Friday 13 May 2016

          தேர்தல் நாள் மே 16,   2016  திங்கட்கிழமை                  

நம் நாடு அடைந்திருக்க வேண்டிய முக்கியாமான இலக்குகள்.

தேவைக்கேற்ப ஆறுகள், குளங்கள், அணைகள்.
தேவைக்கேற்ப மின் உற்பத்தி
கடல் பரப்பிற் கேற்ப துறைமுகங்கள்
காலி இடங்களிலெல்லாம் காடு வளர்ப்பு
சிறந்த தரமான ஒரேவித இலவசக் கல்வி
திறமையை வளர்க்கும் பாடத்திட்டங்கள்.
திறமையுள்ள அனைவருக்கும் வாய்ப்பு.
ஒழுக்கத்தை, மனிதநேயத்தை வளர்க்கும்  பயிற்சிகள்
நாடு முழுவதும் சுயதொழில் பயிற்சி நிறுவனங்கள்
சிறந்த தரமான இலவச மருத்துவம்
தரமான சாலைகள், கழிவுநீர் வடிகால்
கொசுவற்ற நகரம், கிராமம்
சிறப்பான பேருந்து, ரயில் போக்குவரத்து
 மக்கள் பெருக்கத்திற் கேற்ப தேவைகளை திட்டமிடுதல் 
அனைவருக்கும் வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் திட்டங்கள்


ஊழல் செய்யாமல் திட்டங்களை நிறைவேற்றுதல். 
லஞ்சமற்ற அரசு அனுமதிகள்
லஞ்சமற்ற அரசு அலுவலகங்கள்
லஞ்சமற்ற அரசு பணி நியமனம்,
லஞ்சமற்ற அரசு பணி இடமாற்றம்
கமிஷனற்ற அரசு ஒப்பந்ததாரார் வேலைகள்
மிக விரைவான விசாரணை, கடுமையான தண்டனை தரும் சட்டங்கள்.

யாருடைய தவறு 

நம்மில் 40 சதவீதத்தினர் தேர்தல் வந்தால் வாக்களிப்பதில்லை.

மேடைப் பேச்சை, தேர்தல் அறிக்கையை, இலவசங்களை, சினிமா பிரபலங்களை, ஜாதி-மத உணர்வுகளை, ஊடகங்களை  நம்பி, மனம்போன போக்கில் 60 சதவீதத்தினர் வாக்களிக்கின்றனர்.  

இதனால், ஊழல் செய்பவர்களும், மனசாட்சி இல்லாதவர்களும் ஆட்சிப்பொறுப்புக்கு வருகிறார்கள்.

பொறுப்புக்கு வருபவர்கள், ஊழல், லஞ்சம், கமிஷன், பினாமி என பலவழிகளில் மக்கள் பணத்தை கொள்ளையடித்துவிட்டு,  நாட்டை கடனாளியாக்கும் ஏமாற்றுக் காரர்களாக இருக்கிறார்கள்.  

நாம் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும். இருப்பதில் நல்லவர் யாரென்று விசாரித்து அவருக்கு வாக்களிக்க வேண்டும்.

நாம் அளிக்கும் வாக்கு நம் நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கிறது . நமது எதிர்காலமும், நமது பிள்ளைகளின் எதிர்காலமும், நமது பிள்ளையின் பிள்ளைகளின் எதிர்காலமும் நாம் அளிக்கும் வாக்கில் அடங்கி இருக்கிறது என்பதை நினைத்து அனைவரும் வாக்களிக்கவேண்டும். 

நாட்டின் இன்றைய நிலைமைக்கு நாம் அனைவரும் நல்லவர்களுக்கு வாக்களிக்காததுதான் காரணம்.

சிலர் வாக்களிக்காமல் இருந்து விடுவதுதான் காரணம். 

Friday 6 May 2016

                          செயலும் பலனும் 

ஆணவம் அலட்சியத்தை வெளிப்படுத்தும்
பணிவு கடமையை விரும்பும்
பொய் சாமர்த்தியமாய் பேசும்
உண்மை நிரபராதி ஆக்கும்
வெறுப்பு பாபம் செய்யும்
விருப்பு வரம்பைத் தாண்டும்,
தவறு குற்ற உணர்வை ஏற்படுத்தும்
சரி நிம்மதியைத் தரும்
ஏமாற்றுவது தரத்தை நிர்ணயிக்கும்
நோக்கம் ஒத்துழைப்பதில் தெரியும்
அநியாயம் பின்விளைவாகி திரும்பி வரும்
நியாயம் துணையாக கூட வரும்
ஆதிக்க மனம் கடவுளிடம் நடிக்கும்
பாதித்த மனம் கடவுளிடம் புலம்பும்


                                   காரணம்- பின்விளைவு 

 விருப்பு-வெறுப்பு
காரணம் பின்விளைவு இல்லாத செயலே கிடையாது.
காரணம் பின்விளைவை ஆராய்ந்துபார்ப்பது அறிவு
காரணத்தை ஆராய்ந்தால் பரிகாரம் தெரியும்
பின்விளைவை ஆராய்ந்தால் கட்டுப்பாடு தெரியும்
கட்டுப்பாட்டை ஆராய்ந்தால் எல்கை தெரியும்
எல்கையை ஆராய்ந்தால் செய்யத்தக்கது, செய்யத்தகாதது தெரியும்
செய்யத்தக்கதை செய்வது நியாயம் என்றாகும்
செய்யத்தகாததை செய்வது குற்றம் என்றாகும்
நியாயமாய் நடக்கும் போது பலன் தெரியாது
குற்றமாய் நடக்கும் போது தண்டனை தெரியாது
நியாயமாகவும், குற்றமாகவும் நடப்பது மனதிலுள்ள விருப்பு - வெறுப்பாகும்.
மனதிற்கு சரி-தவறு, நல்லது-கெட்டது, காரணம் - பின்விளைவு
செய்யலாமா- கூடாதா பற்றிய கவலை இல்லை
உடல் மனத்தின் வேலையாள்
உடல்  மூலம்  தனது விருப்பு, வெறுப்புகளை செய்து மனம் திருப்தி பட்டுக்கொள்கிறது.
அவரவர் மனதிலுள்ள விருப்பு,வெறுப்பு அவரவர் செயலாகிறது
ஒவ்வொரு செயலுக்கும் காரணம் பின்விளைவு உண்டு
-----------------------------------  ( மீண்டும் முதலிலிருந்து படிக்கவும் )

                                    =============================

----------------   மனம் பற்றிபெரியோர்கள் சொன்னவை ---------------------.

மனம் ஆசை, கவர்ச்சிகளை விரும்பும்.அதுவே துன்பங்களுக்கெல்லாம் காரணம் . ( புத்தர் )

மனம் உலக சுகங்களை பெரும் பாக்கியம் என்று நம்மை ஏமாற்றிக் கொண்டிருக்கும் ( அருணகிரிநாதர் )

மனம் பாராட்டுக்கு ஏங்கும், விமர்சனங்களுக்குப் பயப்படும். ( உதயமூர்த்தி )

மனம் மனிதாபிமானமாய் நடவாமல், கடவுளைத் தேடி அலையும்.
( கண்ணதாசன் )

மனத்தை ஆணவம், கர்மா, மாயை போன்றவை சூழ்ந்துகொள்ளும்
( சைவசித்தாந்தம் )

மனம் போன போக்கெல்லாம் போக வேண்டாம் ( உலக நீதி )

மனமது செம்மையானால் மந்திரங்கள் செம்மையாமே ( திருமூலர்)

செத்தாரைப்போல் திரிமனமே.( பட்டினத்தார் )

மனம் சரியான வழியில் செல்ல இறைவன் அருள் வேண்டும்
( இரமண மகரிஷி )

மனம் இயற்கைநியதிகளை மறந்து, நானே மேலானவன் என்று நடக்கும்
( கடுவெளி சித்தர் )

மனத்திலுள்ள அறம் உடல் நலத்தைப் பேணும் ( சைவ சித்தாந்தம் )

மனம் இருப்பதை எண்ணி மகிழாமல், இல்லாததை நினைத்து, நினைத்து ஏங்கும் ( பாரதியார் )

மனமிருந்தால் மார்க்கமுண்டு  ( பழமொழி )

மனமே நண்பன், மனமே எதிரி   ( பகவத் கீதை )

பிறர் மீது குற்றம் காணும் மனதைக்கொண்டு தன குற்றம் காணவேண்டும்.         ( திருவள்ளுவர் )

தியானம்

பழத்தில் சுவையை உணர்வது போல்
மலரில் மணத்தை உணர்வது போல்
தியானத்தில் ஒரு வகை அமைதியை  உணரலாம்
இறைவனென்ற உருவத்தைத் தேடாமல்
பேரமைதி உணர்வைத்தேடித்தருவது தியானம்
சுகபோக வாழ்க்கை தியானம் செய்ய விடாது
தியான வாழ்க்கை புதிய அனுபவத்தை உணரும்
சுகபோகம் வெளி உலகத்துக்கு மனத்தை அடிமையாக்கும்
தியானம் உள் உலகத்தை உணர வழிகாட்டும்
உள் உலகை உணர்ந்த மனம் பற்றற்று நிற்கும்
பற்றற்ற மனம் துன்பமற்ற மனம்
அதுவே ரிஷிகள், சித்தர்கள், ஞானிகள்
அதுவே அகத்தியர், திருமூலர், இரமணர்

என் விதி அளவை தீர்வு செய்யும் இறைவா
என் உடல் அளவை தீர்வு செய்யும் இறைவா
என் சூழல் அளவை தீர்வு செய்யும் இறைவா
என் மன அளவை தீர்வு செய்யும் இறைவா
என் செயல் அளவை தீர்வு செய்யாதது ஏன் இறைவா.
என் விருப்பு-வெறுப்பு படி செயல் பட விட்டாயே
பின் விளைவில் சிக்கி எம்மை புலம்ப வைத்தாயே.