Friday 15 January 2016

தின் பண்டங்கள் (SNACKS))

                                        தின் பண்டங்கள் (SNACKS))


எண்ணெய்யில் செய்யப்படும் காரவகைகள், இனிப்புகள், மற்றும் பால் சேர்க்கப் பட்ட பிஸ்கட், கேக், குக்கீஸ் போன்ற வைகளில்  அதிக அளவு உப்பு, இனிப்பு, கொழுப்பு போன்றவை உள்ளன.

தின்பண்டங்கள் நல்ல ஆரோக்கியத்திற்கு கெடுதலான உணவுகள்.

தின்பண்டங்களை அதிக அளவில் வாங்கி வீட்டில் இருப்பில் வைத்திருப்ப தால் அடிக்கடி உண்ணக் காரணமாகிறது. சாப்பிட வேண்டுமென்று த்தோன்றி னால் மிகச்சிறிய அளவாய்  வாங்கி அங்கேயே சாப்பிட்டு விட்டு வருவது நல்லது.

வியாபாரம் அதிகம் நடைபெறவேண்டும் என்கிற நோக்கத்தில் ருசிக்காக உப்பு, இனிப்பு, கொழுப்பு போன்றவைகளை வியாபாரங்களில் அதிக மாகவே சேர்க்கிறார்கள்.

கடைகளில் சீனியில் செய்த இனிப்புத்தான் எளிதாக  கிடைக்கும். வெல்லத்தில் செய்த இனிப்பு கிடைப்பது அரிது.

நம் முன்னோர்கள் கருப்பட்டி, வெல்லம், தேன் போன்றவற்றில் இனிப்புகள் செய்து சாப்பிட்டார்கள். சுண்டல் போன்ற காரம் செய்து சாப்பிட்டார்கள். அந்த மாதிரி தின்பண்ட வகைகளை  இப்போதுள்ள நாகரீக உணவுகள் ஓரம் கட்டி விட்டன.    

உணவகங்களிலும், வீட்டிலும் வறுக்கப்பட்ட உணவுகளையே அதிகம் விரும்பிச் சாப்பிடுகிறோம். உணவகங்களில்  அதே எண்ணெயை திரும்பத், திரும்ப சூடாக்கி உணவு தயாரிக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

விசேஷ வீடு களில் சமையல்காரார் தனது சமையல் ருசியாக இருக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் தான் சமைப்பரே தவிர உடலுக்கு கெடுதல் பற்றி அவர் கவலைப் படமாட்டார். சீனி, டால்டா, பாமாயில், மில்க்மெய்டு எல்லாம் பயன் படுத்தி மலிவாகவும் ஆகவும், ருசியாகவும் உணவு வழங்குவார்.

சிறு குழந்தைகளை ஈர்க்கும் வகையில் ஐந்து ரூபாய்க்கும், பத்து ரூபாய்க்கும் பாக்கெட்டுகளில் பலவகையான நொறுக்குத் தீனிகள் கிடைக்கின்றன. இவை குழந்தை களின் ஆரோக்கியத்திற்கான  நல்ல உணவுகள் அல்ல. அவைகளை வீட்டில் வாங்கிவந்து உண்பது நாமே குழந்தைகள் பழகுவதற்கு காரணமாகி விடு கிறோம்.

மேலும் தின்பண்டங்கள் நெடுநாள் வரை கெட்டுப் போகாமலிருக்க எண்ணெய்களை 400 degree F மேல் சூடுபடுத்தி, அதில் ஹைட்ரஜன் என்னும் இரசாயனத்தை செலுத்தி அதை ஹைட்ரோஜிநேட் டட் ஆயில் என்று பெயரிட்டு அதில் தின் பண்டங்களை செய்து விற்கிறார்கள். இந்த பண்டங்கள் நெடுநாள் வரை கெட்டுப்போவதில்லை. இது மாறிய கொழுப்பு ( Trans Fat )  வகை உணவாகும்.

பொதுவாக நாம் உண்ணும் தின்பண்டங்கள் அனைத்தும்  மாறிய கொழுப்பான எண்ணையில் செய்த காரம்,உப்பு  மாக இருக்கிறது, அல்லது சீனியில் செய்ததாக இருக்கிறது.

தின்பண்டங்களின் தன்மை தெரிந்து அதை அளவோடு உண்ணவும், நிராகரிக்கவும் நமக்கு தெரிந்திருக்க வேண்டும்.

பொதுவாக எதை உண்ணவேண்டும் எதை உண்ணக் கூடாது என  உணவுகளின் தன்மையை  தெரிந்து உணவுப் பழக்கத்தை வீட்டு  சமையலில்  மேற்கொண்டால், உணவகம், விருந்து போன்று  வெளியில் உண்ண வேண்டி வரும்போது கிடைப்பதை ஓரளவு சாப்பிடலாம். அல்லது நோய்கள் நம்மை உணவுக்கட்டுப்பாட்டில் தள்ளிவிடும். இலையில் இருந்தாலும் ருசிபார்க்க முடியாமல் ஆகிவிடும். 

                                               ----------------------------------------













No comments:

Post a Comment