சி செய்து என பலவழிகளை கடைபிடித்து வருகிறார்கள். ஆனால் பல காரணங்களால் அந்தவகை கட்டுப்பாடுகளை தொடர்ந்து கடைபிடிக்கமல் உடல் எடையை குறைக்கமுடியாமல் போய் விடுகிறது. எனக்கு எந்த நோயும் வராது என்று நம் மனம் அடம் பிடிப்பதாலும் கட்டுப்பாடுகள் தளர்நபோய் விடுகின்றன.வந்தால் பார்த்துக்கொள்ளலாம் என்ற அலட்சியப்பேச்சையும் கேள்விப்படுகிறோம்.

உடல் எடையை குறைக்க முதலில் நமது மனதின் முழு ஒத்துழைப்பை பெற வேண்டும்.அதற்கு நமது மனதை நாம் பயமுறுத்த வேண்டும்.

அதிக உடல் எடை பலவிதமான நோய்களுக்கு காரணமாக இருக்கிறது என்று மருத்துவம் கூறுகிறது.

சிறு வயதில் சுகர், பிரஷர், கொலஸ்ட்ரால், இதயநோய்கள் என பலவிதமான சுகவீனங்களுக்காக சிகிச்சை பெறுபவர்களை மருத்துவர்கள் சுட்டிக்காட்டு கிறார்கள்.இதைச்சொல்லி   நம் மனதை பயமுறுத்தவேண்டும்.

மருத்துவமனைகளுக்கு சென்று இளம்வயதில் சுகர், பிரஷர், இருதயநோய் என கஷ்ட்ட ப்படுபவர்களை நேரில் பார்க்கவேண்டும். பார்ப்பவர்களை நம் மனம் நம்பும். 

அடிக்கடி பயமுறுத்தவேண்டும்.இந்த பயமுறுத்துதலால் நம் மனம் மாறி ஒத்துழைக்க தயாராகும் 

உடல் எடை எவ்வாறு கூடுகிறது.

நாம் அன்றாடம் சாப்பிடும் கார்போஹைரேட் மற்றும் கொழுப்பு உணவுகள் அன்றாடம் எரிக்கப்படாத போது அவை உடலில் சேமிக்கப்படுகிறது. மேலும் மேலும் சேமிக்கப்படும் போது உடை எடை கூடுகிறது.

உடல் எடையை எவ்வாறு குறைக்க முடியும்.

உடலில் சேமிப்பிலுள்ள கொழுப்பை குறைக்கவேண்டும், மேலும் புதிதாக சேமிப்பிற்கு வராதபடி உணவில் கவனமாய் இருக்கவேண்டும். இதைத்தவிர வேறு வழியில்லை.

சேமிப்பிலுள்ள கொழுப்பை குறைக்க என்ன செய்வது. தினசரி இரவு உணவை பழங்கள், காய்களோடு  நிறுத்த வேண்டும். இதற்கு முதலில் மன ஒத்துழைப்பைப் பெறவேண்டும்.

ஒரு 21 நாட்கள் இரவு உணவை உண்ணாமல் இருந்து விட்டால் பிறகு மனம் அதற்கு பழக்கப் பட்டுவிடும். பிறகு இரவு சாப்பிடாமல் இருப்பது ஒரு கஷ்டமாகவே இருக்காது. உடல் எடை குறைய ஆரம்பிக்கும்.

மனதில் உறுதியாய் இருக்கும் வரை இரவு உணவைத் தவிர்ப்பதால் உடலுக்கு எந்த தீங்கும் ஏற்படாது. பழங்கள்,காய்களால் உடல் எடை கூடாது.

புதிதாக கொழுப்பு சேராமல் இருக்க என்ன செய்வது.காலை, மதிய  உணவில் பயறு / பருப்பு / கடலை , காய்கள் அதிகம் இருக்கும் படி பார்த்துக்  கொள்ள வேண்டும். இடைவேளைகளில் பசித்தால்     பழம், சுண்டல், சிறிதளவு காரம் போன்றவைகளை சாப்பிடலாம். விருந்துகளில் கட்டாயப்படுத்தினார்கள் என்றோ, ருசியாக இருந்தது என்றோ, வீணாகிவிடும் என்றோ எடையை அதிகரிக்கும் உணவுகளை அதிகமாக சாப்பிடக்கூடாது. உணவிற்கு சிறிது நேரத்திற்கு முன் தண்ணீர் அருந்தி விட்டு உண்ண வேண்டும். தவறான உணவுகள், பானங்கள் எதையும் வாங்கி வீட்டில் இருப்பில் வைக்கக்கூடாது. காலை உணவிற்குமுன் உடற்பயிற்சி செய்வதாலும் சேமிப்பிலிருக்கும் கொழுப்புகள் கரையும்.

நமக்கு இருக்கும் ஆரோக்கியத்தை நாம் தான் காத்துக்கொள்ள வேண்டும்.
நமக்கு இருக்கும் ஆரோக்கியத்தை நமது அலட்சியம் பாழ்படுத்த அனுமதிக்கக் கூடாது.

ஆரோக்கியத்தை இழந்துவிட்டால் அதனால் வரும் உணவுக்கட்டுப்பாடு, மாத்திரைகள்,மாத்திரைகளின் பக்க விளைவுகள், செலவுகள்,அலைச்சல்கள், மனச்சோர்வுகள் அனைத்தையும் எண்ணிப்பார்த்து உடல் எடையை கட்டுக்குள் கொண்டுவரவேண்டும்.