Saturday 9 April 2016

இருதயம்

                                                           இருதயம் 

தாயின் வயிற்றில் வளரும் சிசுவில்  முதன் முதலாக உருவாகி இயங்கும் உறுப்பு இதயமாகும்.

ஆரோக்கியமான இதயம் எதையும் சமாளிக்கிறது. 

ஆரோக்கியமான இருதய தசைகள் உடல் உழைப்பின் போது சிறப்பாகவும், ஓய்வின் போது குறைந்த அளவு துடிப்புடனும்  முழுவேலையையும் செய்கிறது. 

குறைந்த இதய துடிப்பில் அதிக அளவு இரத்தத்தை வெளியேற்றும் பணியினை செய்யும் சக்தியுடன் இதயதசைகள் இருக்கிறது. இதயத்தமனிகள் அதிக அளவு இரத்தம் பாய்ந்து செல்வதற்கு ஏதுவாய் பெரியதாய் இருக்கிறது.

பிராண வாயு கலந்த இரத்தத்தினை உடலின் ஒவ்வொரு திசுக்களுக்கும் பம்ப் பண்ணி அனுப்பும் வேலையை இருதயம் செய்கிறது. மனிதனின் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கிறது. மனித இதயம் ஒரு நாளைக்கு சுமார் 80000 முதல் 100000 தடவை வரை துடித்து சுமார் 9000 லிட்டர் இரத்தத்தை பம்ப் செய்கிறது. 70 முதல் 90 வயது வரை வாழும் ஒரு மனிதனின் இதயம் சுமார் 2 முதல் 3 பில்லியன் தடவை துடித்து, 50 முதல் 60 மில்லியன் காலன் இரத்தத்தை பம்ப் செய்கிறது. இந்த பணிகளை செய்வதற்கு ஏற்ப இருதய தசைகள் வித்தியாசமான குணங்களுடன் அமையப் பெற்று தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கிறது.

ஆன்றி ஆக்சிடண்ட் ( Anti Oxidant ) சத்துள்ள உணவுகள் இதய நோய்களை எதிர்க்கும் முக்கிய கருவியாய்  இருக்கிறது.

காய்கள், கீரைகள், மூலிகைகள், பழங்களில் சக்திவாய்ந்த ஆன்றி ஆக்சிடண்ட்கள் இருக்கின்றன. வைட்டமின் E இதயத்தைப் பாதுகாக்கிறது. முளைவந்த கோதுமை, கோதுமைப்புல் ஜுஸ், பார்லி போன்ற வற்றிலுள்ள ஆன்றி ஆக்சிடண்ட் என்ஸைம்கள்  இதயத்தை வலிமைப் படுத்துகின்றன. திராட்ஷைப் பழக்கொட்டையிலுள்ள ஆன்றி ஆக்சிடண்ட் இருதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இதயத்தில் இரத்தம் கட்டியாகாமல் இருக்க ஆஸ்பிரின் உதவும். ஆனால் நெடுநாள் உண்ணும் போது அதனால் பக்க விளைவுகள் ஏற்படும். ஆஸ்பிரினுக்குப் பதில் அன்னாசிப் பழம் நல்லது. வெள்ளைப்பூண்டு இருதயத்திற்குரிய சிறந்த ஆன்றி ஆக்சிடண்ட். வெள்ளைப்பூண்டு இரத்தத்தில் கொலஸ்ட்ராலையும் குறைக்கிறது, இரத்தத்தில் கட்டி ஏற்படுவதையும் தடுக்கிறது. பச்சையாக உண்ணும் பூண்டு இரத்த சுகரை குறைக்கிறது.

இரத்தக் கொலஸ்ட்ரால் விகிதம் கட்டுக்குள் இல்லை என்றாலும் அதிக உடல் எடையாலும் மன அழுத்தத்தை குணப் படுத்தாவிட்டாலும் நல்ல கொழுப்புச் சத்து குறைபாட்டாலும் இரும்புத்தாது அதிகமாவதாலும் இருதயம் ஆபத்துப் பாதையில் போய் விடுகிறது.

உடலில் இருதய ஆரோக்கியம் சத்தான உணவுகளால் சரி செய்யப்பட்டு குணப்படுத்தக்கூடிய ஒரு அவையமாகும்.

இதயநோய் மரணம் ஏற்படும் காரணங்கள் அனைத்திலும் முதன்மை வகிக்கிறது. இளவயது மரணத்திலும் முதற் காரணமாக இருக்கிறது.

புகைத்தல், அதிக உடல் எடை, உடற்பயிற்சியின்மை, மோசமான உணவுப்பழக்கம் போன்றவை இதயநோய் மரணத்துக்கான தெரிந்த காரணங்கள்.

சிறந்த உடற்பயிற்சி, உணவுப் பயிற்சி, மனப் பயிற்சி போன்றவை களால் இருதய நோயை குணப்படுத்த முடியும். நோய் வராமல் தடுக்கவும் முடியும்.




Image result for இருதயம்



No comments:

Post a Comment