Monday 11 January 2016

கார்போஹைட்ரேட் சத்து

                                       கார்போஹைட்ரேட்  சத்து


தினசரி உண்ணும் உணவில் இருக்கும் கார்போஹைட்ரேட் சத்து உடலுக்கு அத்தியாவசியமான ஒன்று. இது உடல் இயக்கத்துக்கு வேண்டிய சக்தியை உற்பத்தி செய்யும் எரிபொருளாக இருக்கிறது. கார்போஹைட்ரேட் இரத்தத்தில் கலந்ததும் அங்கு வரும் இன்சுலினுடன் பயணிக்கிறது. செல் களில் ஆக்ஸிஜனுடன் சேர்ந்து சக்தியை உற்பத்தி செய்து திசுக்களுக்கு கொடுக்கிறது. இந்த சக்தியால் மொத்த உடலும் இயங்குகிறது.

கார்போஹைட்ரேட் உணவுகளை அளவோடு உண்ணும் போது உடல் ஆரோக்கியமாக இருக்கிறது. கார்போஹைட்ரேட் உணவுகளை மிக அதிக மாக  உண்பவர்களாக நாம் இருப்பதினால் உடலின் ஆரோக்கியம் பலருக்கும் பலவிதமாய் பாதிக்கப்படுகிறது.
 கார்போஹைட்ரேட் ஐ ஸ்டார்ச், சுகர், நார்ச்சத்து( starch, sugar, fibre ) என  மூன்று வகையாக பிரித்திருக்கிறார்கள்.
கார்போஹைட்ரேட் உணவை நல்லது, கெட்டது என இருவகைப படுத்தியிருக்கிறார்கள்.. நல்லதை கலவை கார்போஹைட்ரேட் ( complex carbohydrate) எனவும், கெட்டதை எளிமையான கார்போஹைட்ரேட் ( simple carbohydrate ) எனவும் கூறுகிறார்கள்.

சுகர்:-  இயற்கையாகவே பால்,பழம், காய் களில் இருக்கிறது.

ஸ்டார்ச் :- தானியங்கள், பீன்ஸ், கிழங்கு, கடலைகளில் காணப்படுகிறது.

நார்ச்சத்து :- பழங்களிலும், காய்களிலும், முழுத்தானியங்கள், பீன்ஸ், கடலைகளில் இயற்கையாகவே இருக்கிறது.

தவிடு நீக்கப்பட்ட வெள்ளை அரிசி, தோல் நீக்கப்பட்ட கோதுமை, கரும்புச் சாறை சுத்திகரித்து வரும் சீனி போன்ற உணவுகளில் பல சத்துக்கள் நீக்கப் பட்டு கார்போஹைட்ரேட் த்னிமையாக்கப்பட்டு விடுவதால் இவ்வகை உணவுகளை  (simple carbohydrate) எளிமையான கார்போஹைட்ரேட் என்கிறார்கள்.

தோலுடன் கூடிய முழுத்தானியங்கள், காய்கள்,கனிகள் போன்ற உணவுகளில் நார்ச்சத்து, வைட்டமின், தாதுக்கள் போன்றவைகளுடன் சேர்ந்து
கார்போஹைட்ரேட் இருப்பதினால் இவ்வகை உணவுகளை ( complex carbohydrate) கலவை கார்போஹைட்ரேட் என்கிறார்கள்.

எளிமையான கார்போஹைட்ரேட் உணவுகள் மிக எளிதாக ஜீரணமாகி, வேகமாக இரத்தத்தில் கலந்து இரத்தத்தில் சுகரை அதிகப்படுத்துகிறது.

கலவை கார்போஹைட்ரேட் உணவுகள் நார்ச்சத்துடன் இருப்பதால் ஜீரணம் மெதுவாக நடைபெறுகிறது. அதிலுள்ள சுகர் மெதுவாக, ஒரு சீராக இரத்தத்தில் சேருகிறது.

 கார்போஹைட் ரேட் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டியவை.

நாம் சாப்பிட்ட உணவு ஜீரணமாகி இரத்தத்திற்கு வந்ததும் அதிலுள்ள கார்போஹைட்ரேட்க்கு உடனடியாக இன்சுலின் தேவைப் படுகிறது. இரத்தத்தில் கார்போஹைட்ரேட் அதிகமாகும் போது இன்சுலினும் அதிகமாகத்  தேவைப் படுகிறது.

சீனியை கடையிலிருந்து குறைவாக வாங்கிவந்து காப்பி, டீ க்கு மட்டும் பயன் படுத்த வேண்டும். மேற்கொண்டு இனிப்பு களுக்கு வெல்லம், கருப்பட்டி, பனங்கற்கண்டு, தேன் போன்றவைகளை உபயோகிக்கலாம்.பாட்டில் பானங்களில் சீனி மிக அதிகமாக இருக்கும். முப்பது வயதிற்கு மேல் சீனி உண்பதை குறைக்கவேண்டும்.

வெள்ளை அரிசி, வெள்ளை பிரட்,  மைதா போன்ற தவிடு நீக்கிய உணவுகளை வீட்டில் உபயோகிப்பதை தவிர்க்கலாம்.

கார்போஹைட் ரேட் உணவை மூன்று நேரமும் அதிக மாக உட்கொள்ளும் போது அவை ஒன்று இரத்த சுகரை அதிகப் படுத்தும் அல்லது கொழுப்பாக மாறி உடல் எடையை அதிகரிக்கும்.

தோலுடன் கூடிய தானியங்களையும், காய்களையும், பழங்களையும் உண்ணும்போது கார்போஹைட்ரேட்டுடன் நார்ச்சத்தும் கிடைத்து விடும்.  . நார்ச்சத்து ஜீரணத்திற்கும், இரத்த சுகர், இரத்த கொலஸ் ட்ரால், அதிக உடல் எடை, மலச்சிக்கல், இருதய நோய் போன்றவை களுக்கும் பயனாக இருக்கும். தேவையான வைட்டமின்களும், தாதுக்களும் கிடைத்து விடும். 

குறைந்த கார்போஹைட் ரேட் உணவுகளால், உடல் எடை குறைகிறது.

எளிமையான கார்போஹைட்ரேட்  உணவுகள் ( Refined Products ) அதிக ருசியானவை. நாம் அவைகளை அதிகமாக விரும்பி அடிக்கடி சாப்பிடுகிறோம். அதனால் ஆரோக்கியத்தை இழக்கிறோம்.

கலவை கார்போஹைட் ரேட் உணவுகளும் ருசி உள்ளவை. நிறம், சிரமம் போன்ற வைகளால், நாம் குறைவாகவே விரும்புகிறோம். ஆனால், அதில் தான்  நம் ஆரோக்கியம் இருக்கிறது.

                                  --------------------------------------------------







  

No comments:

Post a Comment