Sunday 1 March 2015

விஷத்தன்மை எதிரி(Anti Oxidant)

                                             விஷத்தன்மை எதிரி 
                                      ( Anti Oxidant)

உடலில் பிராண வாயு வின் இரசாயன மாற்றத்தின் போது ஏற்படும் விஷத்தன்மை யை ஆக்சிடேஷன் (oxidation )எனவும் அதனால் பாதிக்கப்படும் திசுக்களை ( cells ) ஆக்சிடன்ட் ( oxidant )எனவும் கூறுகிறார்கள். விஷத்தன்மை
யால் பாதிப்பு ஏற்படாமல் உடலிலுள்ள ஆரோக்கியமான  திசுக்களை பாதுகாக்கும் பொருளுக்கு விஷத்தன்மை எதிரி (anti oxidant  ) என்று பெயர் .

இருபத்து நான்கு மணி நேரமும் உடலுள் திசுக்கள் இறப்பதும், பிறப்பதும் நடந்து கொண்டிருக்கும் ஒரு செயல்

இது உடல் ஆரோக்கியத்துக்காக இயற்கையாக  நடைபெறும் ஒரு செயல். இந்த இயக்கம் நடைபெறும் போது திசுக்களில் விஷத்தன்மை ஏற்படுவதும் ஒரு இயற்கை யான செயல். இந்த செயலால்   தானே நச்சுத்தன்மை அடையும் திசுக்கள் (free radical)பாதிக்கப்பட்ட திசுக்களாகும். இந்த நச்சுத் தன்மை  திசுக்கள் பிற நல்ல திசுக்களை கொன்று விடுகின்றன. இதனால் உடல் பலவீனப்படுகிறது. இது முதுமைக்கும், நோய்க்கும் காரணமாகிறது.உடலில்  எதிர்ப்பு சக்தி குறைந்து விடுகிறது.

 விஷத்தன்மை திசுக்களை அழித்து அப்புறப்படுத்தும் வேலையை அதற்கு எதிரான உணவுகளை உட்கொள்வது மூலம் உடல் சரி செய்து கொள்கிறது   உடலானது இறந்த  திசுக்களுக்கு பதில் புதிய திசுக்களை உற்பத்தி செய்து கொள்கிறது.   இயற்கை தன்மையால் ஏற்படும் நச்சுத் தன்மையை உடல்  அழித்துக் கொண்டிருக்கிறது.

வெளி மாசினால் ஏற்படும் நச்சுத்தன்மை திசுக்கள் அதிகரிக்கும் போது உடலால் அவைகளை  அழிக்க  முடியாமல் போவதால் நல்ல திசுக்கள் பாதிக்கப்படுகிறது. உதாரணமாக மூளை திசுக்கள் பாதிப்படையும் போது மூளையால் சரியாக இயங்க முடிவதில்லை. ஞாபகசக்தி குறைவு மகிழ்ச்சிக் குறைவு. எளிதில் மன அழுத்தம் ஏற்படுவது போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது.

மாசடைந்த காற்று மற்றும் தண்ணீர் ,புகைபிடித்தல் ,மது,காய்,கனி
களிலுள்ள பூச்சிமருந்துகள் உணவு பார்செலிலுள்ள  பிளாஸ்ட்டிக் ,இங்க் பெய்ன்ட், பாலிஷ், சோப், குளோரின், உணவிலுள்ள கலர்,  கதிர் வீச்சு  போன்றவை உடலுள் போகும் போது திசுக்கள்  நச்சுத்தன்மை அடைவது அதிகரிக்கிறது. இதனால் உடலில் குணப்படாத நோய்கள் ஏற்படுகின்றன. தற்கால விஞ்ஞான வாழ்க்கை சூழ்நிலையில் உடலுள் நச்சுத்தன்மை ஏற்பட நிறைய வழிகள் உள்ளன.

இப்போ தெல்லாம் தயார்  உணவு, துரித உணவு, புதிய வகை உணவு, சுத்திகரிக்கப் பட்ட உணவு, என்பன பிரபலமாகி விட்டன. வியாபார நோக்கில் தயாரிக்கப்படும் இவ்வகை உணவுகளில் பல வித மான இரசாயனங்கள் சேர்க்கப் படுகின்றன. இது பலபேருக்கு தெரிவ தில்லை. ருசியை மட்டுமே பார்த்து உண்கிறார்கள். அதனால் ஒவ்வருவருக்கும் ஒவ்வருவிதமான் ஆரோக்கிய குறைவு ஏற்படுகிறது.

அதேபோல் எலெக்ட்ரானிக் பொருள்களும், அதன் பயன் களும்  அதிகமாகி விட்டன. மொபைல் போன்,  மொபைல் டவர், டேப், லேப்டாப், கம்பியூட்டர்,என அனைத்து  எலெக்ட்ரானிக் பொருள்களும் கதிர் வீச்சை உமிழ்பவை.  நிறைய பேர்  இதை தெரிந்து பயன் படுத்துவதாக தெரிய வில்லை. குழந்தைகள் அதிக நேரம் பயன் படுத்து வதையும், பக்கத்தில் வைத்து  பார்ப்பதையும்  பெரியவர்கள்  தான் கட்டுப் படுத்த வேண்டும்.

விஷத்தன்மையை எதிர்க்கும் உணவுகளை ( ant oxidant foods   )அதிகம் உண்ணவேண்டும். அவை நச்சுத்தன்மை திசுக்கள் உருவானதும் அவைகளை  அழித்து விடுகின்றன.  வைட்டமின்  A E C      போன்றவை நச்சுத்தன்மைக்கு எதிராக செயல் பட்டு ஒரு ராணுவத்தை போல் உடலை காத்துவருகின்றன.     நச்சுத்தன்மைக்கு எதிரானஉணவுகள் நோய் மற்றும் முதுமையை தடுக்கிறது.வைட்டமின் A E C ஐ விஷத்தன்மை எதிரி(Anti Oxidant food) உணவு என்கிறார்கள்.

வைட்டமின் E  யையும்   C    யையும் சேர்த்து உண்ணவேண்டும்

மஞ்சள்,இஞ்சி,பூண்டு,கீரை,கிரீன் டீ ,முழுத்தானிய உணவுகள்,காய், கனி, நட்ஸ், வித்துகள் என இயற்கை உணவுகளை மாற்றி மாற்றி உண்ணவேண்டும்.

விஷத்தன்மை எதிரி உணவுகளை தினமும் உண்பதை நாம் உறுதிப்  படுத்திக் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment