Sunday 10 April 2016

சிறு நீரகம்

                                                         சிறு நீரகம் 

சிறுநீர் மூலம் நூற்றுக் கணக்கான கழிவுகள் உடலை விட்டு வெளியேறுகின்றன. நாம் உண்ணுவதையும், குடிப்பதையும், உடற்பயிற்சி செய்வதையும், சிறுநீரக செயல் பாட்டையும் பொறுத்து சிறுநீர் வெளியேறுகிறது. சிறுநீர் பரிசோதனை முடிவுகளை  அலட்ச்சியப் படுத்தாதீர்கள்.

எந்த வகை உணவுகள் ஆரோக்கியத்திற்கு நல்லது, எந்தவகை உணவுகள் ஆரோக்கியத்திற்கு கெடுதல், எவ்வளவு நீர் அருந்துகிறோம், எதைக்குடிக்கக்கூடாது, எந்த உடற்பயிற்சி ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, எந்த அளவிற்கு உடற்பயிற்சி போதுமானதாக இல்லை என்பவைப்பற்றி அக்கறைப்படாமல் இளம் வயதிலே ஆரோக்கியத்தை பலவீனப் படுத்திக்கொள்கிறார்கள். இவை அனைத்தாலும் சிறுநீரகம் பாதிக்கப்படுகிறது.  

சிறுநீரகம் இரத்தத்திலுள்ள கழிவுகளை பிரித்து வெளியேற்றுகிறது. இரத்தத்திலுள்ள தண்ணீரின் அளவை ஒழுங்கில் வைத்திருக்கிறது. சிறுநீரகத்தில் இரத்தம் சுத்தப்படுத்தப்பட்டு, இரத்தத்திலுள்ள இரசாயனக் கூறுகள் சமநிலைப்படுத்தப்படுகின்றன.

சிறுநீரில் புரோட்டின், ஆல்புமின் சோதனைமூலம் சிறுநீரகத்தின் ஆரோக்கியம் சோதிக்கப்படுகிறது. 

சிறுநீரகத்தில் ஆரோக்கிய குறைவு ஏற்பட்டால், அது தனது செயல் பாட்டை மெதுவாக குறைத்துக்கொள்கிறது. சிறுநீரகத்தை மீண்டும் ஆரோக்கியப்படுத்த முடியாது. சிறுநீரகம் பழுதடையும் போது இரத்த சுகரும், இரத்த அழுத்தமும் அதிகரிக்கிறது.

இரத்த அழுத்தம், இரத்த சுகர், புரோட்டின் உணவு, கொலஸ் ட்ரால் முதலிய வற்றைக் கட்டுப் பாட்டில் வைத்திருப்பதன் மூலம் சிறுநீரக ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம். 

சிறுநீரகம் தினசரி 200 லிட்டர் இரத்தத்தை சுத்தப்படுத்தி 2 லிட்டர் கழிவுப்பொருட்கள் மற்றும் தண்ணீரை வெளியேற்று கிறது.

தேவையான அளவு தண்ணீர் குடிப்பதன் மூலம் சிறுநீரகத்தில் கல், பழுப்பு முதலியன ஏற்படாமல் பாதுகாக்க முடியும்.

இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். அதிக இரத்த அழுத்தம் சிறுநீரகத்திற்கு மிகுந்த அழுத்தத்தை கொடுக்கிறது. தேவையில்லாமல் மாத்திரைகள் சாப்பிடுவதை தவிர்த்தும், முடிந்தவரை மாத்திரைகளை உண்பதை குறைக்கவும் முயற்சிக்கவேண்டும். சில மாத்திரைகள் சிறுநீரக ஆரோக்கியத்தைப் பாதிக்கின்றன. 

இரண்டு சிறுநீரகமும் இரத்தத்தை சுத்தப்படுத்தி இரத்த இரசாயனத்தை சமநிலையில் வைத்திருக்கின்றன.

சரியான உணவிலும், சுகர், பிரஷர், கொலஸ்ட்ரால், உடல் எடை  போன்ற ஆரோக்கிய எண்களிலும், நிறைய தண்ணீர் குடிப்பது போன்ற வற்றிலும் கவனமாய் இருந்தால் சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கலாம்.  சீனி, உப்பு சேர்க்காத எலுமிச்சை சாறு தண்ணீர் தினசரி குடிப்பது மிகவும் நல்லது. வாழைத்தண்டு சாறு, பார்லித் தண்ணீர், சீரகத்தண்ணீ ர்  போன்றவை சிறுநீர் பிரச்சனை களை தடுக்க உதவுகிறது. மாறிய கொழுப்பு ( Trans Fat ) உணவுகளைத் தவிர்ப்பதால் புராஸ்டேட் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தி சிறுநீர் பிரச்சினை வராமல் தடுக்கலாம்..

                                ------------------------------------------------------













No comments:

Post a Comment