Wednesday, 22 April 2015

தன்னை அறிதல் - 1

                                        தன்னை அறிதல் -1

"எல்லாம் அல்லது  எல்லா உயிரினமும் ஒரே மாதிரியாக இருக்க முடியாது" என்பது ஒரு இயற்கையின் நியதி.

இந்த நியதி மனிதனுக்கும் பொருந்தும். இதன் அடிப்படையில் தான் ஒவ்வருவரின் வாழ்க்கையும் வித்தியாசமாய்  அமைகிறது.

பார்ப்பதற்கு ஒன்று போல் தெரிந்தாலும் மனிதர்கள் அனைவரும்   ஒருவருக்கொருவர் வித்தியாசப்படுகின்றனர். இந்த வித்தியாசங்கள் மனிதருள் பிளவை ஏற்படுத்தக்கூடாது என்பதற்காகவே அனைவரும் வேற்றுமையிலும் ஒற்றுமையை கடைபிடிக்க வேண்டுமென்பதற்காக ஊர் பஞ்சாயத்து,  மதங்கள், மரியாதைகள், கட்டுப்பாடுகள் ஆரம்பித்தன. பிற்காலத்தில் சட்டம், ஒழுங்கு, காவல்துறை, நீதிமன்றம் போன்றவைகள் ஏற்பட்டன.

வித்தியாசங்கள் பல இருந்தாலும் உயர்வோ, தாழ்வோ கொள்ளாமல் உண்மையாகவே மனதை  சமநிலையில் வைத்திருந்தால் தான் அன்போடும், அறனோடும் வாழமுடியும். சமநிலை தவறினால் தவறு,  அல்லது  தாழ்வு மனப்பான்மை  குணம் தான் மனதை ஆட்சிசெய்யும் .

தாயின் வயிற்றில் குழந்தை ஜெனித்த நாளிலிருந்து குழந்தை தாயின் ஒரு அங்கமாக அல்லது உறுப்பாகத்தான் அக்குழந்தை வளர்ச்சியடைகிறது. குழந்தை வெளிவந்து மூச்சுக்காக திணறி அழும்போது முதல் மூச்சு உள்ளே செல்கிறது. அந்த முதல் மூச்சே குழந்தையின் உயிராகிறது. சதா துடித்துக் கொண்டிருக்கும் இதயத்திற்கும் மூச்சிற்கும் ஒரு ரிதம் ஏற்படுகிறது.. இதயத்துடிப்பிற்கும் மூச்சிற்கும் நேரடி தொடர்பு வந்து விடுகிறது. இதயத்துடிப்பு நின்றால்  மூச்சு நின்றுவிடும். மூச்சு நின்றால் இதயத்துடிப்பு நின்று விடும்.

குழந்தை வளர, வளர மூளை வளர்ச்சி அடைகிறது. மூளை வளர்ச்சியுடன் சேர்ந்து 'மனம்' உருவாகிறது. மனமானது மூச்சு மற்றும் இதய துடிப்பின் ஏற்ற, இறக்கத்திற்கு காரணமாகிறது. பதட்டம், மகிழ்ச்சி, சோகம், அதிர்ச்சி போன்ற மனநிலையில், மூச்சின் வேகத்தையும், சீரற்ற இதய துடிப்பையும் உணரலாம்.

மனத்தின் சோகம், மகிழ்ச்சி, பதட்டம், ஏக்கம், அதிர்ச்சி இவைகளுக்கேற்ப மூச்சும், இதய துடிப்பும் மாறுபாடடைகிறது, அல்லது சிலசமயம் நின்று விடுகிறது.

மனம் என்பது பழக்க்கத்தாலும் .நம்பிக்கையாலும் ஆனது. இதுவரை பார்த்த, கேட்ட, அனுபவித்த அனைத்தும் அங்கு பதிவாகி இருக்கும். ஆனால் மனமானது பற்றற்றது, கட்டுப்பாடற்றது. கவனிக்கவில்லையானால் எதையாவது சிந்தித்துக்கொண்டிருக்கக் கூடியது. மனதிற்கு உண்மை-பொய், சரி-தவறு, நல்லது-கெட்டது, பற்றிய கவலை இல்லை. ஏற்கனவே உள்ள பழக்கத்தை,  நம்பிக்கையை செய்யும் ஒரு வேலைக்காரன் போன்றது.

மனம் சிறிது உருவானதும் விருப்பு-வெறுப்பு என்கிற 'நான்' உருவாகிறது. இந்த 'நான்' விருப்பு, வெறுப்புகளை அனுபவிக்க தீர்க்க மாய் இருக்கும். அதன் படி  செய்யவேண்டியதை  தீர்மானித்து அந்த செயலை  மேற்பார்வையும் செய்யக்கூடியது.. வைராக்கியமானது. விரும்புவதை தீவிரமாய் விரும்பும். வெறுப்பதை தீவிரமாய் வெறுக்கும். அகங்காரமானது.

நான் என்பதற்கு தூக்கம் தேவையில்லை. 24 மணி நேரமும் விழித்துக் கொண்டிருக்கும். மனத்தின் மூலமே செயல்படும். தூங்கிக் கொண்டிருக்கும் நிலையில் மனம் செயல்படாது. அதனால் 'நான்' னும் செயல் படமுடியாமல் ஒரு சாட்சியாகவே மனத்துள்  விழித்துக்கொண்டிருக்கும்.

நான் என்பது   உருவான பிறகு 'புத்தி' என்பது ஏற்படுகிறது. புத்தி  என்பது தன்னுள் பதிவாயிருக்கும் சரி-தவறை சொல்லிக்கொண்டிருக்கும். காரணம் -பின்விளைவு களை சொல்லி எச்சரிக்கும். புத்தி என்பது சாதுவானது.

பொதுவாக மரத்தின் வேர்கள் பூமியினுள் மறைந்து இருந்து மரத்தின் வாழ்க்கைக்கு காரணமாய் இருக்கும். வேர்களில் முக்கியமாய் ஆணிவேர், பக்கவேர், கிளைவேர் என  காலா காலத்தில் வளர்ந்து, விரிந்து, பூமியினுள் ஆழமாய் புகுந்து அதனதன் பணிகளை செய்யும். மரத் தண்டிலிருந்து ஆணிவேரும்  அதிலிருந்து பக்கவேரும், அதிலிருந்து கிளைவேரும் உருவாகும். அதேபோல் மூளையிலிருந்து மனமும், அதிலிருந்து நான்-ம், அதிலிருந்து புத்தியும் உருவாகிறது. கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து கிடக்கிறது என புரிந்து கொள்ளலாம்.

மூளை, இதயம், ஐம்புலன்கள், என்பன ஸ்தூலமனது, இவை மொத்தமும் உடல் சம்பந்தப்பட்டது.. மனம், புத்தி, ஆன்மா, நான் என்பன சூக்ஷமமானது, இவை மொத்தமும் மனம்  சம்பந்தப்பட்டது. .         .

உடலானது செயல்பட மூச்சு போதும். மனம், நான், புத்தி ஏதும் தேவை யில்லை. அதைத் தான் மயக்க நிலை என்கிறோம்..

மனமானது செயல்பட உடல், மூச்சு இரண்டும் வேண்டும். மனம் செயல்பட நான், புத்தி தேவையில்லை. ஆனால் அந்த மனதால் எந்த பலனும் இல்லை. அதைத் தான் மனநோயாளி என்கிறோம்.

நான் என்பது செயல்பட 'உடல், மூச்சு, மனம்'  மூன்றும் வேண்டும். புத்தி தேவையில்லை. இதில் தான் நம்மில்  பெரும்பாலும் அடங்குகிறோம். தவறு செய்பவர்கள் அனைவரும் இந்த நிலையிலிருந்து செயல்படுகிறவர்கள்  தாம். பற்றற்று வாழமுடியாமல் ஆசைக்கும், பாசத்திற்கும் வயப்பட்டு தவறு செய்கிறோம். தவறுக்குரிய பலனாய் தோல்வி, இழப்பை சந்தித்து பாதிநாள் நிம்மதி யற்று போய்விடுவதை அனுபவிக்கிறோம். பல நேரங்களில் புத்தி சொல்வதை கேட்டு அன்பு, நியாயம், கடமை, சகிப்புத்தன்மை என  நற்குண மாகவும் நடக்கிறோம். 

புத்தி என்பது செயல்பட 'உடல், மூச்சு, மனம், நான்' இந்த நான்கும் வேண்டும், புத்தியை மட்டுமே முன்னிறுத்தி வாழ்ந்து  கட்டியவர்கள், வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் ஆசா, பாசங்களை துறந்தவர்கள், சமீபத்திய ஸ்ரீ ரமணர், சுவாமி விவேகனந்தர், இராமகிருஷ்ண பரமஹம்சர், மகாத்மா காந்தி போன்ற வர்களும் முற்காலத்தில் அகத்தியர், திருமூலர், புத்தர், சித்தர்கள் பட்டினத்தார், ஆழ்வார்கள், நாயன்மார்கள். வியாசர்  போன்ற லக்ஷகணக்கானவர் களும் மனிதர்களே. அவர்களெல்லாம் தங்களது 'புத்தி' உணர்வை மட்டும் முன்னிறுத்தி வாழ்ந்தார்கள். தன்னுள் இருந்த பிரபஞ்ச சக்தியை ( ஆன்மாவை ) தரிசித்தார்கள்.

 நாம் அவர்கள் சொன்னதை எல்லாம் ஓரம் கட்டிவிட்டோம். சித்தர்கள் சொன்ன இயற்கை மருந்துக்கள் அனைத்தையும் விட ஆங்கில மருந்தே சிறந்தது என்று மாறினோம். படிப்பு- பணி- பணம்- புகழ் இருந்தால் போதும் என்று இரவு பகலாய் உழைக்கிறோம். ஆரோக்கியம் போகும்வரை   ஆரோக்கியம் பற்றியோ, சுற்றுப்புற ஆரோக்கியம் பற்றியோ, எண்ணுவதே இல்லாத நிலைக்கு வந்துவிட்டோம். நம் முன்னோர்கள் படித்த குருகுல கல்வியை கைவிட்டோம். இப்போது உயர் கல்வி படித்தவனும், உயர்பதவியில்  உள்ளவனும், உயர்ந்த பணக்காரனும் பொய் சொல்லுகிறான். ஒருவரை ஒருவர் ஏமாற்று வது தான் திறமை என்றாகிவிட்டது. எதை ப்பற்றியும்  மக்களும் கவலை ப்படவில்லை. படித்தவர்களை உடைய அரசாங்கமும் கவலைப்படவில்லை.

தனி மனிதனுக்கு பொய், திருட்டு, ஆதிக்கம் இவற்றிலிருந்து பாதுகாப்பு வேண்டும். மனிதனின் தேவை, உரிமைகள்  மதிக்கப்பட வேண்டும். தவறு செய்தால் கடுமையான தண்டனையும், தண்டனைபற்றிய பயமும் இருக்கவேண்டும். ஏனென்றால் மனம் தண்டனைக்கு பயந்து கட்டுப்பாடுகளை கடைபிடிக்கும்.

உடல், மூச்சு, மனம், (நான்) அகங்காரம், புத்தி, ஆன்மா என்கிற ஸ்தூல மற்றும் சூக்ஷம இயக்கத்தில் தான் நாம் வாழ்கிறோம். இவை பற்றிய முழு விபரங்களையும் அறிந்து, உணர்ந்து சிறப்பாக பயன் படுத்திக் கொள்ள வேண்டியது அவரவர் கடமையும், பொறுப்புமாகும். இவை ஆரம்ப பள்ளி முதல் உயர்கல்வி வரை அனைத்து பிரிவுக்கும்  பாடமாக இருக்க வேண்டிய ஒரு பொருளாகும். ஆனால் அவைகளை எல்லாம் ஆன்மிகம் சம்பந்தப் பட்டது என்று ஒதுக்கி விட்டோம்.
 
குருகுல கல்வியில் நன்னடத்தை, நியாயம், நன்மதிப்பு, உடல்வலிமை இவைகள் தான் முக்கியமாக போதிக்கப்பட்டது. இன்றைய சூழலில் இம்மாதிரி கல்வியை நாமாக, நம் மனதிற்கு கொடுத்தால் மட்டுமே உண்டு. தற்போது மேலை நாட்டு நாகரீகம் நம் நாட்டு நாகரீகத்தை இல்லாமல் செய்து கொண்டிருக்கிறது. இதனால் தற்போதைய நம் நாட்டு மக்கள் முக்கியமாக மது, காதல், திருமணபந்தம், பரஸ்பரம் மரியாதை போன்ற வற்றில் சரியான, உறுதியான முடிவெடுக்கும் தன்மையை இழந்து வருகிறார்கள். அதனால் சிறு வயதிலேயே தோல்வி, நோய், சிக்கல், பிரச்சனை என  வாழ்க்கையை கழிக்கிறார்கள்.

குருகுல கல்வி  பாடத்திட்டம் உடல், மூச்சு, மனம், நான், புத்தி இவைகளை மையமாக வைத்து இருந்தது. மனிதனை நியாயம் உள்ளவனாக வாழ உருவாக்கியது. தற்போதைய கல்வி பணம் சம்பாதிப்பதை மட்டுமே மையப்படுத்தி அநீதி வளர காரணமாய் இருக்கிறது.

முற்காலத்தில் குடும்ப பெரியவகள் தன்னலம் கருதாது நியாயத்தை மட்டுமே பேசி குடும்ப பிரச்சினை களுக்கு தீர்வு சொன்னார்கள். ஊர் பெரியவர்களும் நியாயத்தை மட்டுமே பேசி ஊர் பிரச்சினைகளுக்கு  தீர்வு சொன்னார்கள். தேசியத் தலைவர்கள் சுயநலமின்றி நாட்டுப் பிரச்சினை களுக்காக உழைத்தார்கள். மதத்தலைவர்களும் சுயநலமற்று தனக்கு தோன்றும் உண்மைகளை மட்டுமே பேசி ஆன்மீக வ்ழி காட்டினார்கள். தற்காலத்தில் அது போன்ற பெரியவர்களுக்கு தட்டுப்பாடு உண்டாயிற்று.

நம் ஊரில் சுயமுன்னேற்ற பயிற்சியாளர்கள் பலர் பயிற்சி நடத்துகிறார்கள் . மக்கள் அனைவரும் அம்மாதிரி பயிற்சிகளில் சேர்ந்து கல்வி கற்க வேண்டும்.  குறிப்பிட்ட கால இடைவெளியில் திரும்ப, திரும்ப அப்பயிற்சிகளில் சேர்ந்து பலன் பெறவேண்டும். அதிலுள்ள ஈடுபாட்டை பொறுத்தே மாற்றங்கள் இருக்கும்.

பிரச்சினைகள் சிறியஅளவில் இருக்கும் போதே கவுன்சிலிங் கொடுப் பவர்களை  தேடிச்சென்று பிரச்சினைகளை மறைக்காமல் சொல்லி அறிவுரை பெறவேண்டும். அதை நம்பி கடைபிடிப்பதை பொறுத்தே மாற்றங்கள் இருக்கும்.

நம்ம ஊரில் வாழ்ந்த ஞானிகளும், தற்கால ஆன்மீக வாதிகளும் நமது பிரச்சினை களுக்கு சொல்லும் தீர்வு யோகப் பயிற்சியாகும்.    யோகப் பயிற்சியை  எட்டு பாடங்களாக பிரித்திருக்கிறார்கள். அதில் நமக்கு தேவையானதை நாம் பயிற்சி எடுத்துக்கொள்ளலாம். அதிலுள்ள வைராக்கியம், ஈடுபாடு, பயிற்சி, அனுபவம் போன்றவற்றால் மட்டுமே மாற்றம் ஏற்படும்
.
1.இயமம் :- அறம் பற்றியது
2.நியமம்:-அறத்தை பயிற்சி செய்வது.
3.ஆசனம்:-பயிற்சியின் மூலம் உடலை ப்பேணுவது
4.பிராணயாமம் :-மூச்சுப்பயிற்சி
5.பிரத்யாகரம் :-தன்னை அறிதல்
6.தாரணை:-ஒரேசிந்தனையில் .இருப்பது
7.தியானம் :-எண்ணுவதை நிறுத்தி பேரமைதியில் இருப்பது.
8.சமாதி:-உடலையும்,மனதையும் மறந்து  சிந்தனைகளற்ற  பேரானந்த                     உணர்வில் இருப்பது.

இவ்விதக்கல்வியும்  வாழ்க்கையும்  இயற்கையை மாசுபடுத்தாது. பிற உயிர்களை அழிக்காது. மருத்துவம் எளிமையானதாக இருக்கும்.பிற உயிரினங்களைப்போல் பிறப்பு, வாழ்க்கை, முதுமை, மரணம் மிகச்சாதாரணமாக போய்க்கொண்டிருக்கும். இயற்கை பாதிக்காதவாறு வளர்ச்சியும், முனேற்றமும் இருந்திருக்கும்.

பாலில் தண்ணீர் எளிதில்  கலந்துவிடுவது போல், மனதில் தவறான உணர்வுகள் எளிதில் கலந்துவிடும். சமய, சந்தர்ப்பம்  கிடைக்கும் போது தனக்கு தெரியாமலே  அந்த தவறான உணர்வுகள் செயலாகி இருக்கும். ஆணவம், சுயநலம், பொறாமை, சாமர்த்திய பேச்சு  ஆகிய இந்த பெரும்பாலான   நான்கு தவறான உணர்வுகளும் மிக எளிதாக மனதுள் கலந்துவிடும். உறவுகளில் விரிசல்கள் ஏற்பட்டு பிரிவுகள் ஏற்பட தவறான உணர்வுகளின் செயல்பாடே முக்கிய காரண மாக இருக்கிறது.

ஆணவம் :- நானே மேலானவன், நான் நினைப்பதே நடக்கவேண்டும்.(நியாயத்துக்கு இடம் கிடையாது)

சுயநலம் :- எனது காரியம், ஆசை, சுகம், சொகுசு, லாபம், புகழ், தான் முக்கியம். (நியாயத்துக்கு இடம் கிடையாது)

பொறாமை:-அடுத்தவன் என்னை மிஞ்சிவிடக்கூடாது, (நியாயத்துக்கு இடம் கிடையாது)

சாமர்த்திய பேச்சு:-முக்கிய மான சிலஉண்மைகளை மறைத்து,  தனக்கு சாதக மான சில உண்மைகளை மட்டும் பேசி வழக்காடுவது. (நியாயத்துக்கு இடம் கிடையாது)

இது மாதிரி தவறான குணங்கள் தன்னிடம் இருப்பதை உற்று கவனித்து அறிந்து கொள்வதே தன்னை அறிதல். அவைகளை தன்னிடமிருந்து களைவதே தன்னை சரிப்படுத்தல். சிலர் சிறிய வயதிலேயே தன்னை உற்று கவனித்து தன்னை சுத்தப்படுத்தி பிறருக்கு பயனாய் வாழ்ந்தார்கள். சிலர் பெரியவர் களாகியும், சிலர் முதுமையிலும் தன்னை அறிந்தார்கள். பலர் கடைசிவரை தன்னை அறியாமல் வாழ்ந்து  மறைகிறார்கள்.      


            -------------------------------------------------------------

Thursday, 19 March 2015

இயற்கையின் நியதி -5 ( The Law of Remedy)

                                      இயற்கையின் நியதி - 5
                                                     ( The Law of Remedy)

தென் இந்தியாவில் ஒரு பிரபல தொழில் அதிபர். தொழில் மூலம் நிறைய வருமானம். மிகவும் கண்டிப்பானவர். பரிவு, மன்னிப்பு, இரக்கம் என்பது அவரிடம் கிடையாது. சிறு தவறு நடந்தால் கூட வேலையி லிருந்து நிறுத்திவிடுவார். வியாபாரம் மிகச்சிறப்பாக போய்க்கொண்டிருந்தது.

அவருக்கு இரண்டு மகள்கள். மகள் களுக்கு திருமணம் செய்து வைத்தார். மிகக்குறுகிய காலத்தில் இரண்டு மகள்களும் விதவையாகி விட்டார்கள்.

வேதனையில் துடித்தார் .தூக்கம் இழந்தார்.சாப்பாடு பிடிக்கவில்லை. தன்னுடைய மனக்கஷ்டத்திர்க்குரிய காரணங்களை ஆராய்ந்தார். சுயவிசாரணை செய்தார்.இதுதான் காரணமாக இருக்குமோ என சில சம்பவங்கள் அவரை உறுத்தியது.இதற்கு என்ன செய்வது என்று யோசித்தார்.

தான் தொழில் நடத்தி வந்த இடத்தில் கல்வி, மருத்துவம்,உணவகம்,என அமைத்து மிக குறைந்த விலையில் மிக உயர்ந்த தரத்தில் பொதுமக்களுக்கு வழங்கி அவர்கள் மகிழ்ச்சியாய் வந்து,போவதை பார்த்து திருப்தி படுகிறார்.

தென் தமிழ் நாட்டில் இரண்டு நண்பர்கள். ஒருவர் ஒரு சொத்து ஒன்று வாங்கு கிறார். சில காரணங்களுக்காக அதை தன்  நண்பர் பெயரில் பதிவு செய்து, நண்பரிடம் எனக்கு தேவைப்படும்போது இந்த சொத்தை என் பெயரில் பதிவு செய்து கொடு என்கிறார். நண்பரும் சரி என்கிறார்.

காலம் கடந்தது.ஒரு நாள் சொத்தை தன பெயரில் பதிவு செய்யவேண்டும் என்று கேட்கிறார். நண்பர் முடியாது என மறுத்து விடுகிறார்.

சொத்தை தர மறுத்தவருக்கு இரண்டு மகன்கள.இருவருக்கும் திருமணமாகி மனைவி குழந்தைகள் இருக்கிறார்கள்.

சில வருடங்களில் சொத்தை தர மறுத்தவரும்,சொத்தை வாங்கியவரும் இறந்து விடுகிறார்கள்.சொத்தை தர மறுத்தவரின் இரண்டு மகன்களும் ஒருவர் பின் ஒருவராக இளம் வயதில் சாலை விபத்தில் இறந்து விடுகிறார்கள்.

சொத்தை தரமறுத்தவரின் பேரப்பிள்ளைகள் நிம்மதி இழந்து சோகத்தில் ஆழ்ந்தார்கள்.யாரோ ஒருவர் குழந்தை களிடம் மேற்கண்ட விபரத்தை கூறி நட ந்த அகால மரணங்களுக்கு  அதுவாக கூட காரணமாயிருக்கலாம் என தங்கள்  மனதில் தோன்றியதை சொன்னார்கள்..

அது மாதிரி சொத்து நமக்கு வேண்டாம் என்று குழந்தைகள் முடிவெடுத்து, சொத்தின் உரிமையாளரின் வாரிசுக்கு அதை திருப்பி கொடுத்து விட்டார்கள்.

மேற் படி நடந்த இரண்டு நிகழ்ச்சிகளைப்போல் பலரும் பல நிகழ்ச்சிகளை கூறுவார்கள்.வெளியில் இருந்து பார்க்கும் போது தெளிவாக  தெரிவது நமக்கு நடக்கும்போது நமக்கு தெரிவதில்லை. நாம் ஏதாவது காரணங்களை கூறி நமக்கு நடப்பதை  நியாயப்படுத்திக் கொள்கிறோம். எல்லா தவறு களுக்கும் பரிகாரம் உண்டு.

நமது வாழ்க்கையிலும், மகிழ்ச்சியிலும் அக்கறை உடையவர்கள் நம்முடைய தவறுகளை எடுத்துச் சொல்லும் போது அதை புரிந்து கொண்டு நம்மை நாம் மாற்றிக்கொள்ள முயற்சிக்க வேண்டும். நாம் வருந்தி திருந்த நினைக்கும் போது The Law of Remedy  நமக்கு உதவ முன்வரும். 

மனம் வருந்தி உண்மையை உண்மையாகவே தேடும் போது பரிகாரம் என்ன என்பது தெரியவரும்.அவரவருக்கு அவரவரே தேடிப்பார்த்துக் கொள்ள வேண்டும். அடுத்தவர் சொன்னால் யாரும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.

நடந்த தவறை பிறர் கூறியோ, அல்லது தானாக புரிந்தோ, ஒருவர் உணர்ந்து, வருந்தும் போது அவர் நோகும் படியாக நேரடியாகவோ, பிறரிடம் கூறியோ, பரிகாசம், இளக்காரம் பேசுவதால், அப்படிப்  பேசுபவருக்கு குற்றம் சேருகிறது.  
எல்லா செயல்களும்  காரணம்-காரியம்-பின்விளைவு-பரிகாரம் என்னும் சட்டத்துக்குட்ப்பட்டது.

                                     ----------------------------------------------------



                    
  

Tuesday, 17 March 2015

நீரேற்றம் (HYDRATION)

                                               நீரேற்றம்   (HYDRATION)

உடல் தண்ணீரை பயன் படுத்திக் கொள்ளும் திறனை நீரேற்றம் ( hydration  ) எனலாம். உடலில் ஓவ்வொரு செல்லின் இயக்கத்திலும்  தண்ணீரின் பங்கு இருக்கிறது. தண்ணீரை  குடிப்பதோடு மட்டுமல்ல, அதை உடலிலுள்ள செல்கள் எவ்வாறு பயன் படுத்திக்கொள்கின்றன என்பது நீரேற்றத்தின்
 ( hydration  ) உயர்ந்த நிலை.ஒவ்வொரு செல்லும் தனக்கு வரும்  உணவை தன இயல்பான குணமாக மாற்றி, கழிவுகளையும், நச்சுக்களையும் வெளியேற்ற தண்ணீர் உதவியாக இருப்பதும்  நீரேற்ற த் ( hydration )திற்கு உட்பட்டது

உடலில் சரியாக நீரேற்றம் நடக்காதபோது செல்களில் கழிவுகள் வெளியேற்றப் படாமல் நச்சுக்கள் தேங்கி அதிக மாகி விடுகின்றன நீரேற்றம் ஆரோக்கியமான உடலுக்கு மிக முக்கியமான ஒரு இயக்கம்.தண்ணீருக்கு உடல் இயக்கத்தில் பல பங்குகள் இருக்கின்றன.

உடலில்,செல் மற்றும் திசுக்கள் அமைய அதன் வடிவம் அமைய தண்ணீருக்கு முக்கிய பங்கு உண்டு. தண்ணீர் உடலின் உட்பாகங்களில் ஏற்படும் வெப்பங்களை கடத்தி உடலின் மேற்பரப்பிற்கு கொண்டு வந்து வெளியேற்றுகிறது.செல் களின் வளர் சிதைக்காக நடக்கும் இராசாயன மாற்றங்களில் தண்ணீர் பெரும் பங்கு வகிக்கிறது.சத்துக்கள் உடல் முழுவதும் சென்றடைய தண்ணீர் உதவுகிறது.செல்களுக்கு உணவினை கொடுத்து,கழிவுகளை அப்புறப்படுத்த தண்ணீர் உதவுகிறது.உடலின் இயக்கத்திற்கு தண்ணீர் மிக முக்கியமான சத்துள்ள உணவாகும்.

ஏனைய உணவுகளான கார்போஹைட்ரேட்,புரோட்டீன், கொழுப்புகள், வைட்டமின், தாதுக்கள், அனைத்தும் உடலில் சத்தாக மாற போதுமான அளவு தண்ணீரின் இருப்பை பொறுத்தே நடைபெறுகிறது.

 உணவு ஜீரணத்திற்கு நேரடியாக தண்ணீர் தேவையில்லை.ஆனால் உணவை  ஜீரணிக்கும் அமிலங்கள், என்ஸைம்கள் போன்ற திரவங்கள் மூலம் தண்ணீர் தேவைப்படுகிறது.அவைகளில் தண்ணீர் நிறைய இருக்கிறது.உடலில் நீரேற்றம் சிறப்பாக இருக்கும் போது ஜீரணம் நன்றாக நடைபெறுகிறது. ஜீரணமான உணவுக்குழம்புகள் தண்ணீருடன் இரத்தத்தில் உறிஞ்சப்படுகிறது.

இரத்தத்துடன் உள்ள தண்ணீர் செல்களுக்கும் ,உடலின் மின்சக்தி செயல் களுக்கும், உடல் எதிர்ப்பு சக்தி பெறவும், ஹார்மோன் உற்பத்திக்கும், பயன்படுகிறது.

உடலில் ஆங்காங்கே யுள்ள கழிவுகளை குடல்,சிறுநீரகம், தோல்,நுரையீரல் வழியாக வெளியேற்ற தண்ணீர் உதவுகிறது.இந்த செயல்களெல்லாம் உடலில் சரியாக நடைபெற நீரேற்றம் ஒழுங்காக இருக்கவேண்டும்.

தண்ணீர் இரத்தத்துடன் சேர்ந்து செல்கள் இயக்கத்துக்கு உதவியாய் இருப்பதை நீரேற்றம் எனவும் தண்ணீர் பற்றாக்குறையால் அந்த வேலைகள் நடைபெற முடியாமல் இருப்பதை நீரேற்றமின்மை( de-hydration )எனவும் கூறலாம்.

 நீறேற்றமின்மை ஏற்படும்போது செல்களுக்கு உணவுகிடைக் காமலும், செல்களிலிருந்து கழிவுகள் அகற்றப்படாமலும் ஆகி உடல் ஆரோக்கியம் கெடுகிறது.

 காய்ச்சல்,வாந்தி,பேதி,மதுவினால் அதிகம் சிறுநீர் வெளியேறுவது,போன்ற வற்றால் உடலில் நீரேற்றமின்மை(de-hydration) ஏற்பட காரணமாகிறது.

ஒவ்வொரு உணவு இடைவேளையிலும் தாகம் இல்லாதபோதும் தினசரி 2 முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும்

கடையில் விற்கும் பாட்டில்  பழரசங்களை,குளிர் பானங்களை தவிர்க்க வேண்டும்.  அவற்றில்  சத்துக்கள் எதுவும் கிடையாது,மாறாக அதிக இனிப்பு,அதிக உப்பு, பழரசங்களின் வாழ்நாளை கூட்டும் இரசாயனங்கள் போன்ற வை கள் சேர்க்கப் பட்டிருக்கும்

                                   ---------------------------------------------------------
   

மின்பகுப்பு( ELECTROLYTE )

                                        மின்பகுப்பு( ELECTROLYTE )


ஒரு வித மின்சக்தியானது உடலை இயக்குகிறது .மின்பகுப்புகள் மின்சக்தியை கடத்தி உடலை இயங்கச்செய் கிறது.

உடல் இயக்கத்தில் அனைத்து உறுப்புகளும் தங்களுக்குள் மின்சக்தி மூலமே செய்திகளை பரிமாறிக்கொள்கின்றன.

உடலில் பல விதமான இராசயனங்கள் இருக்கின்றன.இவைகள் +  ve - ve எலெக்ட்ரிக் சார்ஜ் உடையவை.இவை தண்ணீரில் கரையும் போது + ve - ve ஆக பிரிகின்றன.சோடியம்,பொட்டாசியம்,மெக்னீசியம்,கால்சியம் போன்றவைகளில் + veஅயான் களும் குளோரைடு , பாஸ்பேட், பைய்க் கார்பனேட்  போன்றவைகளில்  - ve  அயான் களும் உள்ளன.+ ve  - ve  அயான் களால் உடலில் மின்பகுப்பு நடைபெறுகிறது.

சோடியத் தில் அதிக+  ve எலெக்ட்ரிக் சார்ஜ் இருக்கிறது.பொட்டாசியத்தில் குறைவான +  ve எலெக்ட்ரிக் சார்ஜ் இருக்கிறது.நாம் ஓய்வாக இருக்கும் போது செல்களுள் பொட்டாசியம் நுழைகிறது.நாம் உழைப்பாய் இருக்கும் போது செல் களுள் சோடியம் நுழைகிறது.

உடலில் இந்த மின் உற்பத்தி நடைபெறுவதற்கு வேண்டிய மூலகங்கள் நாம் உண்ணும் உணவிலிருந்தே கிடைக்கின்றன.தாவர உணவு களிலிருந்து கிடைக்கும் மூலகங்களையே உடல் ஏற்று க்கொள்கிறது

உடலில் தாதுக்களுக்கு குறைவு ஏற்பட்டால் மின்பகுப்பில் பிரச்சினை ஏற்படும். உடலில் தாதுக்கள் அதிகமாகிவிட்டால் சிறுநீரகம் அதிகமான அளவை வெளியேற்றி மின்பகுப்பை சமநிலையில் வைத்திருக்கும்.
திரவங்களில் கரைந்துள்ளமின்பகுப்பு தாதுக்கள் மின்சாரத்தை கடத்துகிறது உடலில் இரத்தத்தை மையமாக  வைத்து மின்பகிர்வு ஏற்படுகிறது.மின்பகுப்பு குறைபாடு அல்லது சமநிலை பாதிப்பு ஏற்படாதவாறு உடலை பார்த்துக் கொண்டால் உடலில் மின்பகுப்பு ஆரோக்கியமாக இருக்கும்.

உடல் சோர்வு முதல் அறிகுறி.உடலில் போதுமான சக்தியில்லாத போது             உ டல் இயங்க மறுக்கும் .மின்பகுப்பு உடல் இயக்கத்திற்கு முக்கியமானதாக இருக்கிறது. இதுவே உடல் இயக்கத்தை சமநிலையில் வைத்திருக்கிறது. முக்கிய மான மூலகங்களுக்கு உடலில் தட்டுப்பாடு ஏற்படுமானாலும் , அளவுக்கு அதிக மாகி விட்டாலும் உடல் சமநிலையை இழக்கிறது

மின்பகுப்பு உடலில் சமநிலையில் இருக்கும் போது நோய எதிர்ப்புச் சக்தி நன்றாக இருக்கும்.    மனித ஆரோக்கியத்தில் பல முக்கிய செயல் களுக்கு மின்பகுப்பு உதவியாக இருக்கிறது.

இருதயம்,நரம்பு,தசைஒத்துழைப்பு,உடல் திரவத்தை உறிஞ்சிக்கொள்வது சுரப்பிகளுக்கும் மூளைக்கும் செயல்களுக்கும் தொடர்பை ஏற்படுத்துவது  போன்ற பல முக்கியமான  செயல்களுக்கு மின்பகுப்பு சமநிலை மிகவும் உதவுகிறது.மின்பகுப்பு தனது  சமநிலை யை தவறும்போது உடலில் மோசமான விளைவுகள் ஏற்படுகின்றன.பல அவையவங்கள் செயல்பட மறுக்கின்றன.

 வாந்தி,பேதி,வியர்வை,போன்றவற்றால் மின்பகுப்பு சமநிலையில் பாதிப்பு ஏற்படும். அது மாதிரி சமயங்களில் சாதம் வடித்த நீரில் சிறிது உப்பு போட்டு கொஞ்சம்,கொஞ்சமாக(small feeding) குடித்துக் கொண்டிருப்பது  மின்பகுப்பை  சமநிலைக்கு கொண்டுவரும்.கைக்குழந்தை களுக்கு இதை பழக்கப்படுத்தி விட்டால் வாந்தி,பேதி, காய்ச்சல் சமயங்களில் மிகவும் சிறந்த உணவாகவும் ,மருந்தாகவும் இருக்கும்.

நமது உடலுள்  மின்சார உற்பத்தி நடைபெறுகிறது.உடலில் வயர் வழியாக மின்சாரம் போகவில்லை ,அதற்கு பதில் ஒரு செல்லிலிருந்து அடுத்த செல்லுக்கு தாவித்தாவி அது அடையும் இடத்துக்கு போய் சேருகிறது கையிலிருந்து மூளைக்கும் மூளையிலிருந்து கைக்கும் இப்படித்தான் தகவல்கள் நடக்கிறது.இந்த தகவல்கள் மிக வேக மாக நடைபெறுகிறது. உடலிலுள்ள ஒவ்வொரு செல்லாலும்  மின் சாரத்தை தயார் செய்ய முடியும்.

காய்,கனி,தண்ணீர் இவைகளை தினமும் தேவையான அளவு எடுத்துக் கொண்டால் உடலுக்குத்தேவையான மின்பகுப்பு மூலகங்கள் கிடைத்துவிடும்.

                                             ---------------------------------

Sunday, 15 March 2015

வளர்சிதைமாற்றம் (Metabolism)

                                  வளர்சிதைமாற்றம் (Metabolism)

உயிருள்ள ஜீவனின் உள்ளே நடக்கும் இரசாயன மாற்றங்களை வளர்சிதைமாற்றம் என்கிறார்கள்.ஆகாரத்தை உட்கொண்டு சக்தியை வெளிப்படுத்துவது ஜீவனினால் ஏற்படும் வளர்சிதைமாற்றமாகும் .குறிப்பாக சொல்வதென்றால் செல்கள் உணவை சக்தியாக உற்பத்தி செய்வதை வளர்சிதைமாற்றம் எனலாம்.

உயிருள்ள  ஒரு ஜீவனின் உடலில் மூன்று வித செயல்கள் நடைபெறுகிறது. உயிருள்ள ஜீவனின் உடலில் பராமரிப்பும்( Maintenance),உடலைச் சரிப் படுத்தலும் ( Repair ),உடலை வளர்ச்சிப்படுத்தலும்( Growth )   இந்த வளர்சிதை மாற்றத்தால் நடை பெற்றுக் கொண்டி ருக்கிறது.

செல்கள் என்பது நுண்ணுயிர் தன்மையானது  எல்லா ஜீவன்களும் ( Organism ) செல்களின் கூட்டாகும்.பாக்டீரியா என்பது ஒரு செல் ஜீவன்.

செல்கள் உணவை எடுத்துக்கொண்டு அதை சக்தியாக கொடுக்கும் வளர்சிதை மாற்றத்தைச் செய்கிறது. ஒரு செல்லுக்குள் நடக்கும் வளர்சிதை மாற்றத்தை செல் வளர்சிதை மாற்றம் என்கிறார்கள்.ஒவ்வொருசெல்லும் ஒரு ஜீவனாகும். ஒவ்வொரு வகையான செல்லும் அதற்கென்று உரிய வேலையை செய்கிறது. பலவகையான செல்கள் பலவகையான வேலைகளை செய்கிறது. மூளைசெல், நாக்கிலுள்ளசெல், இரத்தத்திலுள்ளசெல், தோல்செல், கல்லீரல்செல், என பல கோடிக்கணக்கான செல்கள் உடலில் காணப்படுகிறது

.இறந்த செல்களை இரத்தத்திலுள்ள வெள்ளை அணுக்கள் உடலிலிருந்து வெளியேற்றும் வேலையை செய்கிறது.

வளர்சிதைமாற்றம் சத்து சம்பந்தப்பட்டது. சத்து வளர்சிதையின் சாவி. உடலுக்கு தேவையான சக்திகிடைக்க சத்துக்கள் இருக்கவேண்டும். அது இல்லாதபோது உடலில் ஆரோக்கியம் குறைகிறது.

உணவில் கார்பன், ஹைட்ரஜன், நைட்ரஜன், ஆக்சிஜன், பாஸ்பரஸ், சல்பர் போன்ற கிட்ட தட்ட இருபது தனிமங்கள் தேவைப்படுகின்றன.

உடலுக்கு அதிகமாகத்தேவைப்படுவது கார்போஹைட்ரேட் ,கொழுப்பு ,புரதம், வைட்டமின், தாதுக்கள்,தண்ணீர், ஆக்சிஜன்,  இவைகளுடன் சேர்த்து உடலில் உற்பத்தியாகும் என்ஸைம்கள் (கிரியா ஊக்கி  )போன்றவை ஆகும். இதில் கார்போஹைட்ரேட் என்பது நார்ச்சத்துடன் கூடிய சுகர் மற்றும் ஸ்டார்ச் ஆகும்.
நாம் உண்ணும் உணவின் தரத்தை ப் பொறுத்து புதிய செல்கள் உருவாகின்றன .உண்ணும் உணவு தரமில்லாதபோது பலவீனமான அல்லது ஒத்துழைக்காத செல்கள் உற்பத்தியாவதால் பலவிதமான ஆரோக்கிய குறைவுகள்  ஏற்படுகின்றன.
                                              ----------------------------------------

Saturday, 14 March 2015

நார்ச்சத்தும் ஆரோக்கியமும்

                                 நார்ச்சத்தும் ஆரோக்கியமும்   

நாம் உண்ணும் தாவர உணவுகளில் இயற்கையாகவே நார்ச்சத்துக்கள் இருக்கின்றன. நார்ச்சத்துக்கள் தாவரங்களின் ஒரு பாகம். அவைகளை நாம் உண்ணும் போது நமது ஜீரணத்தில் அவைகள் உடைவதில்லை. அவைகள் ஜீரணிக்காமலே உணவுப்பாதையை கடந்து வெளியேறுகின்றன.

எல்லா நார்ச்சத்து உணவுகளும் இரண்டு வகையாக இருக்கிறது.ஒன்று நீரில் கரைவது ( soluble ).இரண்டாவது நீரில்கரையாதது.( insoluble ).நம் உடலில் ஜீரணம் ஆரோக்கியமாக நடைபெறுவதற்கு இரண்டு வித நார்ச்சத்துக்களும் அவசியமாகிறது.

இவை இருதய நோய் ,சுகர் ,அதிக உடல் எடை,மலச்சிக்கல் போன்ற வற்றை தடுக்கிறது.

நீரில் கரையும் நார்ச்சத்து வயிற்றில் தண்ணீரை உறிஞ்சி ஒரு ஜெல்  ( jel ) போன்று ஆகி ஜீரணத்தை தாமதப்படுத்துகிறது. வயிறு காலியாவதை தாமதப்படுத்துவதால் நாம் நீண்ட நேரம் பசி ஏற்படாமல் இருக்கிறோம். இதனால் உடல் எடை குறைகிறது.மேலும்  இரத்தத்தில்  சுகர் குறைந்து இன்சுலின் தேவை குறைகிறது.இது டியாபெட்டிஸ் நோயை கட்டுப்படுத்த உதவுகிறது.மற்றும் உணவிலுள்ள கொழுப்பை உறிஞ்ச விடாமல் தடுத்து ரத்தத்தில் கொலஸ்டிராலை குறைக்கிறது.

தோல் அல்லது தவிடுடன் கூடிய ஓட்ஸ்,பயறுகள் மற்றும் தோலுடன் கூடிய ஆப்பிள், நட்ஸ், ஆழிவிதை, வெள்ளரி,கேரட்,போன்ற வற்றில் நார்ச்சத்து காணப்படுகிறது.

நீரில் கரையாத நார்ச்சத்துக்களை குடல் ஆரோக்கிய நார்ச்சத்து என்கிறார்கள். இவை குடலில் கழிவுகளை தங்க விடாமல் வெளியேற்றுகிறது.மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள உதவுகிறது.இவை நீரில் கரை வதில்லை. குடலில் உணவுகள் தேங்காமல் பார்த்துக் கொள்கிறது.குடலில் தேங்கும் கழிவுகளை விரைவாக வெளியே தள்ளுகிறது. நீரில் கரையும் நார்ச்சத்து ஜீரணமாகாததால், உணவிலுள்ள கொழுப்புச் சத்துக்கள் நார் துகள்களின் மீது ஒட்டிக் கொண்டு வெளியேறி விடுகிறது.இதனால் ரத்தத்தில் கெட்டக் கொழுப்பு ( LDL  ) குறைகிறது.

நார்ச்சத்து குடலில் ஆரோக்கியமான பாக்டீரியாக்களை உற்பத்தி செய்கிறது. குடலில் கோடிக்கணக்கான நன்மை செய்யும் பாக்டீரியாக்கள்  உள்ளன.  
அதிக அளவு ஆரோக்கியத்திற்கு இரண்டு வகை நார்ச்சத்துக் களையும் உண்ண வேண்டும்

அதிகமான நார்ச்சத்து வாயு,குடற்சுளுக்கு போன்ற தொல்லைகளை ஏற்படுத்தும் உணவில் நார்ச்சத்தை படிப்படியாய் கூட்டவேண்டும் .அல்லது வாயு,பேதி போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.
பழம் ,காய்,முழுத்தானியங்களில் தோலை வீணாக்காமல் இருந்தாலே தேவையான நார்ச்சத்து கிடைத்து விடும்.
                                           ----------------------------------

Tuesday, 3 March 2015

உணவுகள் இயற்கை த்தன்மை இழக்கும் விதம்

       உணவுகள் இயற்கை த்தன்மை இழக்கும் விதம் 

பொதுவாக உணவுப்பொருட்கள் சுற்றுப்புறத்தை உறுஞ்சி தன்னை மாற்றிக் கொள்ளும் தன்மை உடையது. ஈரப்பதம், வெளிச்சம், வெப்பம், காற்று (Oxidation) அதைக்கொன்டிருக்கும் பாத்திரம் ( அலுமினியம்,இரும்பு,பித்தளை, காகிதம், பிளாஸ்டிக், வாழைஇலை, மண்சட்டி ) போன்ற வற்றால் உணவின் தன்மை கெட்டுப்போகவோ, நன்றாக இருக்கவோ செய்கின்றன.

முழுதாக இருக்கும் விதைகள், தானியங்கள் விரைவில் கெட்டுப்போவதில்லை.


அதையே பொடி பண்ணும் போது ஈரப்பதம், வெளிச்சம், வெப்பம், காற்று, பாத்திரம் போன்ற வற்றால்   விரைவாக கெட்டு விடுகிறது.

தானியங்களின் தோலை நீக்கவும், சுத்தப்படுத்தவும், தீட்டவும்,மாவாக்கவும், ஜலிக்கவும கடந்த 150 வருடங்களில் பல்வேறு இயந்திரங்கள் கண்டு பிடிக்கப் பட்டு உபயோகத்தில் இருக்கின்றன.

தானியங் களின் தோலில் தான் அதிக சத்துக்கள் இருக்கின்றன. தானியங்களை மாவாக்கி ஜலிக்கும் போது அதன் தோல், முளை போன்றவைகள் அகற்றப் படுகின்றன. அதனால் பல சத்துக்கள் இழந்து போகின்றன. உணவு தானியங்களை குறைவாக சுத்திகரிக்கப்படும் போது, ஆரோக்கியம் நிறைவாக இருக்கிறது.

சுத்திகரிப்பால் வைட்டமின்  B   குடும்பம் முழுவதும் பிரிந்துபோய் விடுகிறது.அதனால் நரம்பு மண்டலத்துக்கு கிடைக்கவேண்டிய சத்துக்கள் கிடைப்பதில்லை.

மன அழுத்தம் அதிகமாகும் போது மூளையும் ,நரம்பு மண்டலமும் ஈடுகொடுக்க வைட்டமின்  B  சத்துக்கள் தேவைப்படுகின்றன.தொடர்ந்து சுத்திகரிக்கப்பட்ட உணவுகளையே அதிகம் உண்ணும்போது தனக்கு கிடைக்க வேண்டிய சத்துக்கள் கிடைக்காமல் உடல் நோய்வாய்ப் படுகிறது.

முக்கியமாக  உணவுகளிலுள்ள வைட்டமின் A  E  C         (ஆன்றி ஆக்சிடன்ட் ) நார்ச்சத்து, செலினியம், துத்தநாகம், போன்றவை அழிந்து போகின்றன. கரும்புச் சாறு தனது குரோமியம், மெக்னீசியம், கோபால்ட், செம்பு, துத்தநாகம், மாங்கனீஸ் போன்றவைகளை  இழந்து வெள்ளை நிற சீனீ யாகி விடுகிறது.

முழுத்தானியம் தன்னிடம் உள்ள கால்சியம், பாஸ்பரஸ், பொட்டசியம், சோடியம்,  இரும்பு, மாலிபீடினம், செலினியம் போன்ற வற்றை இழந்து வெள்ளை நிற மாவாகிறது. சிகப்பு நிற கைகுத்தல் அரிசியே ஆரோக்கியமான உணவு.  தவிடு,முளை போன்ற வற்றை நீக்கி வெறும் ஸ்டார்ச்சை மட்டும் உண்பதால் கணையத்தின் பளு அதிக மாகிறது.இது இரத்தத்தில்  சுகர்  அதிகமாக காரணமாகிறது.

உணவின்  நிறம், மணம், சுவையை கூட்டவும் வாழ்நாளை நீட்டிக்கவும் பலவதமான இரசாயனங்களை  அடிட்டிவ்ஸ் (additives) என பெயரிட்டு அவைகளை உணவில் சேர்க்கிறார்கள். இவை உணவிலுள்ள நன்மை செய்யும் கிருமிகளுக்கு எதிரியாகிவிடுகின்றன.இவை மனிதனுக்கு நன்மை செய்வதில்லை மாறாக கெடுதலையே செய்கின்றன. .இயன்றவரை பாதுகாக்கப்பட்ட உணவுகளையும், அடிட்டிவ்ஸ் சேர்க்கப்பட்ட உணவு களையும் தவிர்த்து விடவேண்டும்.முழுத்தானிய உணவு களையும், உள்ளூர் காய்,கனி,கீரை,சீட்ஸ்,நட்ஸ் உணவுகளையும் விரும்பிச் சாப்பிட வேண்டும்.

தானியங்கள், எண்ணெய் போன்ற உணவுகளை சுத்திகரிக்கும் செயல்முறையின் போது ஏற்படும் வைட்டமின், தாது சத்துக்களின் இழப்புக்களை திரும்பவும் இரசாயன முறையில் உணவுப் பொருட் களுடன் சேர்க்கிறார்கள். ஆனால் அதுமாதிரியான சத்துக்களை உடலானது ஏற்றுக் கொள்வதோ,பயன்படுத்திக்கொள்வதோ இல்லை.                 .

உணவு களை அதிகம் சூடாக்கும் போதும், ஹை ட்ரோஜினெஷன் செய்யும் போதும் உணவு தன் இயற்கை தன்மையை இழந்து விடுகிறது.அதிக வெப்பம் காரணமாக எண்ணெய், தானியங்கள், போன்றவைகள் தன்னிடம் இருக்கும் வைட்டமின், தாது சத்துகள், ஒமேகா 3, 6, போன்ற வற்றை இழந்து விடுகின்றன.சாக்லேட்,சீனி போன்றவை உடலுக்கு அதிக கலோரியை கொடுக்கிறது. சூட்டினால் தரமான எண்ணைகள் மாறிய கொழுப்பாக மாறி (Trans fat )உடலில் கெட்ட கொழுப்பை அதிகப்படுத்து கின்றன.

 பழங்களின் மீது குறிப்பிட்ட அளவு காமா கதிர் களை (Gamma rays ) செலுத்து கிறார்கள்.அந்த கதிர்கள்  கிருமிகளையும்.பூச்சிகளியும்,புழுக்களையும், வைட்டமின்களையும்  அழித்து புள்ளிகள் பரவாமலும் தடுத்து விடுகிறன இதனால் பழங்கள் மேலும் கனிவதும் ,முளை யிடுவதும் போன்ற இயற்கை செயல்கள் தடுக்கப்படுகின்றன.பழங்கள் நீண்ட நாட்கள் வரை கெடாமல் இருக்கின்றன.வியாபார நோக்கத்தில் இது செய்யப்படுகிறது.

 பழங்களின் தோலில் சுருக்கம் ஏற்படாமல் நீண்டநாள் வழவ்ழப்பாக இருக்க மெழுகை பூசுகிறார்கள் இதனால் பழங்கள் கவர்ச்சியாக இருக்கின்றன. ஆனால் அது உடல்நலத்துக்கு நல்லதல்ல

பழங்கள் தானாக பழுக்கும் வரை பொறுத்திருக்காமல் காய் பருவத்திலேயே அறுவடை செய்து அதனுடன் கார்பைடு கற்களைப் போட்டு வைத்து விடுகிறார்கள்.அதனால் பச்சைத்தோல் களில்  இரசாயன மாற்றம் ஏற்பட்டு பச்சை நிறமானது பழுத்த நிறத்திற்கு மாறிவிடுகின்றன.இதனை தெரியாதவர்கள் பழம் என்று வாங்குகிறார்கள்.ஆனால் அந்த பழங்கள் பழுத்த பழங்களுக்குரிய ருசி யாகவும் இருப்பதில்லை,உடலுக்கும் உபாதை யாகி விடுகிறது.உதாரணம்  மாம்பழங்கள்.

 உணவு பொருட்களை மிக எளிதாகவும், துரிதமாகவும்  சூடு பண்ணுவதற்கு மைக்ரோ ஓவன் பயன்படுத்துகிறோம்.  மைக்ரோ ஓவன்.தத்துவம்  கதர் வீச்சு மூலம் உணவுகளை  சூடுபண்ணுவது. எனவே . மைக்ரோ ஓவன் பயன் படுத்துகிறவர்கள் அதன் பயன் பாட்டை தவிர்ப்பது அல்லது குறைத்துக் கொள்வது நல்லது.


தற்காலத்தில் பிளாஸ்டிக்கின் உபயோகம் வந்த பிறகு உணவுகளை பாக்கிங் செய்ய பெரும்பாலும் பிளாஸ்டிக் கையே பயன்படுத்துகிறார்கள். உணவுகளை பரிமாறுவதற்கும் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறது. பிளாஸ்டிக்கின் மூலப்பொருள் பெட்ரோலியத்தயாரிப் பில் கிடைக்கும் பாலிமர் ( POLYMER ) என்னும்  ஒரு பொருளுடன் பல இரசாயனங்களை சேர்த்து பலவகை பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இதில் LDPE என்னும் பிளாஸ்டிக் உணவுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இதன் உருகும் நிலை 104 டிகிரி  ஆகும். அனைத்து பேப்பர் கப்பினுள்ளும் LDPE லைனிங்  இருக்கும். உற்பத்தியாளர்கள் மூலப்பொருட்களின் தரத்தைப் பற்றியும் சேர்க்கவேண்டிய கலவை விகிதத்தை பற்றியும் கவைப்படுவதில்லை. தரமில்லாத பிளாஸ்டிக்கை  உபயோகப்படுத்தும் போது அவை உணவுடன் சேர்ந்து உடலுள் செல்கின்றன.

விவசாய விஞ்ஞானிகள் பயிர்களின் மரபணுக்களில் மாற்றங்கள் செய்து விளைச்சலை அதிகப்படுத்தலாம் என்று மரபணு மாற்றம் செய்த உணவுகளை உற்பத்திசெய்கிறார்கள். இவ்வகை உணவுப்பொருட்கள் மனிதனுக்கும், விலங்குகளுக்கும் பலவித ஆரோக்கிய குறைவுகளை ஏற்படுத்துகிறது.

முழுத்தானிய மிக்ஸ், நட்ஸ் &சீட்ஸ் மிக்ஸ், உள்ளூர் காய், கனி, கீரை, மூலிகை போன்ற மற்றும் அவைகளை கொண்டு வீட்டில் செய்து உண்ணும் உணவுகளுக்கு ஈடு இணையாக  உடலுக்கு நலம் தரும் உணவுகள் வேறு எதுவும் இல்லை.

வியாபார நோக்கில் வெளியில் கிடைக்கும் தயார் உணவுகளும்,செய்து தரும் உணவுகளும் உடல் நலத்துக்கு உகந்தது அல்ல.

                                ------------------------------------------------