Sunday 17 January 2016

மனப்பயிற்சி செய்வது எப்படி.

                                    மனப்பயிற்சி செய்வது எப்படி.

முதலில் மனதைப்பற்றி சிறு விளக்கம். எல்லோரும் மனம் என்பதை ஒப்புக் கொள் கிறோம். விஞ்ஞானம்  உடலை ஆராய்ந்து விளக்கும் அளவிற்கு மனம் என்பதை முழுமையாக ஆராய்ந்து விளக்க வில்லை. காரணம், உடல் ஸ்தூலமானது. மனம் சூட்ச்சமமானது. 

மனத்தைப்பற்றி விஞ்ஞானமும், மெய்ஞானமும் கொடுத்துள்ள சில விளக் கங்கள். மனம் என்பது நினைப்புகள். நினைப்புகள் இல்லையானால் மனம் என்பது  இல்லை. மனம் ஒரு வெள்ளைத் துணியைப் போன்றது. அதை எந்த நிற சாயத்தில்  நனைக்கிறோமோ அந்த நிறத்தை எடுத்துக்கொள்கிறது. மனம் ஒரு குரங்கை போன்றுத் தாவிக்கொண்டே இருக்கும். மனமது செம்மையானால் மந்திரங்கள் செபிக்க வேண்டாம். என்றெல்லாம் மெய்ஞானம் கூறுகிறது.

மனம் என்பது நாம் இதுவரை பார்த்தது, கேட்டது, அனுபவித்தது, ஆசைப் பட்டது  போன்ற அனைத்தின் சேமிப்பு. ஆரோக்கியமான உடலில் ஆரோக்கிய மான மனம் இருக்கும். மனம் மூளையின் முதலாளி. வேலையற்ற மனம் கேடுகளை எண்ணும்  என்றெல்லாம் விஞ்ஞானம்  கூறுகிறது.

பொதுவாக மனம் என்பது எப்பொழுதும் எதையாவது எண்ணிக்கொண்டே இருக்கக் கூடியது. ஏதாவது சில வார்த்தைகள் தான் எண்ணம் என்பது. அந்த சில வார்த்தைகள் எதைப்பற்றி இருக்கும். அவரவர் விருப்பு-வெறுப்பு, வெற்றி- தோல்வி,சுகம்-துக்கம் பற்றிய வார்த்தைகளாக எண்ணிக்கொண்டிருப்போம். 

எண்ணங்கள் பல வகை. அத்தியாவசிய மானதாகவும் இருக்கலாம், வெட்டியான தாகவும் இருக்கலாம். வெட்டியான எண்ணங்களை விரட்டி விடுவது அவ்வளவு சுலபம் அல்ல.

ஆனால் அதற்கு சித்தர்களும்,  ரிஷிகளும் பயிற்சி செய்தார்கள். விருப்பு- வெறுப்பு அற்ற சில வார்த்தைகளை தேர்ந்தெடுத்து ஒரு மனதாய், பிரக்ஜையுடன்    திரும்பத், திரும்ப சொல்லிக் கொண்டி ருந்தார்கள். வெற்றி கண்டார்கள்.

அஉம்(ஓ ம் ),
ஓம் நமசிவாய.
ஓம் நமோ நாராயணாய.
ஓம் கம் கணபதயே நமக.
ஓம் சத் சித் ஆனந்த பரபிரம்மா  
போன்ற அவரவருக்கு பிடித்தமான வார்த்தைகளை தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள்.  அதில் அவர்கள் வெற்றி யும் கண்டார்கள்.  

அதையே விஞ்ஞானம் REPETITION IS THE MASTER OF CHANGES  என்று சொல்கிறது. POSITIVE, AFFIRMATIVE வார்த்தைகளாக  ஆக சொல்லிக்கொண்டே இருங்கள் என்கிறது.

I AM AL RIGHT.
I AM RELAXED.
I FEEL HAPPY.
I FEEL HEALTHY,
I FEEL SUCCESS  
போன்று அவரவருக்கு வேண்டியதை, பிடித்ததை  சொல்லிக் கொண்டிருக்க சொல்கிறது விஞ்ஞானம்.

இதை நாம் அனைவரும் உள்வாங்கி சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

உடலுக்கு சரியான உணவு வேண்டும், மனதிற்கு சரியான எண்ணம் வேண்டும்.
உடல் சரியாக இயங்க உடற்பயிற்சி உதவுவதுப்போல், மனம் சரியாக இயங்க மனப்பயிற்சி உதவும்.

மனதிற்கு சரி-தவறு, உண்மை-பொய், செய்யலாமா-கூடாதா என்பது பற்றி யெல்லாம் கவலையில்லை. அவரவர் விருப்பம் எதுவோ அதை அதிக மாக விரும்பும். வெறுப்பு எதுவோ அதை அதிக மாக வெறுக்கும். ஆனால், அந்த, அந்த செயல் களுக்கான பின்விளைவுகள் ஏதோ ஒரு வகையில் எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத வழியில் முன் வந்து நிற்கின்றன. 

மனம் துள்ளி குதிப்பதற்கும், துவண்டு போவதற்கும், ஆவேசப்படுவதற்கும் வார்த்தைகள், நினைப்புக்கள் நேரடியாக காரணமாய் இருப்பதை காண்கிறோம். 

இங்கு சில வார்த்தைகள் கொடுக்கப் பட்டிருக்கின்றன. அவைகளுக்கு விளக்கமும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. எல்லாம் வல்ல இறைவனிடமே அந்த வார்த்தைகளை வேண்டுதலாய் கேட்கும் போது மனப்பயிற்சி சிறப்பாக அமைகிறது.

உண்மையென்று உணர்ந்த வார்த்தைகளை, தன்னைக் காப்பாற்றும் வார்த்தைகளை, தன்னைச் சரிப்படுத்தும் வார்த்தைகளை, தன்னைப் பயன் படுத்தும் வார்த்தைகளை பட்டியலிட்டு அவரவர் விருப்பம் போல் அமைத்துக்கொள்ளலாம். 

முக்கியமான வார்த்தைகளை ஒருமனதாய், பிரக்ஜை யுடன் திரும்பத்திரும்பச் சொல்லி ஆழ் மனதில் பதிய வைத்து விட்டால், எஞ்சியவற்றை மனதின் நுட்ப மான இயக்கம் கவனித்துக்கொள்ளும்.

1.நல்லெண்ணம்தா:-யாருக்கும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ துன்பம் நினையாத நல்வழியைத் தேடித் திரியும் மனம்.
2.நன்மைதா:-தன்னால் தன் வாழ்க்கைக்கு எந்த குறைவும் ஏற்படாமல்  நடக்கும் மனம்.
3,நியாயம்தா:-நிரபராதி யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என்று வாதிக்கும் மனம்.
4.நோக்கம்தா:-தன்னுடையத் தேவைகளுக்கு தன்னைத் தகுதி படுத்துவதில்  குறியாய் இருக்கும் மனம்.
5.ஆன்மீகம்தா:-தனது மனம், இயற்கை நியதிகள் பற்றி இயன்ற வரை ஆழமாக சிந்திக்கும் மனம்.
6.ஆரோக்கியம்தா:-சரியான உணவாலும், பயிற்சிகளாலும், மருத்துவ ஆலோசனையாலும் உடல் வலிமையைக்காப்பற்றிக்கொள்ளும் மனம்.
7.செல்வம்தா:-சிறுசேமிப்பு செய்து அதனை முதலீடாகவும், காப்பீடகவும் வளர்த்து பாதுகாப்பு பெறும் மனம்.
8.பரஸ்பரம் மரியாதைதா:-பரஸ்பரம் சகிப்புத்தன்மையாகவும், பயனாகவும்   பழகும் நானே மேலானவன் என்கிற நினைப்பற்ற மனம்.
9.எளிமைதா:-இயற்கைவளம், மற்றும் இயற்கையின் ஒழுங்கைக் கெடுக்கும் ஆடம் பரத்தை விரும்பாத மனம்.
10.கடமைதா:-சார்ந்திருப்பவர்களையும், சமுதாய சட்டங்களையும் ஏற்று நடக்கும் மனம்.
11.திட்டம்தா:-சம்பந்தப் பட்டவர்களிடம் ஆலோசித்து பணிகள், வழிகள்; தடை களை பட்டியலிடும் மனம்.
12.செயல்தா:-திட்டமிட்டப்படிசெயல்பட்டு, முன்னேற்றம் காணும் சளைக்காத மனம்.
13.பொறுப்புதா:-நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஒப்புக் கொண்ட வை களில்  நியாயமாய் நடக்கும் மனம்.
14.தகுதிதா:-உண்மை, நம்பிக்கை, நேர்மையை நினைத்து போலித்தனத் தைக் கைவிடும் மனம்.
15.கட்டுப்பாடுதா:-அளவு, வரம்பு அறிந்து பொறுமை, நியாயமான வழிகளில் எதையும் அணுக நினைக்கும் மனம்.
16.வலிமைதா:-செய்த தவறுகளுக்கு வருந்தி, மீண்டும் தவறு செய்யாதபடி நடக்கும் வலிமையை தேடும் மனம்.
17.அறம்தா :செய்யத்தக்கதை செய்து, தவறுக்கு வருந்தி, உணர்ந்தவர்களை
மன்னித்து,   அநியாயங் களை எதிற்கும் மனம்.
18.கருணைதா:- இயலாதவர்களின் தேவைகளுக்கு தன்னால் இயன்றதை செய்து காட்டும் மனம்.
19.சூழ்நிலைதா:- சரி-தவறு, சாதக-பாதக மான சூழ்நிலையில் உணர்ச்சி வயப் படும்போது எச்சரிக்கும் மனம்.
20. பின்விளைவில் பயம் தா:-பின்விளைவு களிலிருந்து தப்பிக்க முடியாது என்பதை கருதி, இயற்கையின் நியதிகளுக்கு பயந்து நடக்கும் மனம்.
21. பணிவுதா:-அடுத்தவர்கள் உரிமைக்கும்,  நியாயமாய் நடப்பவர்களுக்கும்,  நம் மீது அக்கறை உள்ளவர்களுக்கும் அடங்கிப்போகும் மனம்.
22. அருள்தா:-  கடவுளால்  ஆயிரம்  வழிகளில்  உதவ முடியும் என நம்பி
சரணடையும் மனம்.
23.திருப்திதா:​-ஆசைக்கு அளவே இல்லை.  வேண்டாம்,  போதும்,  என்கிற மனநிறைவோடு  நன்றி கூறும் மனம்.
24. நிம்மதிதா:- நாம் செய்த கடமை, நன்மை, நியாயமாய் நடந்தது போன்ற நல்ல நினைவுகளை எண்ணிசிறந்த புத்தகம், இசை, யோகா, தியானம், பிரார்த்தனை,  சேவை போன்ற  வை களில்   ஈடுபாடு கொள்ளும் மனம்.

உடற்பயிற்சியைப்போல் அல்லாமல் மனப்பயிற்சியை பிரயாணத்தின் போதும்,  பொது இடங்களிலும், காத்திருக்கும் போதும், ஓய்வின் போதும்  மனத்துள் சொல்லிக் கொண்டிருக்கலாம். தவறான எண்ணங்களையும், தவறான கற்பனைகளையும் தவிர்க்கலாம்.

ஒருவருடைய குணத்தையோ , பழக்க வழக்கத்தையோ அவ்வளவு எளிதாக மாற்றி விடமுடியாது. விடாமுயற்சி அதற்குரிய கூலியை பெற்றுத்தரும்.

                                    --------------------------------------------------















  

No comments:

Post a Comment