Tuesday 9 June 2015

உயர் இரத்த அழுத்தம்

                                          உயர் இரத்த அழுத்தம் 

இரத்தம் உடல் முழுவதும்  பாய்ந்து சென்று அனைத்து திசுக்கழுக்கும் உணவினை வழங்கு கிறது. இரத்தம் உடல் முழுவதும் பயணிக்க இரத்தத்திற்கு அழுத்தம் ( Pressure ) தேவைப்படுகிறது. இரத்தத்திற்கு அழுத்தம் ஏற்படஇருதயம் ஒரு பம்பை ( Pump )  போன்று வேலை செய்து இரத்தத்திற்கு அழுத்தத் தினை தருகிறது.

இருதயம் சுருங்கி, விரிந்து வேலை செய்து இரத்தத் திற்கு அழுத்தத் தினை தருகிறது. இருதயம் சுருங்கும் போது இரத்தத் திற்கு அழுத்தம் கிடைத்து வெளியேறுகிறது. அந்த அழுத்தத்தினை சிஸ்டோலிக் அழுத்தம் (Systolic Pressure) என்கிறார்கள். இருதயம் விரிவடையும் போது ஒரு அழுத்தத்தில் இரத்தம் உள்ளே வருகிறது. இதனை டயஸ் டோலிக் ( Diastolic Pressure ) என்கிறார்கள்.

                                                   Systolic Pressure                        Diastolic Pressure        
ஆரோக்கியமானநிலை       120--    mm/Hg குறைவாக    80--  mm/Hg  குறைவாக
ஏறும் நிலை                            120-139  ''                               80-89    ''           
உயர் அழுத்தம் நிலை -1      140-159  ''                               90-99     ''          
உயர் அழுத்தம் நிலை -2      160----   ''   க்கு மேல்             100----  ''    க்கு மேல்

250/115 என்று இரத்த அழுத்தம் இருக்குமானால், அல்லது ஏதாவது ஒன்று அதிகம் இருக்கு மானால் கூட உடனடியாக அவசர சிகிச்சை பெறவேண்டும்.அல்லது பக்க வாதம் ( Stroke ) மாரடைப்பு ( Heart Attack ) போன்ற விளைவுகள் ஏற்பட காரணமாகும்.

120/80 என்றிருப்பது ஆரோக்கியமான இரத்த அழுத்தம்.

உயர் இரத்த அழுத்தத்திற்கு காரணம் உடற்பயிற்சி இன்மை, உப்பு,கொழுப்பு, புகைத்தல், சிறுநீரக நோய்,உடலுள் கட்டிகள்,இரத்த குழாய்கள் குறுகுவது போன்று பல வாறாகும்.

குறைந்த இரத்த அழுத்தத்தினால் எந்த பிரச்சினையும் ஏற்படாதவரை மருத்துவம் தேவையில்லை.குறைந்த இரத்த அழுத்தத்தினால் தலை சுற்று,வாந்தி,பேதி,உடல் தளர்ச்சி,சக்தியின்மை,போன்று ஏதாவது அசாதாரண நிலை ஏற்படலாம். 85/55-ல் கூட ஒருவர் ஆரோக்கியமாய் இருக்க முடியும்.

உயர் இரத்த அழுத்தம் எந்த அறிகுறியையும் காட்டாமல் பெரும்பாலும் அமைதியாகவே இருக்கும்.
உயர் இரத்த அழுத்தம் இருதயம்,மூளை,சிறுநீரகம்,கண் போன்ற உறுப்புக்களை பாதிக்கிறது.
வயது ஆக,ஆக உயர் இரத்த அழுத்தமும் ஆபத்தான தாக இருக்கும். தினசரி தீவிர உடற்பயிற்சியினால் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம். உடற்பயிற்சி BP மாத்திரை க்கு சமமாக இரத்த அழுத்தத்தை குறைக்கும். திறந்த வெளியில் இருபது நிமிடம் நிறுத்தாமல் தொடர்ச்சி யாக செய்யும் நடை,ஓட்டம்,ஜாகிங், நீச்சல் போன்ற பயிற்சிகள் இருதய தசைகளை வலுப்படுத்தி இரத்த அழுத்தத்தை குறைக்க  உதவுகிறது.வேர்வை உடலில் உள்ள உப்பை வெளியேற்றுகிறது. 

மனஅழுத்தம் இருதய தசைகளை பலவீனப்படுத்தி இரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்கிறது.

சோடியம் அல்லது உப்பு இரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்கிறது.உடல் ஆரோக்கியத்திற்கு தினசரி 3 கிராம் உப்பே போதுமானது.ஆனால் நாம் தினசரி 10 கிராம் உப்பிற்கு மேல் சாப்பிடுகிறோம்.வெளியில் வாங்கி உண்ணும் அனைத்து உணவு மற்றும் பானங்களிலும்  அளவுக்கு அதிக மாகவே உப்பு சேர்க்கிறார்கள்.சுத்திகரிக்கப்பட்ட பொடி உப்பை ( Table salt ) விட,சுத்திகரிக்கப் படாத. தாதுக்கள் நிறைந்த கடல் உப்பு  சிறந்தது.   


மக்னீசியம்,பொட்டசியம்,போன்ற சத்துக்கள் இரத்த அழுத்தத்தை குறைக்கச் செய்கிறது.
கால்சிய குறைபாடு இரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்கிறது.
வைட்டமின் பி 3, நியாசின் போன்றவை இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.
கெட்ட கொழுப்பு உணவுகள் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது.அந்த வகை உணவுகளை தவிர்த்து விட்டு நல்ல கொழுப்பு உணவுகளை உண்ண வேண்டும்.
அளவிற்கு மீறி அல்லது தரமற்ற மதுவினை குடிப்பதால் உயர் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது.
பூண்டு இரத்தத்தை சுத்தப்படுத்தி,இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.
படபடப்பாய், பரிதவிப்பாய்,மனமுறிவாய்,ஆழ்ந்த கவலையாய், மட்டற்ற மகிழ்ச்சியாய்,ஆவேசமாய் இருக்கும் மனநிலை உயர் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.

உடற்பயிற்சி, மூச்சுப்பயிற்சி, மனஅமைதிபயிற்சி, ஆசுவாசபயிற்சி, ஒய்வு போன்ற வைகள் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.

இரத்த அழுத்தத்திற்காக எடுத்துக்கொள்ளும் மாத்திரைகள் பலவிதமான பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது.ஐபுப்ருபென் ( Ibuprofen )மாத்திரைக்கும், இரத்த அழுத்த மாத்திரைக்கும் ஒன்றுக்கொன்று ஆகாது.

மாத்திரை சாப்பிடுகிறேன், நடைபயிற்சி செய்கிறேன்  என்பதற்காக உப்பு, கொழுப்பு உணவுகளை சாப்பிடக்கூடாது.

மருத்துவரிடம் வேறுகாரணங்களுக்காaக சாப்பிடும் எல்லா மாத்திரை களையும் கூறி, அவர் தரும் இரத்த அழுத்த மாத்திரையை சாப்பிட வேண்டும்.

காய், கனி, கீரை, நட்ஸ், சீட்ஸ், முழுத்தானியம் என ஆரோக்கிய மான உணவுகளை சாப்பிட்டு, போதுமான உடற்பயிற்சி செய்து உறக்கம், ஒய்வு களில் கவனம் செலுத்தி உப்பு, கெட்ட கொழுப்பு உணவுகளை தவிர்த்து இரத்த அழுத்தம் குறையும் வழியை பார்த்துக்கொள்ளவேண்டும்.

                                  --------------------------------------------





 
 



































   





  

No comments:

Post a Comment