Tuesday 12 January 2016

கொழுப்புச்சத்து.

                                                      கொழுப்புச்சத்து.

கொழுப்பின் ஒரு வகையை கொலஸ்ட்ரால்  என்கிறார்கள்.  இதற்கு சரியான பெயர் லிபிட்ஸ் ' Lipids' என்பதாகும். ஆனால் லிபிட்ஸ் என்கிற வார்த்தையை யாரும் பழக்கப்படுத்திக்கொள்ளவில்லை.

இது நீரில் கரையாத கொழுப்பு, எண்ணெய், மெழுகு போன்ற ஒரு பொருள். இரத்தத்தில் கொழுப்பு என்று நாம் பொதுவாக ச் சொல்வது இந்த லிபிட்சைத் தான்.

இரத்தத்தில் கொலஸ்ட்ரால் என்பது கெட்ட பொருள் அல்ல. ஆரோக்கிமாக வாழ உடலுக்கு கொலஸ்ட்ரால் தேவைப்படுகிறது. இரத்தத்தில் அதன் அளவு அதிக மாகும் போது உடலில் மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது.

கொலஸ்ட்ரால் வழ,வழப்பாக எண்ணெய் போன்று இரத்தத்தில் இருப்பதால் இரத்த ஓட்டம் எளிதாக நடைபெற உதவுகிறது. ஆண்பால், பெண்பால் ஹார்மோன் உற்பத்திக்கு கொழுப்பு அவசியப்படுகிறது. சூரிய ஒளி உடலில்ப்பட்டு தோல் வழியாக உள் சென்று கொலஸ்ட்ராலை வைட்டமின் D ஆக மாற்றுகிறது. நரம்பு நாளங்களுக்கு கவசமாய் இருக்கிறது. சிலவகை நோய்களை எதிர்க்கிறது.

 கொலஸ்ட்ராலை  குறைப்பதற்காக உண்ணும் மாத்திரைகள் பக்கவிளைவு உடையதாக இருக்கிறது.

உடலுக்கு கொலஸ்ட்ரால்இரண்டு வழிகளில் கிடைக்கிறது. கல்லீரல் மற்றும் உடல் திசுக்கள் 75 சதம் கொலஸ்ட்ராலை உற்பத்தி செய்கிறது.மிஞ்சியுள்ள கொலஸ்ட்ராலை உணவுகளிலிருந்து உடல் எடுத்துக்கொள்கிறது.

கொழுப்பில் பல வகை இருக்கிறது. எல்லா கொழுப்பும் ஒன்றல்ல. கரையும் கொழுப்பு, கரையாத கொழுப்பு, மாறிய  கொழுப்பு,ட்ரைகிளிசிரைட்ஸ் கொழுப்பு ( Un saturated Fat, Saturated Fat, Trans Fat, Triglycerides Fat ) என பல பிரிவாக இருக்கின்றன.

இதில் மாறிய கொழுப்பு என்பது மிக மோசமான கொழுப்பாகும். இது இதயத்தை வெகுவாகப் பாதிக்கிறது. இது இரத்தத்தில் LDL கொலஸ்ட்ராலை அதிகப்படுத்தி, HDL கொலஸ்ட்ராலை குறைத்து விடுகிறது.

கரையாத கொழுப்பு உணவுகள்   LDL & Triglyceride கொலஸ்ட்ராலை அதிகப்படுத்துகிறது

கரையும் கொழுப்பு உணவுகள்  இரத்தத்தை ஆரோக்கியமாக்குகிறது.

கரையாத கொழுப்பு மிருக வகை உணவுகளிலும், பால் வகை உணவுகளிலும், முட்டை மஞ்சள் பகுதியிலும் அதிக மாக இருக்கிறது.

மாறிய கொழுப்பு என்பது எண்ணெய்யை கொதிக்க வைக்கும் போது எண்ணெய் கெட்டித்தன்மையை பெறுகிறது.அந்த எண்ணெய்யை மாறிய கொழுப்பு என்கிறார்கள்.கொதிக்கிற எண்ணையில் செய்யப்படும் காரம், இனிப்பு, வறுத்த உணவுகள் அனைத்திலும் மாறிய கொழுப்பு இருக்கிறது.லாப நோக்கில் கடைகளில் அதே எண்ணெய்யை திரும்ப, திரும்ப சூடாக்கி செய்கிறார்கள். இது மிகவும் கெடுதலானது.

இனிப்பு, ஸடார்ச், மாறிய கொழுப்பு உணவு வகை களை அதிக மாக உண்ணும் போது இரத்தத்தில் கொலஸ் ட்ரா ல்  அதிகமாகிவிடுகிறது.

 கொழுப்புகள் இரத்தத்தில் அதிகமாகிப்போனால் LDL ஐ அதிகப்படுத்துகிறது. அதிகமான LDL இரத்தக்குழாய் களில்  படிந்து விடுகிறது. இதனால் இரத்தக்குழாய்கள் குறுக ஆரம்பிக்கிறது. இதனால் மிக மெல்லிய பகுதிகளுக்கு இரத்தம் போவதில் சிரமம் ஏற்படுகிறது. முக்கிய மாக மூளை, இருதயம் போன்ற பகுதிகளுக்கு  இரத்தம் போகாமல் தடை ஏற்படும் போது பக்கவாதம், இருதய நோய், மாரடைப்பு போன்றவை ஏற்படுகிறது.

கரையும் கொழுப்பில் பாலி, மோனோ, ஒமேகா 3-6-9  என பல வகை இருக்கிறது. இவை அனைத்துமே இதயத்தை ஆரோக்கியமாக வைத்து உடலின் பொது ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.

கொழுப்பு எதிரியல்ல. கொழுப்பு அளவுக்குள் இருக்கவேண்டும். எந்த கொழுப்பு உணவுகளை உண்ண வேண்டும், எந்த கொழுப்பு உணவுகளை நிராகரிக்க வேண்டும் என தெரிந்து உணவுகளை சாப்பிட்டுவந்தால் கொழுப்பு நண்பனாய் இருக்கும்.

உடலில் கொழுப்பு குறைந்து விட்டால் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.

கெட்ட கொழுப்பு வகையான கரையாத கொழுப்பு, மாறிய கொழுப்பு உணவுகள் உடல் எடையை அதிகரித்து, இரத்தக்குழாய்களில் படிந்து உயர் இரத்த அழுத்தம், இருதய நோய், சுகர் என தொடராக நோய்கள் ஏற்படுவதற்கு காரணமாகிறது.    

இரத்தத்தில் HDL குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். LDL அதிகமாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மாறிய கொழுப்பு வகை உணவுகள் இரத்தத்தில்   HDL ஐ  குறைத்து   LDL  ஐஅதிகப்படுத்திவிடும்.  உடற்பயிற்சி இரத்தத்தில்    HDL ஐ அதிகப்படுத்தி,    LDL ஐ குறைக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

கரையாத கொழுப்பு, மாறிய கொழுப்பு உணவுகளை உண்பதாலும், அதிக உடல் எடை, உடற்பயிற்சி இன்மை, முதுமை,சுகர்,சிலவகை மாத்திரைகள் போன்ற வைகளே கொலஸ்டிரால்  நோய்க்கு காரணம். உண்ணும் உணவினால் மட்டுமே LDL அதிகமாகிறது.

இரத்தத்திலுள்ள புரோட்டீனுடன் சேர்ந்து கொலஸ்ட்ரால்  பயணிப்பதால் இந்த  கொலஸ்ட்ரால் புரோட்டீனை லிப்போ புரோட்டீன் என்று அழைக் கிறார்கள்.லிபிட்ஸ், புரோட்டீன் அடர்த்தியை பொறுத்து  அதனை HDL ( High Density Lipo Protein ) என்றும் LDL  ( Low Density Lipo Protein ) என்றும் VLDL ( Very Low Density Lipo Protein) என்றும் பிரிக்கிறார்கள்.

ட்ரைகிளிசிரைட்ஸ் கொழுப்பு இரத்தத்தில் காணப்படும் ஒருவகை கொழுப்பு. அதை உடல் சக்தியாக பயன் படுத்துகிறது. அளவோடு இருப்பது ஆரோக்கியம். அதிகமானால் அதெற்கென மருத்துவம் பார்க்க வேண்டி வரும். அதிக உடல் எடை, அதிக மதுப் பழக்கம், கெட்ட கொழுப்பு உணவுகள், உடற்பயிற்சியின்மை, போன்ற வற்றால் இரத்தத்தில் ட்ரைகிளிசிரைட்ஸ் அதிகரிக்கிறது.

இரத்தப்பரிசோதனையில் கொழுப்பின் அளவுகள்.

மொத்த கொழுப்பு                 LDL                                HDL                                    TRI            
200 க்கு குறைவாக    100 க்கு குறைவாக      60 க்கு அதிகமாக    150 க்குகுறைவாக  நல்லது.                         நல்லது.                           நல்லது.                      நல்லது.
                                                                                                                                                              
200- 239    அதிகம்          100-129  அதிகம்             40-60  நல்லது.         150-199 அதிகம் 

     -                                      130-159  அதிகம்-1                    -                          200-499 அதிகம் -1 

     -                                      160-189  அதிகம்-2                  -                                          -      

மொத்த கொழுப்பும்,  HDL ம்  3.5: 1 முதல் 5:1 என்கிற விகிதத்துக்குள் இருப்பது ஆரோக்கியம் என்கிறார்கள்.

கரையும் கொழுப்பு உணவுகள் :- ஆழிவிதை, திராட்சை விதை, வால் நட்ஸ், வேர்க்கடலை, எள்ளு, பாதாம், பிஸ்தா, முந்திரி,  தேங்காய்,போன்ற பல் வேறு நட்ஸ், சீட்ஸ் முழுத்தானியங்கள் முதலியன. .

எண்ணெய் பயன் பாடுகள்:- எண்ணெயில் வறுத்த உணவுகள் ருசிமிக்க தாக இருக்கிறது. ஆனால் இந்த கொழுப்பு இரத்தத்தில் எளிதில்  கரையாது. இரத்தத்தில் அதிகமாக சேரும்போது ஆபத்தாகி விடுகிறது.

சமையலுக்கு பலவிதமான எண்ணெய்களை பயன் படுத்துகிறோம். காலா கால மாக பயன்படுத்திவரும் தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய்,கடலை எண்ணெய் சமையலுக்கு நல்லது. இன்னும் பல எண்ணெய்கள்  உள்ளன.
எந்த எண்ணெயாக இருந்தாலும் தொழில் நுட்பத்தால் சுத்திகரிக்கும் ( Refined Oil ) எண்ணெயை வாங்காமல், நாட்டு செக்கு முறையில் பிழியும் எண்ணெய்களாய் தேடிப் பிடித்து வாங்கி உபயோகிப்பது நல்லது. தேங்காய் எண்ணெய் ஊட்டச்சத்து மிக்கது.வெப்பம் தாங்கக் கூடியது. பொதுவாக் எண்ணெய்களை மாற்றி,மாற்றி பயன் படுத்துவது நல்லது.எந்த எண்ணெயாக இருந்தாலும் அதிகமாக் பயன் படுத்துவதை தவிர்ப்பது நல்லது.

கரையும் கொழுப்பு உணவுகளை நல்லது என்று  சாப்பிட்டு, கரையாத கொழுப்பு உணவையும் சேர்த்து சாப்பிட்டால் இரத்தத்தில் மொத்த கொழுப்பும் அதிக மாகி விடும்.

ருசியான உணவுகள் எல்லாம் ஆரோக்கியம் தரும் உணவுகள் அல்ல என்பதை நினைவிற் கொண்டு தவறான உணவுகளை நிராகரித்து விடுவது நல்லது.

                                -------------------------------------------












No comments:

Post a Comment