Wednesday 13 January 2016

வைட்டமின் & தாதுச்சத்துகள்

                                      வைட்டமின் & தாதுச்சத்துகள் 

உடலின் சீரான இயக்கத்திற்கு வைட்டமின் மற்றும் தாதுக்கள் மிக அவசியம். உண்ணும் உணவின் மூலம் வைட்டமின்களும், தாதுக்களும் உடலுக்கு கிடைக்கிறது.

மனித உடலில் 50 திற்கும் மேம்பட்ட தாதுக்களின் மூலகங்கள் காணப்படு கின்றன.

வைட்டமின்  A, B,  C,  D,  E  காய்,கனிகளில் இருக்கின்றன.

தாதுக்கள் செலினியம், கால்சியம், பொட்டாசியம்,  மெக்னீசியம், மாங்கனீஸ், துத்தநாகம், குரோமியம், செம்பு, அயோடின், இரும்பு  போன்றவை முழுத் தானியம்,  நட்ஸ்,சீட்ஸ், பால், கீரை, காய் களில் கிடைக்கின்றன.

என்ஸைம்கள் உணவின் பலவித மாற்றங்களுக்கு கிரியா ஊக்கியாக செயல்படுகிறது. இவைகளை உடல் தயாரித்துக்கொள்கிறது.

வைட்டமின்கள் கொழுப்பில் கரையக்கூடியது, தண்ணீரில் கரையக்கூடியது என இரண்டு வகையானது. A, D, E, K என்கிற வைட்டமின்கள், கொழுப்பில் கரையக்கூடியது.கொழுப்பில் கரையக்கூடிய இந்த வைட்டமின்களை உடல் சேமித்து வைத்துக்கொள்கிறது.

C, B Complex  போன்ற வைட்டமின்கள் தண்ணீரில் கரையக்கூடியவை. தண்ணீரில் கரைந்த வைட்டமின்களை குடல் உறிஞ்சிக்கொள்கிறது. இந்த வகை வைட்டமின்களை உடலால் சேமித்து வைக்க முடிவதில்லை. இவ்வகை வைட்டமின்களை தினசரி உணவிலிருந்தே உடல் பெற்றுக்கொள் கிறது.

வைட்டமின்களை தாவரங்களும், உயிரினங்களும் உற்பத்தி செய்து கொள் கின்றன.

Organic & Inorganic  தாதுக்களை மண்ணிலிருந்தும், தண்ணீரிலிருந்தும் தாவரங்கள் உறிஞ்சிக் கொள் கின்றன. உயிரினங்கள் அந்த தாவரங்களை உட்கொண்டு தாதுக்களை பெறுகின்றன,

கால்சியம் போன்ற சில தாதுக்கள் உடலுக்கு அதிக மாக த்தேவைப்படுகிறது. அவை உடல் வளர்ச்சிக்கும், நீடித்த ஆரோக்கியத்திற்கும் இன்றியமையாத வைகளாக இருக்கின்றன.

 குரோமியம், செம்பு, அயோடின், இரும்பு, செலீனியம்,  துத்தநாகம் போன்ற தாதுக்கள் மிக குறைவான அளவே தினசரித் தேவைப்படுகிறது. இவ்வகை தாதுக்களை Trace Minerals என்கிறார்கள்.

 வைட்டமின்களும் தாதுக்களும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. உடல் குணம் பெற வும, வளர்ச்சி யடையவும் துணை செய் கின்றன. திசுக்களும், அவையவங்களும் அதனதன் வேலைகளை செய்ய உதவுகின்றன.உடல் இயக்கத்தை ஒழுங்கு படுத்த உதவுகிறது. உதாரணமாக, காரட் உண்பது கண்களுக்கு நல்லது. பச்சை கீரை களிலிருக்கும் வைட்டமின் K இரத்த உறைவுக்கு உதவுகிறது. உடலுக்கு அதிகமாகத் தேவைப்படும் வைட்டமின் C பச்சை நிற கீரைகள், காய்கள், பால், தயிர் மூலம் உடலுக்குக் கிடைக்கிறது.

சூரிய ஒளியிலிருந்து உடல் வைட்டமின் D யை த்தயாரித்துக்கொள்கிறது. வைட்டமின் D உணவிலிருந்து கால்சிய  சத்தை உறிஞ்சுகிறது. உடலில் வைட்டமின் D இல்லை எனில் கால்சிய சத்தும் குறைந்து விடும்.

உணவுகளை அதிகமாக வறுப்பதாலும், கொதிக்க வைப்பதாலும், அதிலுள்ள வைட்டமின் ,தாதுக்கள் அழிந்துவிடுகின்றன.

அதிக அளவு காப்பி, டீ, கோக், கோலா, மது  போன்றவை வைட்டமின், தாதுக்களை உணவிலிருந்து உறுஞ்சு வதில்லை. அவை சிறுநீர் வழியே வெளியேறி விடுகின்றன.

மருத்துவர் கூறாமல் நல்லதுதானே என்று நாமே வைட்டமின், தாதுக்கள் மாத்திரைகளை  உண்ணக்கூடாது. சத்தே ஆனாலும் அளவிற்கு அதிக மாகும் போது ஆபத்தாகி விடுகிறது.

வைட்டமின் மாத்திரைகளை காப்பி, டீ  யுடன் உண்ணக்கூடாது.

 பிற மாத்திரைகளுடன் வைட்டமின் மாத்திரைகளை உண்ணக்கூடாது.

500 mg கால்சியம் மாத்திரையை ஒரே தடவையாக உண்ணக்கூடாது.
இரும்புச்சத்து (Iron) மாத்திரையை உணவுடன் சேர்த்து உண்ணக்கூடாது.உடலால் உறிஞ்சிக்கொள்ள முடியாது
சோடியம் (உப்பு ) இரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்கிறது.
அதிக அளவு கால்சியம், வைட்டமின் C போன்ற வை சிறுநீரகத்தில் கல்லாக சேருகிறது.

காப்பி பொட்டசிய சத்தை உறிஞ்ச விடாமல் தடுக்கிறது. பொட்டசிய சத்து இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. வாழைப்பழம், உருழை கிழங்கில் பொட்டசிய சத்து இருக்கிறது.

மெக்னீசியம் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. சோடா மெக்னீசியத்தை உறிஞ்ச விடாமல் தடுக்கிறது.

எல்லா காய் களையும்,பழங்களையும், முழுத்தானியங்களையும், கீரை களையும், நட்ஸ், சீட்ஸ் களையும் மாற்றி, மாற்றி உண்ணும் போது உடலுக்குத் தேவையான எல்லா சத்துக்களும் கிடைத்துவிடும். நட்ஸ்,சீட்ஸ் சிறந்த இடை வேளை உணவாகும். உப்பு, இனிப்பு, எண்ணெய் சேர்க்காமல் உண்பது சிறந்தது.

காலை உணவை தவிர்க்கக்கூடாது. காலை உணவில் காய், பழம், முழுத்தானியங்கள், பால்  அவசியம் இருக்கவேண்டும்.

                                            ------------------------------------------------



No comments:

Post a Comment