Thursday 19 March 2015

இயற்கையின் நியதி -5 ( The Law of Remedy)

                                      இயற்கையின் நியதி - 5
                                                     ( The Law of Remedy)

தென் இந்தியாவில் ஒரு பிரபல தொழில் அதிபர். தொழில் மூலம் நிறைய வருமானம். மிகவும் கண்டிப்பானவர். பரிவு, மன்னிப்பு, இரக்கம் என்பது அவரிடம் கிடையாது. சிறு தவறு நடந்தால் கூட வேலையி லிருந்து நிறுத்திவிடுவார். வியாபாரம் மிகச்சிறப்பாக போய்க்கொண்டிருந்தது.

அவருக்கு இரண்டு மகள்கள். மகள் களுக்கு திருமணம் செய்து வைத்தார். மிகக்குறுகிய காலத்தில் இரண்டு மகள்களும் விதவையாகி விட்டார்கள்.

வேதனையில் துடித்தார் .தூக்கம் இழந்தார்.சாப்பாடு பிடிக்கவில்லை. தன்னுடைய மனக்கஷ்டத்திர்க்குரிய காரணங்களை ஆராய்ந்தார். சுயவிசாரணை செய்தார்.இதுதான் காரணமாக இருக்குமோ என சில சம்பவங்கள் அவரை உறுத்தியது.இதற்கு என்ன செய்வது என்று யோசித்தார்.

தான் தொழில் நடத்தி வந்த இடத்தில் கல்வி, மருத்துவம்,உணவகம்,என அமைத்து மிக குறைந்த விலையில் மிக உயர்ந்த தரத்தில் பொதுமக்களுக்கு வழங்கி அவர்கள் மகிழ்ச்சியாய் வந்து,போவதை பார்த்து திருப்தி படுகிறார்.

தென் தமிழ் நாட்டில் இரண்டு நண்பர்கள். ஒருவர் ஒரு சொத்து ஒன்று வாங்கு கிறார். சில காரணங்களுக்காக அதை தன்  நண்பர் பெயரில் பதிவு செய்து, நண்பரிடம் எனக்கு தேவைப்படும்போது இந்த சொத்தை என் பெயரில் பதிவு செய்து கொடு என்கிறார். நண்பரும் சரி என்கிறார்.

காலம் கடந்தது.ஒரு நாள் சொத்தை தன பெயரில் பதிவு செய்யவேண்டும் என்று கேட்கிறார். நண்பர் முடியாது என மறுத்து விடுகிறார்.

சொத்தை தர மறுத்தவருக்கு இரண்டு மகன்கள.இருவருக்கும் திருமணமாகி மனைவி குழந்தைகள் இருக்கிறார்கள்.

சில வருடங்களில் சொத்தை தர மறுத்தவரும்,சொத்தை வாங்கியவரும் இறந்து விடுகிறார்கள்.சொத்தை தர மறுத்தவரின் இரண்டு மகன்களும் ஒருவர் பின் ஒருவராக இளம் வயதில் சாலை விபத்தில் இறந்து விடுகிறார்கள்.

சொத்தை தரமறுத்தவரின் பேரப்பிள்ளைகள் நிம்மதி இழந்து சோகத்தில் ஆழ்ந்தார்கள்.யாரோ ஒருவர் குழந்தை களிடம் மேற்கண்ட விபரத்தை கூறி நட ந்த அகால மரணங்களுக்கு  அதுவாக கூட காரணமாயிருக்கலாம் என தங்கள்  மனதில் தோன்றியதை சொன்னார்கள்..

அது மாதிரி சொத்து நமக்கு வேண்டாம் என்று குழந்தைகள் முடிவெடுத்து, சொத்தின் உரிமையாளரின் வாரிசுக்கு அதை திருப்பி கொடுத்து விட்டார்கள்.

மேற் படி நடந்த இரண்டு நிகழ்ச்சிகளைப்போல் பலரும் பல நிகழ்ச்சிகளை கூறுவார்கள்.வெளியில் இருந்து பார்க்கும் போது தெளிவாக  தெரிவது நமக்கு நடக்கும்போது நமக்கு தெரிவதில்லை. நாம் ஏதாவது காரணங்களை கூறி நமக்கு நடப்பதை  நியாயப்படுத்திக் கொள்கிறோம். எல்லா தவறு களுக்கும் பரிகாரம் உண்டு.

நமது வாழ்க்கையிலும், மகிழ்ச்சியிலும் அக்கறை உடையவர்கள் நம்முடைய தவறுகளை எடுத்துச் சொல்லும் போது அதை புரிந்து கொண்டு நம்மை நாம் மாற்றிக்கொள்ள முயற்சிக்க வேண்டும். நாம் வருந்தி திருந்த நினைக்கும் போது The Law of Remedy  நமக்கு உதவ முன்வரும். 

மனம் வருந்தி உண்மையை உண்மையாகவே தேடும் போது பரிகாரம் என்ன என்பது தெரியவரும்.அவரவருக்கு அவரவரே தேடிப்பார்த்துக் கொள்ள வேண்டும். அடுத்தவர் சொன்னால் யாரும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.

நடந்த தவறை பிறர் கூறியோ, அல்லது தானாக புரிந்தோ, ஒருவர் உணர்ந்து, வருந்தும் போது அவர் நோகும் படியாக நேரடியாகவோ, பிறரிடம் கூறியோ, பரிகாசம், இளக்காரம் பேசுவதால், அப்படிப்  பேசுபவருக்கு குற்றம் சேருகிறது.  
எல்லா செயல்களும்  காரணம்-காரியம்-பின்விளைவு-பரிகாரம் என்னும் சட்டத்துக்குட்ப்பட்டது.

                                     ----------------------------------------------------



                    
  

No comments:

Post a Comment