Sunday 18 October 2015

நிலமும் உடல் நலமும்

                                         நிலமும்  உடல் நலமும் 

ஆரோக்கியம் அனைத்து உயிரினங்களின் பிறப்புரிமையாகும். இந்த சட்டம் மண்ணிற்கும், தாவரங்களுக்கும், மிருகங்களுக்கும் மனிதனுக்கும் பொருந்தும். இந்த நான்கின் ஆரோக்கியமும் ஒரு சங்கிலித்தொடர் போன்றது. இந்தத்தொடரில் ஏதாவது ஒன்று பலவீனமடையவோ, பாதிப்படையவோ, செய்தால் அது அடுத்தத் தொடரை பாதித்து கடைசி தொடரான மனிதனையும் பாதிக்கிறது.  

தாவரங்களுக்கு மனிதன் இடும் இரசாயன உரங்களாலும், பூச்சிக்கொல்லி விஷங்களாலும், மண் வளம் பாதிக்கப்படுகிறது. தாவரங்களும் பாதிக்கப்படுகின்றன. அந்த தாவரங்களைத் தின்னும் எல்லா உயிரினங்களும் பாதிக்கப்படுகின்றன. அந்த உயிரினங்களையும் தாவர உணவுகளையும் உண்ணும் மனிதனும் பாதிக்கப்படுகிறான்,

இதனைச் சரிப்படுத்தாமல் மனிதனின் சுகாதாரம், மருத்துவ கண்டுபிடிப்புகள் எதுவும் உயிரினங்களையும் மண்வளத்தையும் காப்பாற்றப்போவதில்லை. 

மண்வள  பாதுகாப்பு மனிதனின் ஆரோக்கியத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

நம் உணவின் உயர்ந்த தரம் அந்த உணவு பயிராகும் சத்து நிறைந்த மண் வளத்தை பொறுத்தே அமைகிறது.

மண்ணிலுள்ள பல நுண்ணிய உயிரினங்கள் மண்ணில் சத்துக்கள் ஏற்படவும் தாவரங்கள் முளைக்கவும். செழித்து வளரவும் உதவுகின்றன. இயற்கை உரங்கள் மண் ஆரோக்கியத்தைக்காத்து அதில் வளரும் தாவரங்களை ஆரோக்கியப்படுத்தி அதை உண்டு வாழும் மற்ற உயிரினங்களையும் மனிதனையும் காப்பாற்றுகிறது.

மண் நீரையும், சத்துக்களையும் சேர்த்துவைத்துக்கொளகிறது. மண் என்பது அழுக்கு அல்ல. இயக்க மற்றதுமல்ல 

மண் ஆரோக்கியத்திற்கு பாதுகாப்பு கிடைக்காதவரை மனிதனுக்கும், மனிதன் உண்ணும் உயிரினங்களுக்கும் சத்தான உணவிற்கும் பாதுகாப்பு இல்லை.

மண் இயற்கையிலுள்ள பல நிறங்களை உறிஞ்சி தாவரங்களுக்கு நிறத்தைத்தருகிறது. இந்த நிறங்களுக்கு பல்வேறு நல்ல குணங்கள் உள்ளன.

மனிதன் இயற்கையின் நியதிகளை புரிந்து, விவசாயத்தைப் பேணி வந்தால் அதுவே நமது ஆரோக்கியத்திற்கும் நமது குழந்தைகள் மற்றும் அவர்களது குழந்தைகள் ஆரோக்கியத்திற்கும் வழிவகுக்கும்.

காலுக்கு காலணிகள் பழக்கத்திற்கு வந்த பிறகு மனிதனுக்கும் பூமிக்கும் இடையே யான நேரடித் தொடர்பு நின்று விட்டது.

வெறுங்காலில் நடக்கும் போது நல்ல மண்ணில் இருக்கும் சிரட்டோனின் பாக்டீரியா ( Seratonin Bacterium ) என்னும் நுண்ணுயிர் மனிதனுக்கு நன்மை செய்கிறது. 

காலணிகள் இல்லாமல் வெறும் காலில் மண், மணல், புல், தரையில் நடப்பதால் உடலில் அன்றி ஆக்சிடன்ட்( Anti Oxidant ) ஐ அதிகரிக்கச்செய்கிறது. தூக்கத்தை ச்சிறப்பாக்கு கிறது. உடலில் ஏற்படும் வீக்கங்களை குறைக்கிறது. மூளையின் மின் செயல் அதிகரிப்பதை எலக்ட்ரோன்ஸ் பேலோகிரம்(Electroence Phalograms) என்னும் சோதனை மூலம் அறியலாம். இரத்த சிகப்பு அணுக்களில் ஏற்படும் மாற்றம் இரத்தத்தின் திடத்தை குறைக்கிறது. அதிக திடமான ( High Viscosity ) இரத்தம் இதய நோய்க்கு காரணமாகிறது. பூமியின் நேரடித் தொடர்பு கிடைப்பதால் பூமியின் சக்தி உடலுக்கு கிடைக்கிறது. வெறும் காலால் நல்ல மண்ணில் நடந்து உயர்ந்த பலன்களை அனுபவிக்கலாம்.

உயர்ந்த மண் வகைகளை உடலில் பூசிக் கொள்ளும் போது மண் உடலிலுள்ள நச்சுத் தன்மைகளை உறிஞ்சிக்கொள்கிறது. உடலில் கடினமான தோலின் தன்மையை மிருதுவாக்கி இரத்த ஓட்டத்தை அதிகரிக்க ச்செய்கிறது. இதனால் முடி, தசை, மூட்டுகள் நல்ல ஆரோக்கியம் பெறுகின்றன.   

மண் வளம்  ஆரோக்கியத்திற்கு பயன்படுவதை அறிந்திருக்க வேண்டும்.

                                                ------------------------------------------------

No comments:

Post a Comment