Thursday 14 January 2016

உப்பு ( SODIUM )

                                                         உப்பு  ( SODIUM  )

உப்பு உணவின் சுவையைக் கூட்டுகிறது. உணவுகள் கெட்டுப் போகாமல் இருப்பதற்கும் ருசியாக இருப்பதற்கும் உணவுகளில்  அதிக அளவு உப்பை சேர்க்கிறார்கள்.

கடல் நீரை நிலத்தில் தேக்கி அதிலுள்ள தண்ணீர் ஆவியாகும் போது, உப்பு படிந்துவிடுகிறது. இதை கல் உப்பு என்கிறோம். கல் உப்பில் சிறிதளவு மெக்னீசியம்,பொட்டசியம்,கால்சியம் போன்ற தாதுக்களும் உள்ளன.

சுரங்கங்களில் படிந்திருக்கும் உப்பில் டேபிள் சால்ட் தயாரிக்கப்படுகிறது. டேபிள் சால்ட் கட்டிப்பிடிக்காமல் இருக்க அடிட்டிவ் சேர்க்கப்படுகிறது.

இரண்டு வகை உப்பிலும் ஒரே அளவான சோடியம் இருக்கிறது. இப்பொழு தெல்லாம் உப்பில் அயோடின் சேர்க்கப் படுகிறது. அயோடினும் உப்பும் பலவகையான பழம், காய் களில் காணப்படுகிறது. ஆனால் இது உடலுக்கு போதுமானதாக இல்லை. இதனால் உப்புடன் அயோடின் சேர்த்து விற்கிறார் கள்.கடல் நீரிலிருந்து பிரித்தெடுக்கப்படும் உப்பு சிறந்ததாகும். 

தைராய்டு,மூளை, கர்ப்பம்,மனச்சோர்வு, உடல் சக்தி,உடல் எடை பராமரிப்பு, முடி,நகம், உலர்ந்த தோல், இதயத்துடிப்பையும், இரத்த அழுத்தத்தையும் ஒழுங்கு படுத்த, போன்ற பல விதமான செயல் பாட்டிற்கு அயோடின் தேவைப்படுகிறது.

பொதுவாக உப்பை குறைக்கவேண்டும். ஏனென்றால் நாம் உண்ணும் பெரும்பாலான உணவுகளில் உப்பு இருக்கிறது. பாதுகாக்கப்பட்ட( Preserved ) அனைத்து உணவுகளிலும், கோக் போன்ற குளிர்பானங்களிலும், உப்பு சேர்க்கப் படுகிறது.

அதிக உப்பு உடலிலிருக்கும் கால்சிய சத்தை வெளியேற்று கிறது. சோடா உப்பு உணவிலிருக்கும் மெக்னீசியம் சத்தை உடலுள் உறிஞ்ச விடாமல் தடுக்கிறது.

அதிகப்படியான் உப்பு ஜீரண உறுப்புக்களை பாதிக்கிறது. உயர் இரத்த அழுத்தம், பக்க வாத ஆபத்து, வாதக்கோளாறு, எலும்பு பலவீனம் போன்ற உபாதை களை ஏற்படுத்துகிறது. 

உப்பு உடலில் நீரைத்தேக்கவும், தசைகள் இயக்கத்திற்கும் முக்கியமானதாக இருக்கிறது.
உப்பு உடலில் திசுக்களின் உள்ளேயும், வெளியேயும் உள்ள அழுத்தத்தை சீராக வைத்திருக்கிறது.
உப்பு தண்ணீர் தாகத்தைக் கொடுத்து  தண்ணீரை குடிக்க வைக்கிறது. கால்சியம் போன்ற சில தாதுக்களை இரத்தத்தில் தங்கவைக்கிறது.உப்பு அதிகமாகும் போது  கால்சியத்தை வெளியேற்றி விடுகிறது.
சன் ஸ்ட்ரோக் , வெப்பத்தின் தாக்கம் இவைகளைத் தடுக்கிறது.
உறக்கத்தை ஒழுங்கு படுத்துகிறது. 
வாயில் உமிழ் நீர் சுரக்க பயன்படுகிறது.
உணவு ஜீரணத்திற்கும், சத்துக்களை உறிஞ்சுவதற்கும் பயன் படுகிறது. 
உப்பு உடலில் எலெக்ட்ரோ லைட் ஐ சம நிலையில் வைத்திருக்கிறது.
மனித இரத்தத்தில் 0.9 % உப்பு இருக்கிறது.
உப்பு அதிக மானால் உடலில் நீர் அதிக மாகும், இரத்த அழுத்தம் அதிகரிக்கும்.
உப்பு குறையும் போது உடலில் நீர் குறையும் , இரத்த அழுத்தமும் குறையும்.
பால், காரட், முள்ளங்கி, இனிப்பு கிழங்கு, காலி ப்ளோவர், முட்டை கோஸ் திராட்சை, தக்காளி, கீரை போன்றவைகளில் உப்பு இருக்கிறது. பால் உணவுகள், சாஸ், கெட்சப், ஊறுகாய், போன்ற பதப்படுத்தும் உணவுகளில் உப்பு அல்லது பாக்கிங் சோடா சேர்க்கிறார்கள்.
உப்பை உணவுகளில் குறைந்த அளவு சேர்த்தால் போதும்.
உடலில் உப்பு குறையும் போது பல பிரச்சினை களை ஏற்படுத்துகிறது. உடலில் உப்பு அதிகமாகும் போது ஆரோக்கியத்தைப் பாழாக்கு கிறது.  

                                               -----------------------------------

  

                 



No comments:

Post a Comment