Saturday 15 August 2015

நாலடி விளக்கம்



 
                                           நாலடி விளக்கம் 

கடவுள் விஞ்ஞானத்திற்கு அப்பாற்பட்டது  
எங்கும் நிறைந்தது  (omni present )
எல்லாம் தெரிந்தது  (omni scent)
எல்லா சக்தியும் உடையது (omni potent)
எப்போதும் விழித்திருக்கும்(omni awakent)
கடவுள் 
கடவுள் என்பது முயற்சி செய்வது 
கடவுள் என்பது நியாயமாய் நடப்பது
கடவுள் என்பது பயனாய் இருப்பது
கடவுள் என்பது பிரார்த்தனையில் ஈடுபடுவது
கடவுளின் தன்மை-1
கடவுள் பாரபட்ச மற்றவர்
கடவுள் அருள் அனைவருக்கும் சொந்தம்
கடவுளால் ஆயிரம் வழிகளில் உதவ முடியும்
கடவுளால் அதிசயங்களை நிகழ்த்த முடியும்.
கடவுளின் தன்மை-2 
புலன்களுக்கு அப்பால் இருக்கிறான்
சிந்தனைக்கு அருகில் வருகிறான்
இன்பத்தில் தேவையற்று இருக்கிறான்
துன்பத்தில் தாகமாய் வருகிறான்  
திருமூலரின் கடவுள் விளக்கம் 
மர  யானையை பார்த்தேன், அதில் மரம்தெரியவில்லை.
மரத்தை நினைத்தேன், அதில் யானை தெரியவில்லை.
உலகப்பொருட்களைப்  பார்த்தேன், அதில் பரம்பொருள்  தெரியவில்லை.
பரம்பொருளை நினைத்தேன், அதில்  உலகப்பொருட்கள் தெரியவில்லை.
பிரார்த்தனை-1 
பிரார்த்தனை வேண்டுதலுக்கு சக்தி யூட்டு கிறது.
பிரார்த்தனை கடவுளின் கவனத்தை ஈர்க்கிறது
பிரார்த்தனை புறச்சூழல்களை மாற்றுகிறது
பிரார்த்தனை மனதை அமைதிப்படுத்து கிறது.
பிரார்த்தனை -2
நல்லெண்ணங்களை எண்ணவையுங்கள்
நல்லதை சொல்லவையுங்கள்
நல்லதை தீர்மானிக்கும் தெளிவைத்தாருங்கள்
நல்லதை செய்யும்படி நிர்ப்பந்தப்படுத்துங்கள்.
பிரார்த்தனை-3
பொறாமை பழிக்குப்பழி எண்ணாமலும்
கெடுதல் துன்பம் நினையாமலும்
பசி, எதிர்பார்ப்பு இல்லாமலும்
உரிமை, நியதியை மதிக்க வையுங்கள்.
பிரார்த்தனை -4
சுயநலம் பின்விளைவுகளைக் கொண்டது
சுயநலத்தை தடுத்து நிறுத்துங்கள்
நியாயம் தக்க சமயத்தில் உதவக்கூடியது
நியாயத்திற்கு பணிய வையுங்கள்.
ஆன்மீகம்-1 
வழிபாடு விரதம் மட்டும் ஆன்மீகமல்ல
ஆடம்பரம் ஆச்சாரம் ஆன்மீகத்தின் உயர்வு அல்ல
ஒருவருக்கொருவர் உண்மை-நன்மையாய் வாழ்ந்து
உரிமை-நியாயங்களை மதித்து நடப்பதே ஆன்மீகம்
ஆன்மீகம்-2
கட்டுப்பாட்டை நினைத்திரு
நியாயமாய் நடந்திடு
தியானத்தில் நீடித்திரு
பிரார்த்தனையே நிம்மதி.
இயற்கையின் நியதி 
ஒன்றை இழக்க நேர்ந்தால் வேறொன்று வரும். ஒன்றுடன் சேர நேர்ந்தால் மற்றொன்று விலகும்
(The Law of compensation)
 நன்மை செய்தவர்களுக்கு நன்மை செய்யத் தவறக் கூடாது..
(The Law of Reciprocation)
காரணம்-காரியம்-பின்விளைவை உணர்ந்தால் பரிகாரம் பயன்தரும்
(The Law of Remedy)
குணத்தில் வித்தியாசம் இயற்கை.குறிக்கோளில் ஒத்துழைப்பு வேண்டும்..
(The Law Of Harmony) 
மனிதனின் தேவைகள்
பயனாகவும், பாதுகாப்பாகவும் வாழ அறிவு தேவை
உழைக்கவும், உற்சாகமாகவும் வாழ ஆரோக்கியம் தேவை
சேமித்தும், உதவியும் சிறப்பாய் வாழ தொழில் தேவை
பரஸ்பரம் அக்கறை, அனுசரணை யுடன் வாழ உறவுகள் தேவை.
மனத்தின் தன்மை 
மனம் அதன் நம்பிக்கையின் படி செயல்படும்
மனம் நான், என்னுடைய என்று உணர்ச்சி வயப்பட்டு நிற்கும்
மனம் வலி, அவமானம், தண்டனைக்கு பயப்படும்
மனம் பாராட்டுக்கு ஏங்கும். சதா பிறரை மதிப்பீடு செய்யும்.
மனத்தின் குணம்  
நியாயத்தைப் பற்றி கவலைப் படாமல் சுயநலத்தில் பிடிவாதமாய் இருக்கும்
நியதிகளின் வலிமையை மறந்து நானேமேலானவன் என்று நடக்கும்
சரி-தவறு பற்றி கவலைப் படாமல் நடைமுறை தவறி சாமர்த்தியம் பேசும்
பின்விளைவுகளை அலட்சியப்படுத்தி விருப்பு-வெறுப்பாய் நடக்கும்.
மனநிலை-1 
இன்றைய சூழ்நிலை யாவும் பொய்
நல்ல குறிக்கோளுடன் இருப்பதே தாக்குதல் இல்லாத நிகழ்காலம்
இன்றைய உணர்ச்சிகள் யாவும் பொய்
நியாயமாய் நடப்பதே நெருக்கடி இல்லாத எதிர்காலம்
மனநிலை-2 
இன்றைய பசியும் ருசியும் பொய்
சரியான உணவும் பயிற்சியும் உடல்நலம் காக்கும்
இன்றைய சொகுசும் பாராட்டும் பொய்
சிக்கனமும் சேமிப்பும் ஆபத்துக்கு உதவும்
மனநிலை-3 
விருப்பு-வெறுப்பு-சமநிலையில் நியாயம் வேண்டும்
யூகம்-கேள்விப்படுவது-ஒப்பிடுவதை விசாரித்து நம்ப வேண்டும்
எளிமை-நேர்மை-மனிதாபிமானம் செயலாக வேண்டும்
ஆரோக்கியம்-செல்வம்-பரஸ்பரம் மரியாதை குறிக்கோளாக வேண்டும்
எண்ணங்கள்-1
எண்ணங்கள் சக்திவாய்ந்தது
எண்ணங்கள் பொருட்களை உண்டுபண்ணக்கூடியது
எண்ணங்கள் காத்திருந்து சந்தர்ப்பங்களைத் தரக்கூடியது
எண்ணங்கள் சூழலை மாற்றி காட்டும் ஆயுதம்
எண்ணங்கள்-2 
எல்லா சூழ்நிலையிலும் நல்லெண்ணங்களைத் தேடு
எல்லா கஷ்டத்திலும் நல்லெண்ணங்களை நினை
எல்லா இடங்களிலும் நல்லெண்ணங்களைப்  பேசு
எல்லா கடமைகளையும் நல்லெண்ணத்துடன் செய்.   
அறம்-1 
அறம் என்பது யாருக்கும் கெடுதல் செய்யாத  மனம்
அறம் அன்பையும், நியாயத்தையும் செய்து கட்டும்.
அறம் மனம் வழியே உடலைப் பேணும்
அறத்தை மீறினால் மன உளைச்சலே மிஞ்சும்
அறம் -2
தனது கடமைகளை மறக்காமலும்
பிறரது உரிமைகளை மறுக்காமலும்
நியாயத்தை கைவிடாமலும்
எவரையும் ஏமாற்றமலும் -ஆவன செய்வது
பொருள் 
கைத்தொழிலும், சிறு சேமிப்பும் இரண்டாவது சம்பளம் 
செலவாகட்டும், சேமிப்பாகட்டும்  பல துளி பெரும் செல்வம்
கொடுத்த கடனையும்,வாங்கிய கடனையும் நினைவூட்ட வேண்டும்  
எளிமையாய் வாழ்தல் இயற்கையின் கட்டளை.
வளம் 
வருமானத்துக்குள் வாழ்ந்து காட்டுதல் வளம்
காப்பீடு, சிறுசேமிப்பால்  பாதுகாப்பு பெறுவது வளம்
கடன்வாங்கவும், ஆடம்பரத்திற்கும்   பயப்படுவது  வளம்
பாராட்டு,விமர்சனங்களை கருதாமல் சிக்கனமாய் வாழ்தல் வளம்.
பணம் 
பணத்துக்கு ஆடம்பரம், கஞ்சத்தனம்,ஏமாற்று என பல சொற்கள்
பணம் இல்லையானால் துன்பம் நிச்சயம்
பணம் பெருகும் போது வேறொன்று வெளியேறும்
பணம் உள்ளவர்கள் முதலில் தன் கிளைகளை தாங்க வேண்டும் 
நுகர்வு 
மருத்துவ  ஆலோசனை  தவிர்த்து நுகர்வோர் உடல்நலம் இழப்பர்
சேமிப்பில்லாமல் செலவழித்து நுகர்வோர் மகிழ்ச்சியை இழப்பர்
நியாயம், நடைமுறை தவறி நுகர்வோர் உறவை இழப்பர்
நியதியை மதிக்காமல் பேராசை நுகர்வோர் அமைதியை  இழப்பர்.
அறிவு 
விருப்பு-வெறுப்பு களை பின் வைத்து நியாயமாய் நடப்பது அறிவு
சரி-தவறுகளை சிந்தித்து சரிப்படுத்திக்கொள்வது அறிவு
காரணம்-பின்விளைவுகளை ஆராய்ந்து காப்பாற்றிக்கொள்வது அறிவு
நல்லதை-மாயையை அறிந்து பிறருக்கு  பயனாய் இருப்பது அறிவு.
ஆரோக்கியம் 
உடல் நலத்தை  காப்பது இயற்கை உணவுகள்
உடல் இளமையை காப்பது உடற்பயிற்சிகள்
உடல் நலம் தொடர கட்டுப்பாடுகள் அவசியம்
உடல் நலத்தை சொல்வது மருத்துவ சோதனைகள்
உணவு
 சரியான உணவையும் , தவறான உணவையும் அறியும் பழக்கம் நல்லது        
சத்தேயானாலும் அளவிற்கு மிஞ்சினால் நோயாகிறது
ருசியே ஆனாலும் அளவோடு உண்பதே நலத்துக்கு நல்லது
உப்பு, இனிப்பு, கொழுப்பில் ருசியும் நோயும் சேர்ந்தே உள்ளது.
உடற்பயிற்சி 
தினசரி உடற்பயிற்சி செய்ய  சுய தீர்மானம் அவசியம்
நோயை தடுப்பதும், குணப்படுத்துவதும் உடற்பயிற்சியின் வேலை
மன அழுத்தத்தையும், குழப்பத்தையும் உடற்பயிற்சி தணிக்கிறது
உடல் வலிமையையும், வளைவுத்தன்மையும் தொடரச் செய்கிறது
தியானம் 
அசையாத பால் உறையும்
அசையாத விதை முளைக்கும்
அசையாத கரு வளரும்
அசையாத மனம் ஆன்மீகமாகும்.
குணம் -1
முதலில் தகுதி பெறு
பிறகு ஆசைப்படு
நானே மேலானவன் என்பது தகுதியல்ல
கடமையை உணர்ந்து நடப்பதே தகுதி.
குணம்-2
உண்மையாய் இரு
புத்திசாலித்தனம் காட்டிக்கொடுத்துவிடும்
சூழ்நிலையும், உணர்ச்சியும் ஆரவாரிக்கும்
நியாயமும், கட்டுப்பாடும் கரைசேர்க்கும்
பயிற்சி 
நினைப்பை நிறுத்த தியானம் பழகு
ஆசைகளை நிறுத்த விரதம் பழகு
வெறுப்புகளை நிறுத்த சமநிலை பழகு
குற்றங்களை நிறுத்த துறவு பழகு.
ஆசை 
நினைத்ததை அடைய வல்லது
நெருப்பிற்கு சமமானது
ஒருபோதும் திருப்தி படாதது
துன்பங்களுக்கு காரணமாவது.
பயம் 
நானே மேலானவன் எண்ணம் மாற நியதிகளுக்குப் பயப்படு
சுயநல எண்ணம் மாற நியாயத்துக்குப் பயப்படு
பொறாமை எண்ணம் மாற இறைவனுக்குப் பயப்படு 
ஏமாற்றும் எண்ணம் மாற பாவம் செய்யப் பயப்படு.
பாபம் 
விருப்பும் வெறுப்பும் பாபம் செய்யும்
பாபம் சாபத்துக்கு காரணமாகும்
சாபம் ஈடு செய்யாமல் விடாது
பாபம் செய்யாதிரு மனமே.
கட்டுப்பாடு இல்லாத போது 
பொறுமை இருக்காது
சூழ்நிலை புரியாது
அன்பு தங்காது
அருள் சேராது

நியாயம் 
நியாயம் இறைவனின் வெளிப்பாடு
நியாயமாய் நடப்பதே வலிமை
நியாயத்திற்கு பணிவதே உயர்வு
நியாயத்தை மறுப்பது ஆபத்து.
நியாயம் இல்லாத போது 
உண்மையை மறைக்கத்தோன்றும்
உரிமையை மறுக்கத்தோன்றும்
நடைமுறையை விலக்கத்தோன்றும்
சுயநலமாய் நடக்கத்தோன்றும் 
ஒற்றுமை 
பரஸ்பரம் மரியாதை ஒற்றுமையை காக்கும்
ஒற்றுமை சிதற சுயநலமே காரணம்
நியாயமாய் நடப்பதே ஒற்றுமைக்கு வழி
தவறை திருத்திக்கொள்வதே ஒற்றுமைக்கு நல்லது.
தத்துவம் 
குணமும், குற்றமும் மனிதனின் இயல்பு
செய்யத்  தக்கதும், செய்யத் தகாததும் மீறக்கூடாத நிபந்தனைகள்
பயிற்சியும், வைராக்கியமும் எதையும் சாதிக்க வைக்கும்
தன்னை சரிப்படுத்துவதும், பயனாக்குவதும் மனிதனின் கடமை.
கஷ்டம் 
எல்லோருக்கும் ஒரே மாதிரியாக வாழ்க்கை அமையாது
பலருக்கும் பலவகையில் தன் நிலையும் சூழ்நிலையும் அமைகிறது
ஆசை, விதி வாழ்க்கையை ஆட்சிசெய்யுமானால் கஷ்டம் வலிக்கும்
தடைகளை தெரிந்து, திட்டமிட்ட விடாமுயற்சி கூலியை  பெற்றுத்தரும்.   
விதி 
விதி எனபது நியாயத்தின் தீர்ப்பு
விதிக்குப் பரிகாரம் வலியச்சென்று உதவுவது
விதிக்கு மருந்து விடாமுயற்சி
விதியை தணிக்க பிரார்த்தனை உதவும்.
பெரியோர்கள் கூறியது 
எதிர்பார்ப்பும்  பதிலுக்குபதிலும் நியாயமாய் இருக்க   
விருப்பும்  வெறுப்பும் சரியாய் இருக்க 
மனத்தால மனத்தைக்  கட்டுப்படுத்த 
அடுத்தவர் உரிமையை மதித்திடு மனமே.
சித்தர்கள் கூறியது-1
எதிர்பார்ப்பும் பதிலுக்குபதிலும் பூஜ்ஜியத்துக்கு வர  
விருப்பு  வெறுப்பு இல்லாத சமநிலை ஏற்பட 
மனத்தால்   மனத்தை அடக்க 
செத்தாரைப் போல் திரி மனமே.
சித்தர்கள் கூறியது-2
முயற்சி  நியாயம் மனதிருப்திக்கு உதவும்
உடல்நலம்  பரஸ்பரம் மரியாதை மனமகிழ்ச்சிக்கு உதவும்
வருமானம்  சேமிப்பு மனவலிமைக்கு உதவும்
செத்தாரைப்போல் திரிவது மனம் சக்தி பெற உதவும்
இயற்கை மாறுகிறது 
மண்இரசாயனங்களை கொட்டுவதற்கு அல்ல. உயிர்களுக்குஉணவு தயாரிக்க
காடுகள் வெட்டுவதற்காக அல்ல. மண்,நீர்,காற்றை வளப் படுத்த
கற்றும் நீரும் கெட்டது யாரால். நிலமும் வெப்பமும் கெடுவது யாரால்
இயற்கையின் ஒழுங்கு தடுமாறுவது யாரால்.
இயற்கை செழிக்க 
அறவழி வாழ்க்கை
இயல்பு மாறாத உணவு
இயற்கை மாசுபடாத தொழில்
இயற்கையை காக்கும் காட்டுப்பாடு.
சுயமுன்னேற்றம் (Self Development)
அறிய வேண்டியது   உலகள  வானது
நல்லதொரு புத்தகம்  அறிவுக் களஞ்சியம்
பொழுது  போக்கிற்கென்று படிக்காமல்
படித்ததில் பிடித்தது குணம் ஆக  வேண்டும்
திட்டம் (Planning)
அனுபவமுள்ளவர்  ஆலோசனை கேட்டு
வழியையும்,  மாற்று வழியையும் முடிவு செய்து
பணிகளை  வரிசைப்படுத்தி
வரிசைப்படி பணிகளை செய்வது நன்முயற்சி.
நேரம் 
நேரம் அனைவருக்கும்  ஒரே அளவானது
நேரம்  ஓடிக் கொண்டிருக்கிறது
நேரத்துடன் ஓடுபவர்கள் சாதிக்கிறார்கள்
நேரத்தை அட்டவணையாக்கி பணிகளை முடிக்கிறார்கள்.
முடிவெடுத்தல் (Decision)
பிரச்சினை  என்ன
என்ன  முடிவு வேண்டும்
முடிவை  எட்டும் பலவழிகள் யாது
அதில் சிறந்த வழி எது.
தூண்டுதல் (Motivation)
அன்பாய், அக்கறையாய்  உற்சாகப்படுத்துவதும்
சிறு முன்னேற்றங்களையும் ஊக்கப்படுத்துவதும்
நற்செயலை பாராட்டுவதும்
பரிசுப்பொருட்களால் மகிழ்விப்பதும் தூண்டுதலாகும்.
மன அழுத்தம் 
பதட்டமும், பரபரப்பும்  இதயத்தை அழுத்தும்
கோபமும், கொந்தளிப்பும்  சுரப்பிகளை அழுத்தும்
பயமும்,அதிர்ச்சியும் உடல் இயக்கத்தை தடை செய்யும் 
கவலையும், தவிப்பும் சுவாசத்தை பாதிக்கும்  .
உதவி
ஒற்றுமையின்றி  உதவிகள் இல்லை
உதவிகள்  இன்றி வெற்றிகள்  இல்லை
உயர்வு  என்பது  பலரது உதவிகள்
உதவியை மறந்து சாமர்த்தியம் பேசுவது எல்லோராலும் முடியாது.
உறவில் நெருக்கம் 
பரஸ்பரம்  மதித்து நடப்பதை கட்டாயமாய்  பராமரித்தல்
பரஸ்பரம்  தவகல் தொடர்பை பேணுதல்
பரஸ்பரம்  குறைகளை அனுசரித்துப் போதல் 
பரஸ்பரம் பயனாய் இருத்தல்.
உறவில் விரிசல்-1 
நானே மேலானவன் எண்ணம் குற்றம் செய்ய வைக்கும்
சுயநல எண்ணம் குணம் மாறி நடக்கும்
சாமர்த்தியம் பேசி தப்பிக்கும் உறவு நெடுநாள் தொடராது
யாரை நம்பியும் யாரும் இல்லை என்று ஒதுங்கி நிற்கும்
உறவில் விரிசல்-2
பேச்சும் செயலும் தொடர்ந்து பாதிப்பைத்தரும் போது
அலட்சியமும் ஆதிக்கமும் தொடர்ந்து வெளிப்படும் போது
தகவலும் ஒத்துழைப்பும் தொடர்ந்து குறையும் போது
பதிலுக்கு பதிலாய் அக்கறையும் அனுசரிப்பும் விரிசலாகி நிற்கும்.
தவறு-1
தவறுக்குகாரணம்ஆரோக்கியம்தேவைமனநிலைசூழ்நிலைசேர்வதாகும் தேவையை நிறைவேற்ற நியாயத்தை மீறும் மனநிலையும்
மனநிலைக்கேற்ப ஆரோக்கியமும்சூழ்நிலையும் சாதகமாய் இருக்கும் போது
பின்விளைவை புறந்தள்ளி மனம் தவறைச்செய்கிறது.    
தவறு-2
தனது தவறு தனக்குத் தெரியாது
தனது தவறிலிருந்து தப்பிக்க சாமர்த்தியம் பேசும்  
அடுத்தவர் தவறு பெரிதாய் தெரியும்
அக்கறையுடையோர் சொல்லும் தவறை சரிப்படுத்த வேண்டும்.
தீர்ப்பு 
இருபக்கமும் விசாரிக்காமல் முடிவுக்கு வருவதும்
சுயநலத்தை மனதில் வைத்து நியாயம் பேசுவதும்
சாமர்த்தியம்  பேசி பாதிக்கப் பட்டவனை குற்றவாளி யாக்குவதும்
விருப்பு - வெறுப்பால் முடிவு சொல்வதும் தவறான தீர்ப்பு.
விசாரணை
என்ன நடந்தது, என்ன வேண்டும் என்பதை விசாரித்து
சரி எது,  தப்பு எது என்பதை ஆராய்ந்து
சுய நல  சாமர்த்தியங்களை ஒதுக்கி வைத்து
நியாயமாய் நடப்பதே பின்விளைவுக்கு நல்லது.
தகராறு (Conflict)
நடை முறை ஒழுங்கை மீறுவதும்
உரிமையை அலட்சியப்படுத்துவதும்
உண்மையை மறைத்து சாமர்த்தியம் பேசுவதும்
மனதறிந்து அவமதிப்பதும் தகராறுக்கு காரணமாகும்.
வாழ்க்கைப் பாதை-1 
வாழ்க்கை சூழ்நிலையை  மாற்றுவது விதியின் சக்தி
சூழ்நிலைதரும் கிளர்ச்சி தவறு செய்ய வைக்கிறது
பிரார்த்தனையை நம்பினால் சூழ்நிலை தணியும்
பிரார்த்தனை என்பது நல்லெண்ணமாய் இருப்பது.
வாழ்க்கைப் பாதை-2
உடல்நலம் காப்பது அவரவர் கட்டுப்பாடுகள் 
பிணி ஆள் பார்த்து, வயது பார்த்து வருவதில்லை
முதுமையில் பணமும் வேண்டும்  ஆதரவும் வேண்டும்
மரணத்தை நினைத்து எழுதி வைக்க வேண்டும்
வாழ்க்கைப் பாதை-3
இயற்கையாய் உண்பதே உடல்நலத்துக்கு வழி
பிரார்த்தனையாய் இருப்பதே நல்லெண்ணத்துக்கு வழி
நியாயமாய் நடப்பதே பின்விளைவுக்கு நல்லது
பயனாய் இருப்பதே பிறவியின் நோக்கம்

வாழ்க்கைப் பாதை-4
சூழ்நிலையில் கடமையை செய்
மனநிலையில் தியானத்தை நினை
உடல்நிலையில் ஆரோக்கியம் பேணு
உணர்ச்சி நிலையில் உஷாராய் இரு.
                                      ------------------------------------------------


No comments:

Post a Comment