Tuesday 17 March 2015

நீரேற்றம் (HYDRATION)

                                               நீரேற்றம்   (HYDRATION)

உடல் தண்ணீரை பயன் படுத்திக் கொள்ளும் திறனை நீரேற்றம் ( hydration  ) எனலாம். உடலில் ஓவ்வொரு செல்லின் இயக்கத்திலும்  தண்ணீரின் பங்கு இருக்கிறது. தண்ணீரை  குடிப்பதோடு மட்டுமல்ல, அதை உடலிலுள்ள செல்கள் எவ்வாறு பயன் படுத்திக்கொள்கின்றன என்பது நீரேற்றத்தின்
 ( hydration  ) உயர்ந்த நிலை.ஒவ்வொரு செல்லும் தனக்கு வரும்  உணவை தன இயல்பான குணமாக மாற்றி, கழிவுகளையும், நச்சுக்களையும் வெளியேற்ற தண்ணீர் உதவியாக இருப்பதும்  நீரேற்ற த் ( hydration )திற்கு உட்பட்டது

உடலில் சரியாக நீரேற்றம் நடக்காதபோது செல்களில் கழிவுகள் வெளியேற்றப் படாமல் நச்சுக்கள் தேங்கி அதிக மாகி விடுகின்றன நீரேற்றம் ஆரோக்கியமான உடலுக்கு மிக முக்கியமான ஒரு இயக்கம்.தண்ணீருக்கு உடல் இயக்கத்தில் பல பங்குகள் இருக்கின்றன.

உடலில்,செல் மற்றும் திசுக்கள் அமைய அதன் வடிவம் அமைய தண்ணீருக்கு முக்கிய பங்கு உண்டு. தண்ணீர் உடலின் உட்பாகங்களில் ஏற்படும் வெப்பங்களை கடத்தி உடலின் மேற்பரப்பிற்கு கொண்டு வந்து வெளியேற்றுகிறது.செல் களின் வளர் சிதைக்காக நடக்கும் இராசாயன மாற்றங்களில் தண்ணீர் பெரும் பங்கு வகிக்கிறது.சத்துக்கள் உடல் முழுவதும் சென்றடைய தண்ணீர் உதவுகிறது.செல்களுக்கு உணவினை கொடுத்து,கழிவுகளை அப்புறப்படுத்த தண்ணீர் உதவுகிறது.உடலின் இயக்கத்திற்கு தண்ணீர் மிக முக்கியமான சத்துள்ள உணவாகும்.

ஏனைய உணவுகளான கார்போஹைட்ரேட்,புரோட்டீன், கொழுப்புகள், வைட்டமின், தாதுக்கள், அனைத்தும் உடலில் சத்தாக மாற போதுமான அளவு தண்ணீரின் இருப்பை பொறுத்தே நடைபெறுகிறது.

 உணவு ஜீரணத்திற்கு நேரடியாக தண்ணீர் தேவையில்லை.ஆனால் உணவை  ஜீரணிக்கும் அமிலங்கள், என்ஸைம்கள் போன்ற திரவங்கள் மூலம் தண்ணீர் தேவைப்படுகிறது.அவைகளில் தண்ணீர் நிறைய இருக்கிறது.உடலில் நீரேற்றம் சிறப்பாக இருக்கும் போது ஜீரணம் நன்றாக நடைபெறுகிறது. ஜீரணமான உணவுக்குழம்புகள் தண்ணீருடன் இரத்தத்தில் உறிஞ்சப்படுகிறது.

இரத்தத்துடன் உள்ள தண்ணீர் செல்களுக்கும் ,உடலின் மின்சக்தி செயல் களுக்கும், உடல் எதிர்ப்பு சக்தி பெறவும், ஹார்மோன் உற்பத்திக்கும், பயன்படுகிறது.

உடலில் ஆங்காங்கே யுள்ள கழிவுகளை குடல்,சிறுநீரகம், தோல்,நுரையீரல் வழியாக வெளியேற்ற தண்ணீர் உதவுகிறது.இந்த செயல்களெல்லாம் உடலில் சரியாக நடைபெற நீரேற்றம் ஒழுங்காக இருக்கவேண்டும்.

தண்ணீர் இரத்தத்துடன் சேர்ந்து செல்கள் இயக்கத்துக்கு உதவியாய் இருப்பதை நீரேற்றம் எனவும் தண்ணீர் பற்றாக்குறையால் அந்த வேலைகள் நடைபெற முடியாமல் இருப்பதை நீரேற்றமின்மை( de-hydration )எனவும் கூறலாம்.

 நீறேற்றமின்மை ஏற்படும்போது செல்களுக்கு உணவுகிடைக் காமலும், செல்களிலிருந்து கழிவுகள் அகற்றப்படாமலும் ஆகி உடல் ஆரோக்கியம் கெடுகிறது.

 காய்ச்சல்,வாந்தி,பேதி,மதுவினால் அதிகம் சிறுநீர் வெளியேறுவது,போன்ற வற்றால் உடலில் நீரேற்றமின்மை(de-hydration) ஏற்பட காரணமாகிறது.

ஒவ்வொரு உணவு இடைவேளையிலும் தாகம் இல்லாதபோதும் தினசரி 2 முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும்

கடையில் விற்கும் பாட்டில்  பழரசங்களை,குளிர் பானங்களை தவிர்க்க வேண்டும்.  அவற்றில்  சத்துக்கள் எதுவும் கிடையாது,மாறாக அதிக இனிப்பு,அதிக உப்பு, பழரசங்களின் வாழ்நாளை கூட்டும் இரசாயனங்கள் போன்ற வை கள் சேர்க்கப் பட்டிருக்கும்

                                   ---------------------------------------------------------
   

No comments:

Post a Comment