Sunday 15 March 2015

வளர்சிதைமாற்றம் (Metabolism)

                                  வளர்சிதைமாற்றம் (Metabolism)

உயிருள்ள ஜீவனின் உள்ளே நடக்கும் இரசாயன மாற்றங்களை வளர்சிதைமாற்றம் என்கிறார்கள்.ஆகாரத்தை உட்கொண்டு சக்தியை வெளிப்படுத்துவது ஜீவனினால் ஏற்படும் வளர்சிதைமாற்றமாகும் .குறிப்பாக சொல்வதென்றால் செல்கள் உணவை சக்தியாக உற்பத்தி செய்வதை வளர்சிதைமாற்றம் எனலாம்.

உயிருள்ள  ஒரு ஜீவனின் உடலில் மூன்று வித செயல்கள் நடைபெறுகிறது. உயிருள்ள ஜீவனின் உடலில் பராமரிப்பும்( Maintenance),உடலைச் சரிப் படுத்தலும் ( Repair ),உடலை வளர்ச்சிப்படுத்தலும்( Growth )   இந்த வளர்சிதை மாற்றத்தால் நடை பெற்றுக் கொண்டி ருக்கிறது.

செல்கள் என்பது நுண்ணுயிர் தன்மையானது  எல்லா ஜீவன்களும் ( Organism ) செல்களின் கூட்டாகும்.பாக்டீரியா என்பது ஒரு செல் ஜீவன்.

செல்கள் உணவை எடுத்துக்கொண்டு அதை சக்தியாக கொடுக்கும் வளர்சிதை மாற்றத்தைச் செய்கிறது. ஒரு செல்லுக்குள் நடக்கும் வளர்சிதை மாற்றத்தை செல் வளர்சிதை மாற்றம் என்கிறார்கள்.ஒவ்வொருசெல்லும் ஒரு ஜீவனாகும். ஒவ்வொரு வகையான செல்லும் அதற்கென்று உரிய வேலையை செய்கிறது. பலவகையான செல்கள் பலவகையான வேலைகளை செய்கிறது. மூளைசெல், நாக்கிலுள்ளசெல், இரத்தத்திலுள்ளசெல், தோல்செல், கல்லீரல்செல், என பல கோடிக்கணக்கான செல்கள் உடலில் காணப்படுகிறது

.இறந்த செல்களை இரத்தத்திலுள்ள வெள்ளை அணுக்கள் உடலிலிருந்து வெளியேற்றும் வேலையை செய்கிறது.

வளர்சிதைமாற்றம் சத்து சம்பந்தப்பட்டது. சத்து வளர்சிதையின் சாவி. உடலுக்கு தேவையான சக்திகிடைக்க சத்துக்கள் இருக்கவேண்டும். அது இல்லாதபோது உடலில் ஆரோக்கியம் குறைகிறது.

உணவில் கார்பன், ஹைட்ரஜன், நைட்ரஜன், ஆக்சிஜன், பாஸ்பரஸ், சல்பர் போன்ற கிட்ட தட்ட இருபது தனிமங்கள் தேவைப்படுகின்றன.

உடலுக்கு அதிகமாகத்தேவைப்படுவது கார்போஹைட்ரேட் ,கொழுப்பு ,புரதம், வைட்டமின், தாதுக்கள்,தண்ணீர், ஆக்சிஜன்,  இவைகளுடன் சேர்த்து உடலில் உற்பத்தியாகும் என்ஸைம்கள் (கிரியா ஊக்கி  )போன்றவை ஆகும். இதில் கார்போஹைட்ரேட் என்பது நார்ச்சத்துடன் கூடிய சுகர் மற்றும் ஸ்டார்ச் ஆகும்.
நாம் உண்ணும் உணவின் தரத்தை ப் பொறுத்து புதிய செல்கள் உருவாகின்றன .உண்ணும் உணவு தரமில்லாதபோது பலவீனமான அல்லது ஒத்துழைக்காத செல்கள் உற்பத்தியாவதால் பலவிதமான ஆரோக்கிய குறைவுகள்  ஏற்படுகின்றன.
                                              ----------------------------------------

No comments:

Post a Comment