Tuesday 3 March 2015

உணவுகள் இயற்கை த்தன்மை இழக்கும் விதம்

       உணவுகள் இயற்கை த்தன்மை இழக்கும் விதம் 

பொதுவாக உணவுப்பொருட்கள் சுற்றுப்புறத்தை உறுஞ்சி தன்னை மாற்றிக் கொள்ளும் தன்மை உடையது. ஈரப்பதம், வெளிச்சம், வெப்பம், காற்று (Oxidation) அதைக்கொன்டிருக்கும் பாத்திரம் ( அலுமினியம்,இரும்பு,பித்தளை, காகிதம், பிளாஸ்டிக், வாழைஇலை, மண்சட்டி ) போன்ற வற்றால் உணவின் தன்மை கெட்டுப்போகவோ, நன்றாக இருக்கவோ செய்கின்றன.

முழுதாக இருக்கும் விதைகள், தானியங்கள் விரைவில் கெட்டுப்போவதில்லை.


அதையே பொடி பண்ணும் போது ஈரப்பதம், வெளிச்சம், வெப்பம், காற்று, பாத்திரம் போன்ற வற்றால்   விரைவாக கெட்டு விடுகிறது.

தானியங்களின் தோலை நீக்கவும், சுத்தப்படுத்தவும், தீட்டவும்,மாவாக்கவும், ஜலிக்கவும கடந்த 150 வருடங்களில் பல்வேறு இயந்திரங்கள் கண்டு பிடிக்கப் பட்டு உபயோகத்தில் இருக்கின்றன.

தானியங் களின் தோலில் தான் அதிக சத்துக்கள் இருக்கின்றன. தானியங்களை மாவாக்கி ஜலிக்கும் போது அதன் தோல், முளை போன்றவைகள் அகற்றப் படுகின்றன. அதனால் பல சத்துக்கள் இழந்து போகின்றன. உணவு தானியங்களை குறைவாக சுத்திகரிக்கப்படும் போது, ஆரோக்கியம் நிறைவாக இருக்கிறது.

சுத்திகரிப்பால் வைட்டமின்  B   குடும்பம் முழுவதும் பிரிந்துபோய் விடுகிறது.அதனால் நரம்பு மண்டலத்துக்கு கிடைக்கவேண்டிய சத்துக்கள் கிடைப்பதில்லை.

மன அழுத்தம் அதிகமாகும் போது மூளையும் ,நரம்பு மண்டலமும் ஈடுகொடுக்க வைட்டமின்  B  சத்துக்கள் தேவைப்படுகின்றன.தொடர்ந்து சுத்திகரிக்கப்பட்ட உணவுகளையே அதிகம் உண்ணும்போது தனக்கு கிடைக்க வேண்டிய சத்துக்கள் கிடைக்காமல் உடல் நோய்வாய்ப் படுகிறது.

முக்கியமாக  உணவுகளிலுள்ள வைட்டமின் A  E  C         (ஆன்றி ஆக்சிடன்ட் ) நார்ச்சத்து, செலினியம், துத்தநாகம், போன்றவை அழிந்து போகின்றன. கரும்புச் சாறு தனது குரோமியம், மெக்னீசியம், கோபால்ட், செம்பு, துத்தநாகம், மாங்கனீஸ் போன்றவைகளை  இழந்து வெள்ளை நிற சீனீ யாகி விடுகிறது.

முழுத்தானியம் தன்னிடம் உள்ள கால்சியம், பாஸ்பரஸ், பொட்டசியம், சோடியம்,  இரும்பு, மாலிபீடினம், செலினியம் போன்ற வற்றை இழந்து வெள்ளை நிற மாவாகிறது. சிகப்பு நிற கைகுத்தல் அரிசியே ஆரோக்கியமான உணவு.  தவிடு,முளை போன்ற வற்றை நீக்கி வெறும் ஸ்டார்ச்சை மட்டும் உண்பதால் கணையத்தின் பளு அதிக மாகிறது.இது இரத்தத்தில்  சுகர்  அதிகமாக காரணமாகிறது.

உணவின்  நிறம், மணம், சுவையை கூட்டவும் வாழ்நாளை நீட்டிக்கவும் பலவதமான இரசாயனங்களை  அடிட்டிவ்ஸ் (additives) என பெயரிட்டு அவைகளை உணவில் சேர்க்கிறார்கள். இவை உணவிலுள்ள நன்மை செய்யும் கிருமிகளுக்கு எதிரியாகிவிடுகின்றன.இவை மனிதனுக்கு நன்மை செய்வதில்லை மாறாக கெடுதலையே செய்கின்றன. .இயன்றவரை பாதுகாக்கப்பட்ட உணவுகளையும், அடிட்டிவ்ஸ் சேர்க்கப்பட்ட உணவு களையும் தவிர்த்து விடவேண்டும்.முழுத்தானிய உணவு களையும், உள்ளூர் காய்,கனி,கீரை,சீட்ஸ்,நட்ஸ் உணவுகளையும் விரும்பிச் சாப்பிட வேண்டும்.

தானியங்கள், எண்ணெய் போன்ற உணவுகளை சுத்திகரிக்கும் செயல்முறையின் போது ஏற்படும் வைட்டமின், தாது சத்துக்களின் இழப்புக்களை திரும்பவும் இரசாயன முறையில் உணவுப் பொருட் களுடன் சேர்க்கிறார்கள். ஆனால் அதுமாதிரியான சத்துக்களை உடலானது ஏற்றுக் கொள்வதோ,பயன்படுத்திக்கொள்வதோ இல்லை.                 .

உணவு களை அதிகம் சூடாக்கும் போதும், ஹை ட்ரோஜினெஷன் செய்யும் போதும் உணவு தன் இயற்கை தன்மையை இழந்து விடுகிறது.அதிக வெப்பம் காரணமாக எண்ணெய், தானியங்கள், போன்றவைகள் தன்னிடம் இருக்கும் வைட்டமின், தாது சத்துகள், ஒமேகா 3, 6, போன்ற வற்றை இழந்து விடுகின்றன.சாக்லேட்,சீனி போன்றவை உடலுக்கு அதிக கலோரியை கொடுக்கிறது. சூட்டினால் தரமான எண்ணைகள் மாறிய கொழுப்பாக மாறி (Trans fat )உடலில் கெட்ட கொழுப்பை அதிகப்படுத்து கின்றன.

 பழங்களின் மீது குறிப்பிட்ட அளவு காமா கதிர் களை (Gamma rays ) செலுத்து கிறார்கள்.அந்த கதிர்கள்  கிருமிகளையும்.பூச்சிகளியும்,புழுக்களையும், வைட்டமின்களையும்  அழித்து புள்ளிகள் பரவாமலும் தடுத்து விடுகிறன இதனால் பழங்கள் மேலும் கனிவதும் ,முளை யிடுவதும் போன்ற இயற்கை செயல்கள் தடுக்கப்படுகின்றன.பழங்கள் நீண்ட நாட்கள் வரை கெடாமல் இருக்கின்றன.வியாபார நோக்கத்தில் இது செய்யப்படுகிறது.

 பழங்களின் தோலில் சுருக்கம் ஏற்படாமல் நீண்டநாள் வழவ்ழப்பாக இருக்க மெழுகை பூசுகிறார்கள் இதனால் பழங்கள் கவர்ச்சியாக இருக்கின்றன. ஆனால் அது உடல்நலத்துக்கு நல்லதல்ல

பழங்கள் தானாக பழுக்கும் வரை பொறுத்திருக்காமல் காய் பருவத்திலேயே அறுவடை செய்து அதனுடன் கார்பைடு கற்களைப் போட்டு வைத்து விடுகிறார்கள்.அதனால் பச்சைத்தோல் களில்  இரசாயன மாற்றம் ஏற்பட்டு பச்சை நிறமானது பழுத்த நிறத்திற்கு மாறிவிடுகின்றன.இதனை தெரியாதவர்கள் பழம் என்று வாங்குகிறார்கள்.ஆனால் அந்த பழங்கள் பழுத்த பழங்களுக்குரிய ருசி யாகவும் இருப்பதில்லை,உடலுக்கும் உபாதை யாகி விடுகிறது.உதாரணம்  மாம்பழங்கள்.

 உணவு பொருட்களை மிக எளிதாகவும், துரிதமாகவும்  சூடு பண்ணுவதற்கு மைக்ரோ ஓவன் பயன்படுத்துகிறோம்.  மைக்ரோ ஓவன்.தத்துவம்  கதர் வீச்சு மூலம் உணவுகளை  சூடுபண்ணுவது. எனவே . மைக்ரோ ஓவன் பயன் படுத்துகிறவர்கள் அதன் பயன் பாட்டை தவிர்ப்பது அல்லது குறைத்துக் கொள்வது நல்லது.


தற்காலத்தில் பிளாஸ்டிக்கின் உபயோகம் வந்த பிறகு உணவுகளை பாக்கிங் செய்ய பெரும்பாலும் பிளாஸ்டிக் கையே பயன்படுத்துகிறார்கள். உணவுகளை பரிமாறுவதற்கும் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறது. பிளாஸ்டிக்கின் மூலப்பொருள் பெட்ரோலியத்தயாரிப் பில் கிடைக்கும் பாலிமர் ( POLYMER ) என்னும்  ஒரு பொருளுடன் பல இரசாயனங்களை சேர்த்து பலவகை பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இதில் LDPE என்னும் பிளாஸ்டிக் உணவுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இதன் உருகும் நிலை 104 டிகிரி  ஆகும். அனைத்து பேப்பர் கப்பினுள்ளும் LDPE லைனிங்  இருக்கும். உற்பத்தியாளர்கள் மூலப்பொருட்களின் தரத்தைப் பற்றியும் சேர்க்கவேண்டிய கலவை விகிதத்தை பற்றியும் கவைப்படுவதில்லை. தரமில்லாத பிளாஸ்டிக்கை  உபயோகப்படுத்தும் போது அவை உணவுடன் சேர்ந்து உடலுள் செல்கின்றன.

விவசாய விஞ்ஞானிகள் பயிர்களின் மரபணுக்களில் மாற்றங்கள் செய்து விளைச்சலை அதிகப்படுத்தலாம் என்று மரபணு மாற்றம் செய்த உணவுகளை உற்பத்திசெய்கிறார்கள். இவ்வகை உணவுப்பொருட்கள் மனிதனுக்கும், விலங்குகளுக்கும் பலவித ஆரோக்கிய குறைவுகளை ஏற்படுத்துகிறது.

முழுத்தானிய மிக்ஸ், நட்ஸ் &சீட்ஸ் மிக்ஸ், உள்ளூர் காய், கனி, கீரை, மூலிகை போன்ற மற்றும் அவைகளை கொண்டு வீட்டில் செய்து உண்ணும் உணவுகளுக்கு ஈடு இணையாக  உடலுக்கு நலம் தரும் உணவுகள் வேறு எதுவும் இல்லை.

வியாபார நோக்கில் வெளியில் கிடைக்கும் தயார் உணவுகளும்,செய்து தரும் உணவுகளும் உடல் நலத்துக்கு உகந்தது அல்ல.

                                ------------------------------------------------

No comments:

Post a Comment