Wednesday 24 February 2016

இயற்கையின் நியதி - 6

                                                    இயற்கையின் நியதி - 6
                                                          (The Law of Karma)

இந்த பிரபஞ்சத்தில் ஒலி, அதிர்வு இல்லாத இடமே கிடையாது. ஒலியினால் அதிர்வும், அதிர்வினால் ஒலியும்  ஏற்படும் அளவிற்கு இரண்டும் ஒன்றோடு ஒன்று இணைந்திருக்கிறது. மெல்லிய ஒலி, அதிர்வுகளை உணரும் சக்தியை நாம் இழந்து விட்டோம்.

நாம் இயற்கையோடு இயைந்து வாழும் வாழ்க்கையிலிருந்து மாறி, விஞ்ஞான வாழ்க்கைக்கு வந்துவிட்டோம். விஞ்ஞான வாழ்க்கையில் நம் உடலில்  பல அரிய  இயற்கை சக்திகளை இழந்து வருகிறோம் என்று மருத்துவர்கள் கூறு கிறார்கள். விஞ்ஞானத்தால் உலகில் பல நன்மைசெய்யும் உயிரினங்கள் அழிந்துவிட்டன என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

பழங்காலத்தில், விஞ்ஞானம் இல்லாத காலத்தில்  நமது ரிஷிகள், ஞானிகள் இயற்கை நியதிகள் பற்றியும், கர்மா  பற்றியும் சொல்லிவிட்டு போயிருக் கிறார்கள். தற்காலத்தில் விஞ்ஞானி நீயூட்டன்  ஒரு கண்டுபிடிப்பை கூறியது அது கர்மா என்னும் நியதியை உறுதி செய்கிறது.( Every action, there is an equal and opposite reaction ) 

பிரபஞ்சத்தில் அனைத்தும் ஒரு வட்டப்பாதையில் ( Circle ) பயணிக்கின்றன. தான் புறப்பட்ட இடத்திற்கு திரும்பி வரும்போது "போனது திரும்பிவருகிறது"
( Reciprocation ) என்கிறோம்.

பிரபஞ்சத்தில் ஒவ்வொரு படைப்பும் அதிர்வுகளின் ஆரம்ப புள்ளி.

ஒவ்வொரு மனிதனின்  எண்ணம், சொல், செயல்களும்  அதன் தன்மைக்கேற்ப அதிர்வுகளை (Action)  ஏற்படுத்தும் திறன் கொண்டவை. நமக்குத் தெரியாமலே தானியங்கியாக இது நடந்து கொண்டிருக்கிறது. நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் இது நடந்துகொண்டிருக்கும். இந்த அதிர்வுகள்  தனது வட்டப் பாதையில் பல்வேறு இயற்கை நியதிகளுக்கு உட்பட்டு  அதன் தன்மைக்கேற்ப நன்மையாகவோ,  தீமையாகவோ, பலமாகவோ, பலவீனமாகவோ ஆரம்பமான  இடத்துக்கு வருகின்றன. இதை எதிர் சக்தி (Reaction) என்று சொல்லலாம். நாம் நம்பினாலும், நம்பாவிட்டாலும் அது நடந்து கொண்டிருக்கும். 

கர்மா ( ஊழ்வினை ) என்பது சம்ஸ்கிருத வார்த்தை. ஒவ்வொரு மனித உடலிலிருந்தும் நினைப்பு, சொல், செயல் மூலம்  உற்பத்தியாகும் அதிர்வுகள் எதிர் சக்தியாக திரும்பி வருவதை கர்மா என்கிறார்கள். இதனால் வாழ்க்கையில் திடீர் மாற்றங்கள், தலைகீழ் மாற்றங்கள் நடக்கின்றன. இது அதே பிறவியிலும் நடக்கலாம், அடுத்த பிறவியிலும் நடக்கலாம் என்கிறார்கள். சில சம்பவங்களை கேள்விப்படும் போது அது மிக துல்லியமாகவும், ஆச்சரியமாகவும் இருக்கிறது. சிலரது வாழ்க்கையை பார்க்கும் போது எல்லோரிடமும் ஒரேமாதிரி நடக்காமல் நிச்சய மற்றதாக இருக்கிறதே என ஐயம் வரும் படி  இருக் கிறது.

ஊழ்வினைக்குப் பரிகாரம் செய்யப் போனால் அங்கேயும் ஊழ்வினைதான் முன்வந்து நிற்கும் என்று திருவள்ளுவர் கூறுகிறார். சிரமம் பாராத விடாமுயற்சி ஊழ்வினையை தணிக்கும் என்றும் திருவள்ளுவர் கூறுகிறார்.

பொதுவாக ஒருவருடைய எண்ணம், சொல், செயல் வேறு ஒருவரை அநியாயமாய் பாதிக்குமானால் அவரது வேதனைகள் கர்மாவை வலிமை யாக்கி தண்டிக்கிறது. அதேபோல் ஒரு வருடைய எண்ணம், சொல், செயல் வேறு ஒருவருக்கு நன்மை செய்து அதனால் அவர் வாழ்த்தும் போது  கர்மா வலிய வந்து உதவுகிறது. ஒழுங்கற்ற ஒரு ஒழுங்காய் இயற்கையின் நியதிகள் நடப்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை.

நமது நினைப்பு, பேச்சு, செயல் எல்லாம் ஒரு சக்தி ( அதிர்வு ) உற்பத்தியாக காரணமாகிறது. இந்த சக்திக்கேற்ற எதிர் சக்தி புதிய வேகம், அல்லது இடைநீக்கம் பெறும் தன்மை அடைகிறது. அனேகம்பேரால் தன்னால் உருவாக்கப்பட்ட சக்திகளை ஒழிக்க முடியாமல் போகிறது.  தனது எண்ணம், சொல், செயல் என்னும் நடவடிக்கையின் பின்விளைவுகளிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது. நல்லவர்களாய் இருக்கவேண்டியது அவரவர் கடமையும், பொறுப்புமாகும்.கெட்டவர்களை மக்கள் கண்டிக்கிறார்கள், நீதிமன்றம் தண்டிக்கிறது. தோல்வி, இழப்பு என்று இயற்கையின் நியதிகள் தண்டிக் கின்றன.

பின்விளைவு இல்லாதது என்று நாம் சிலதை நினைத்தாலும், இந்த பிரபஞ்சம் எல்லாமே ஒன்றுக்கொன்று தொடர்புடையது. ஒவ்வொரு செயலும் அடுத்த செயலுக்கு காரணமாகிறது. அது அப்படியே தொடர்ந்து, முதல் செயல் கடைசி செயலுக்கு காரணமாகிறது. கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் எல்லாம் சங்கிலித் தொடரானது.

நமது பாதையை மாற்றவேண்டிய நேரத்தில் மாற்றிக்கொள்ளவிட்டால் அதே தவறுகள் திருப்பி நடக்கும்.( History repeats)  )

செயலுக்கேற்ற பலன் வராமல் போகாது. செயலின் நோக்கம், அதற்கு செலவிட்ட சக்தி அதற்கேற்ற  பலனைத் தரும். 

எதை விதைக்கிறோமோ அதைத்தான் அறுவடை செய்வோம்.

நமது சூழ்நிலையை நமது ஆழமான எண்ணங்கள் தான் தருகிறது. நமக்கு என்ன வேண்டுமோ அதே எண்ணமாய் இருக்க வேண்டும்.

நம்மால் வெளியே யாரையும் மாற்ற முடியாது. நம்மை நாமே மாற்றிக் கொள்வது தான்எளிதான செயல் என்று பெரியவர்கள் கூறுகிறார்கள்..

                                    ------------------------------------------------













No comments:

Post a Comment