Saturday 14 March 2015

நார்ச்சத்தும் ஆரோக்கியமும்

                                 நார்ச்சத்தும் ஆரோக்கியமும்   

நாம் உண்ணும் தாவர உணவுகளில் இயற்கையாகவே நார்ச்சத்துக்கள் இருக்கின்றன. நார்ச்சத்துக்கள் தாவரங்களின் ஒரு பாகம். அவைகளை நாம் உண்ணும் போது நமது ஜீரணத்தில் அவைகள் உடைவதில்லை. அவைகள் ஜீரணிக்காமலே உணவுப்பாதையை கடந்து வெளியேறுகின்றன.

எல்லா நார்ச்சத்து உணவுகளும் இரண்டு வகையாக இருக்கிறது.ஒன்று நீரில் கரைவது ( soluble ).இரண்டாவது நீரில்கரையாதது.( insoluble ).நம் உடலில் ஜீரணம் ஆரோக்கியமாக நடைபெறுவதற்கு இரண்டு வித நார்ச்சத்துக்களும் அவசியமாகிறது.

இவை இருதய நோய் ,சுகர் ,அதிக உடல் எடை,மலச்சிக்கல் போன்ற வற்றை தடுக்கிறது.

நீரில் கரையும் நார்ச்சத்து வயிற்றில் தண்ணீரை உறிஞ்சி ஒரு ஜெல்  ( jel ) போன்று ஆகி ஜீரணத்தை தாமதப்படுத்துகிறது. வயிறு காலியாவதை தாமதப்படுத்துவதால் நாம் நீண்ட நேரம் பசி ஏற்படாமல் இருக்கிறோம். இதனால் உடல் எடை குறைகிறது.மேலும்  இரத்தத்தில்  சுகர் குறைந்து இன்சுலின் தேவை குறைகிறது.இது டியாபெட்டிஸ் நோயை கட்டுப்படுத்த உதவுகிறது.மற்றும் உணவிலுள்ள கொழுப்பை உறிஞ்ச விடாமல் தடுத்து ரத்தத்தில் கொலஸ்டிராலை குறைக்கிறது.

தோல் அல்லது தவிடுடன் கூடிய ஓட்ஸ்,பயறுகள் மற்றும் தோலுடன் கூடிய ஆப்பிள், நட்ஸ், ஆழிவிதை, வெள்ளரி,கேரட்,போன்ற வற்றில் நார்ச்சத்து காணப்படுகிறது.

நீரில் கரையாத நார்ச்சத்துக்களை குடல் ஆரோக்கிய நார்ச்சத்து என்கிறார்கள். இவை குடலில் கழிவுகளை தங்க விடாமல் வெளியேற்றுகிறது.மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள உதவுகிறது.இவை நீரில் கரை வதில்லை. குடலில் உணவுகள் தேங்காமல் பார்த்துக் கொள்கிறது.குடலில் தேங்கும் கழிவுகளை விரைவாக வெளியே தள்ளுகிறது. நீரில் கரையும் நார்ச்சத்து ஜீரணமாகாததால், உணவிலுள்ள கொழுப்புச் சத்துக்கள் நார் துகள்களின் மீது ஒட்டிக் கொண்டு வெளியேறி விடுகிறது.இதனால் ரத்தத்தில் கெட்டக் கொழுப்பு ( LDL  ) குறைகிறது.

நார்ச்சத்து குடலில் ஆரோக்கியமான பாக்டீரியாக்களை உற்பத்தி செய்கிறது. குடலில் கோடிக்கணக்கான நன்மை செய்யும் பாக்டீரியாக்கள்  உள்ளன.  
அதிக அளவு ஆரோக்கியத்திற்கு இரண்டு வகை நார்ச்சத்துக் களையும் உண்ண வேண்டும்

அதிகமான நார்ச்சத்து வாயு,குடற்சுளுக்கு போன்ற தொல்லைகளை ஏற்படுத்தும் உணவில் நார்ச்சத்தை படிப்படியாய் கூட்டவேண்டும் .அல்லது வாயு,பேதி போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.
பழம் ,காய்,முழுத்தானியங்களில் தோலை வீணாக்காமல் இருந்தாலே தேவையான நார்ச்சத்து கிடைத்து விடும்.
                                           ----------------------------------

No comments:

Post a Comment