Friday 2 October 2015

சூரியனும் உடல்நலமும்

                                        சூரியனும் உடல்நலமும் 

சூரிய ஒளி மாசுபடாத,கொழுப்பற்ற , இனிப்பற்ற ஒரு உணவு எனலாம். 

சூரியனிலிருந்து வரும் அல்ட்ரா வைலெட் B ( UVB ) கதிர்கள் உடலின் தோலிலிருக்கும கொழுப்புடன் சேரும்போது வைட்டமின்  D உற்பத்தியா கிறது.

உணவிலுள்ள கால்சியம் சத்தை உறிஞ்ச உடலில் அதற்கேற்ப வைட்டமின் D சத்து இருக்க வேண்டும்.

உடலுக்கு உணவிலிருந்து கிடைக்கும் வைட்டமின் D சத்தை விட , சூரியனிலிருந்து வரும் அல்ட்ரா வைலெட் B கதிர்களிலிருந்து கிடைக்கும் வைட்டமின் D சத்தே அதிக மானதும், முதன்மை யானதும் ஆகும்.

உடலில் வைட்டமின் D யை தேவைக்கு அதிக மாக சூரியனிலிருந்து எடுத்துக் கொள்ளாமல் நிறுத்திக்கொள்ளும் திறன் இயற்கை யாகவே உடலுக்கு இருக்கிறது.

கண்ணாடிவழியாக வரும் சூரிய வெளிச்சத்திலிருந்து உடலால் வைட்டமின்  D யை தயாரித்துக்கொள்ள முடியாது.கண்ணாடியில் UVB கதிர்கள் ஊடுருவி வராது. சூரிய ஒளியில் சிறிது நேரம் இருப்பது நல்ல உறக்கத்தையும் , உடல் பொலிவையும் தரும்.

கண்ணுக்கு கண்ணாடி அணியாமல் சூரிய ஒளியில் இருக்கும் போது  கண்ணுக்குள்ளேயும் புகுந்து நன்மை செய்கிறது.

சூரிய ஒளியில் நடமாடாதவர்களுக்கு வைட்டமின் D சத்திலும், கால்சிய சத்திலும் குறைவு ஏற்படலாம்.

மீன், முட்டை, பால்,  ஓட்ஸ், இனிப்பு கிழங்கு போன்ற உணவுகளிலும் வைட்டமின் D இருக்கிறது.

இயற்கையில் சீதோஷ்ணம் ஒரு சீரான சுழற்சியில் இருந்து வந்தது. இது உயிரினங்களின் வாழ்க்கைக்கு மிக சாதக மாக இருந்தது. காலப்போக்கில் காற்றை குளிர்ச்சிபடுத்தவும், சுத்தப்படுத்தவும் செய்து வந்த வனங்கள் அழிக்கப்பட்டன. மறுபுறம் பெருகிவரும் தொழிற்சாலைகள், வாகனங்கள், மின்சாதனங்களி லிருந்து வெளியேறும் வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போவதால் பூமி வெப்ப மய மாதல் கட்டுப் படுத்தமுடியாமல் போய்க் கொண்டிருக்கிறது. காடுகள் அழிக்கப்பட்டு வருவதாலும், விஞ்ஞான வளர்ச்சி அதிகரித்துக்கொண்டே போவதாலும் பூமியின் வெப்பம் அதிகரித்துக்கொண்டே போகிறது.

பூமியில் இதுவரை பனிக்கட்டியாகவே இருந்த நிலங்கள் உருக ஆரம் பித்திருக்கிறது.

கடல்நீர் மட்டம் உயர்வு, புயல், கடல் நீர் நிலத்துள் புகுதல் போன்ற நிகழ்வுகள் ஏற்படும்.

மழைக்காலம் என்பது ஒழுங்கற்றது ஆகிவிடும்.
வெப்பமான சூழ்நிலை பலவித ஒவ்வாமை நோய் கள்  ஏற்பட காரணமாகும்.
வெப்பமான நிலைமை கெடுதல் பாக்டீரியாக்கள் உற்பத்தியாக ஏதுவாகும்.
வெப்பமான சுற்றுப்புறம் எரிச்சலையும், வெறுப்பையும் தரும்.
வெப்பக்காற்றினால் நோய், மரணம் ஏற்படும்.
வறட்சி, வெள்ளம், சூறைக்காற்று என்பது சாதாரணமாகி விடும்.

சூரிய ஒளி  ஆரோக்கியத்திற்கு பயன்படுவதை அறிந்திருக்க வேண்டும்.

                                    ---------------------------------------------




















No comments:

Post a Comment