Showing posts with label ஆரோக்கியம். Show all posts
Showing posts with label ஆரோக்கியம். Show all posts

Monday, 1 August 2016

   உடல் எடையயை கட்டுப்படுத்துவது எப்படி 

நம்மில் பலபேருக்கு உடல் எடை அதிக மாகிக்கொண்டு போவதைப் பார்க்கிறோம்.

உடல் உழைப்பிற்கேற்ற உணவு, அல்லது உணவிற்கேற்ற உடலுழைப்பு என்கிற சமநிலை தவறி  தேவைக்கு அதிகமான அளவு உணவை உண்பது அல்லது தனது உடல் ஒத்துக்கொள்ளாத தவறான உணவுகளை உண்பது போன்றவைகள் உடலின் எடை கூடுவதற்கு முக்கிய காரணம். உட்கார்ந்து வேலை செய்பவர்கள் தினசரி பயிற்சிகளால் உட்கார்ந்து இருப்பதை   ஈடுகட்டவேண்டும் என்கிறார்கள். ஆனால் எல்லோரும் தினசரி பயிற்சி செய்து உடல் எடையை பராமரிப்பதில்லை. அதனால் உடல் எடை கூடுகிறது.
சிலருக்கு ஹார்மோன் போன்ற பிரச்சினைகளாலும் உடல் எடைகூடும்.

 பலபேர் உடல் எடையை குறைக்க உணவுப் பழக்கத்தை மாற்றி, உடற் பயிற்சி செய்து என பலவழிகளை கடைபிடித்து வருகிறார்கள். ஆனால் பல காரணங்களால் அந்தவகை கட்டுப்பாடுகளை தொடர்ந்து கடைபிடிக்கமல் உடல் எடையை குறைக்கமுடியாமல் போய் விடுகிறது. எனக்கு எந்த நோயும் வராது என்று நம் மனம் அடம் பிடிப்பதாலும் கட்டுப்பாடுகள் தளர்நபோய் விடுகின்றன.வந்தால் பார்த்துக்கொள்ளலாம் என்ற அலட்சியப்பேச்சையும் கேள்விப்படுகிறோம்.

உடல் எடையை குறைக்க முதலில் நமது மனதின் முழு ஒத்துழைப்பை பெற வேண்டும்.அதற்கு நமது மனதை நாம் பயமுறுத்த வேண்டும்.

அதிக உடல் எடை பலவிதமான நோய்களுக்கு காரணமாக இருக்கிறது என்று மருத்துவம் கூறுகிறது.

சிறு வயதில் சுகர், பிரஷர், கொலஸ்ட்ரால், இதயநோய்கள் என பலவிதமான சுகவீனங்களுக்காக சிகிச்சை பெறுபவர்களை மருத்துவர்கள் சுட்டிக்காட்டு கிறார்கள்.இதைச்சொல்லி   நம் மனதை பயமுறுத்தவேண்டும்.

மருத்துவமனைகளுக்கு சென்று இளம்வயதில் சுகர், பிரஷர், இருதயநோய் என கஷ்ட்ட ப்படுபவர்களை நேரில் பார்க்கவேண்டும். பார்ப்பவர்களை நம் மனம் நம்பும். 

அடிக்கடி பயமுறுத்தவேண்டும்.இந்த பயமுறுத்துதலால் நம் மனம் மாறி ஒத்துழைக்க தயாராகும் 

உடல் எடை எவ்வாறு கூடுகிறது.

நாம் அன்றாடம் சாப்பிடும் கார்போஹைரேட் மற்றும் கொழுப்பு உணவுகள் அன்றாடம் எரிக்கப்படாத போது அவை உடலில் சேமிக்கப்படுகிறது. மேலும் மேலும் சேமிக்கப்படும் போது உடை எடை கூடுகிறது.

உடல் எடையை எவ்வாறு குறைக்க முடியும்.

உடலில் சேமிப்பிலுள்ள கொழுப்பை குறைக்கவேண்டும், மேலும் புதிதாக சேமிப்பிற்கு வராதபடி உணவில் கவனமாய் இருக்கவேண்டும். இதைத்தவிர வேறு வழியில்லை.

சேமிப்பிலுள்ள கொழுப்பை குறைக்க என்ன செய்வது. தினசரி இரவு உணவை பழங்கள், காய்களோடு  நிறுத்த வேண்டும். இதற்கு முதலில் மன ஒத்துழைப்பைப் பெறவேண்டும்.

ஒரு 21 நாட்கள் இரவு உணவை உண்ணாமல் இருந்து விட்டால் பிறகு மனம் அதற்கு பழக்கப் பட்டுவிடும். பிறகு இரவு சாப்பிடாமல் இருப்பது ஒரு கஷ்டமாகவே இருக்காது. உடல் எடை குறைய ஆரம்பிக்கும்.

மனதில் உறுதியாய் இருக்கும் வரை இரவு உணவைத் தவிர்ப்பதால் உடலுக்கு எந்த தீங்கும் ஏற்படாது. பழங்கள்,காய்களால் உடல் எடை கூடாது.

புதிதாக கொழுப்பு சேராமல் இருக்க என்ன செய்வது.காலை, மதிய  உணவில் பயறு / பருப்பு / கடலை , காய்கள் அதிகம் இருக்கும் படி பார்த்துக்  கொள்ள வேண்டும். இடைவேளைகளில் பசித்தால்     பழம், சுண்டல், சிறிதளவு காரம் போன்றவைகளை சாப்பிடலாம். விருந்துகளில் கட்டாயப்படுத்தினார்கள் என்றோ, ருசியாக இருந்தது என்றோ, வீணாகிவிடும் என்றோ எடையை அதிகரிக்கும் உணவுகளை அதிகமாக சாப்பிடக்கூடாது. உணவிற்கு சிறிது நேரத்திற்கு முன் தண்ணீர் அருந்தி விட்டு உண்ண வேண்டும். தவறான உணவுகள், பானங்கள் எதையும் வாங்கி வீட்டில் இருப்பில் வைக்கக்கூடாது. காலை உணவிற்குமுன் உடற்பயிற்சி செய்வதாலும் சேமிப்பிலிருக்கும் கொழுப்புகள் கரையும்.

நமக்கு இருக்கும் ஆரோக்கியத்தை நாம் தான் காத்துக்கொள்ள வேண்டும்.
நமக்கு இருக்கும் ஆரோக்கியத்தை நமது அலட்சியம் பாழ்படுத்த அனுமதிக்கக் கூடாது.

ஆரோக்கியத்தை இழந்துவிட்டால் அதனால் வரும் உணவுக்கட்டுப்பாடு, மாத்திரைகள்,மாத்திரைகளின் பக்க விளைவுகள், செலவுகள்,அலைச்சல்கள், மனச்சோர்வுகள் அனைத்தையும் எண்ணிப்பார்த்து உடல் எடையை கட்டுக்குள் கொண்டுவரவேண்டும்.  


Sunday, 10 April 2016

சிறு நீரகம்

                                                         சிறு நீரகம் 

சிறுநீர் மூலம் நூற்றுக் கணக்கான கழிவுகள் உடலை விட்டு வெளியேறுகின்றன. நாம் உண்ணுவதையும், குடிப்பதையும், உடற்பயிற்சி செய்வதையும், சிறுநீரக செயல் பாட்டையும் பொறுத்து சிறுநீர் வெளியேறுகிறது. சிறுநீர் பரிசோதனை முடிவுகளை  அலட்ச்சியப் படுத்தாதீர்கள்.

எந்த வகை உணவுகள் ஆரோக்கியத்திற்கு நல்லது, எந்தவகை உணவுகள் ஆரோக்கியத்திற்கு கெடுதல், எவ்வளவு நீர் அருந்துகிறோம், எதைக்குடிக்கக்கூடாது, எந்த உடற்பயிற்சி ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, எந்த அளவிற்கு உடற்பயிற்சி போதுமானதாக இல்லை என்பவைப்பற்றி அக்கறைப்படாமல் இளம் வயதிலே ஆரோக்கியத்தை பலவீனப் படுத்திக்கொள்கிறார்கள். இவை அனைத்தாலும் சிறுநீரகம் பாதிக்கப்படுகிறது.  

சிறுநீரகம் இரத்தத்திலுள்ள கழிவுகளை பிரித்து வெளியேற்றுகிறது. இரத்தத்திலுள்ள தண்ணீரின் அளவை ஒழுங்கில் வைத்திருக்கிறது. சிறுநீரகத்தில் இரத்தம் சுத்தப்படுத்தப்பட்டு, இரத்தத்திலுள்ள இரசாயனக் கூறுகள் சமநிலைப்படுத்தப்படுகின்றன.

சிறுநீரில் புரோட்டின், ஆல்புமின் சோதனைமூலம் சிறுநீரகத்தின் ஆரோக்கியம் சோதிக்கப்படுகிறது. 

சிறுநீரகத்தில் ஆரோக்கிய குறைவு ஏற்பட்டால், அது தனது செயல் பாட்டை மெதுவாக குறைத்துக்கொள்கிறது. சிறுநீரகத்தை மீண்டும் ஆரோக்கியப்படுத்த முடியாது. சிறுநீரகம் பழுதடையும் போது இரத்த சுகரும், இரத்த அழுத்தமும் அதிகரிக்கிறது.

இரத்த அழுத்தம், இரத்த சுகர், புரோட்டின் உணவு, கொலஸ் ட்ரால் முதலிய வற்றைக் கட்டுப் பாட்டில் வைத்திருப்பதன் மூலம் சிறுநீரக ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம். 

சிறுநீரகம் தினசரி 200 லிட்டர் இரத்தத்தை சுத்தப்படுத்தி 2 லிட்டர் கழிவுப்பொருட்கள் மற்றும் தண்ணீரை வெளியேற்று கிறது.

தேவையான அளவு தண்ணீர் குடிப்பதன் மூலம் சிறுநீரகத்தில் கல், பழுப்பு முதலியன ஏற்படாமல் பாதுகாக்க முடியும்.

இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். அதிக இரத்த அழுத்தம் சிறுநீரகத்திற்கு மிகுந்த அழுத்தத்தை கொடுக்கிறது. தேவையில்லாமல் மாத்திரைகள் சாப்பிடுவதை தவிர்த்தும், முடிந்தவரை மாத்திரைகளை உண்பதை குறைக்கவும் முயற்சிக்கவேண்டும். சில மாத்திரைகள் சிறுநீரக ஆரோக்கியத்தைப் பாதிக்கின்றன. 

இரண்டு சிறுநீரகமும் இரத்தத்தை சுத்தப்படுத்தி இரத்த இரசாயனத்தை சமநிலையில் வைத்திருக்கின்றன.

சரியான உணவிலும், சுகர், பிரஷர், கொலஸ்ட்ரால், உடல் எடை  போன்ற ஆரோக்கிய எண்களிலும், நிறைய தண்ணீர் குடிப்பது போன்ற வற்றிலும் கவனமாய் இருந்தால் சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கலாம்.  சீனி, உப்பு சேர்க்காத எலுமிச்சை சாறு தண்ணீர் தினசரி குடிப்பது மிகவும் நல்லது. வாழைத்தண்டு சாறு, பார்லித் தண்ணீர், சீரகத்தண்ணீ ர்  போன்றவை சிறுநீர் பிரச்சனை களை தடுக்க உதவுகிறது. மாறிய கொழுப்பு ( Trans Fat ) உணவுகளைத் தவிர்ப்பதால் புராஸ்டேட் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தி சிறுநீர் பிரச்சினை வராமல் தடுக்கலாம்..

                                ------------------------------------------------------













Saturday, 9 April 2016

இருதயம்

                                                           இருதயம் 

தாயின் வயிற்றில் வளரும் சிசுவில்  முதன் முதலாக உருவாகி இயங்கும் உறுப்பு இதயமாகும்.

ஆரோக்கியமான இதயம் எதையும் சமாளிக்கிறது. 

ஆரோக்கியமான இருதய தசைகள் உடல் உழைப்பின் போது சிறப்பாகவும், ஓய்வின் போது குறைந்த அளவு துடிப்புடனும்  முழுவேலையையும் செய்கிறது. 

குறைந்த இதய துடிப்பில் அதிக அளவு இரத்தத்தை வெளியேற்றும் பணியினை செய்யும் சக்தியுடன் இதயதசைகள் இருக்கிறது. இதயத்தமனிகள் அதிக அளவு இரத்தம் பாய்ந்து செல்வதற்கு ஏதுவாய் பெரியதாய் இருக்கிறது.

பிராண வாயு கலந்த இரத்தத்தினை உடலின் ஒவ்வொரு திசுக்களுக்கும் பம்ப் பண்ணி அனுப்பும் வேலையை இருதயம் செய்கிறது. மனிதனின் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கிறது. மனித இதயம் ஒரு நாளைக்கு சுமார் 80000 முதல் 100000 தடவை வரை துடித்து சுமார் 9000 லிட்டர் இரத்தத்தை பம்ப் செய்கிறது. 70 முதல் 90 வயது வரை வாழும் ஒரு மனிதனின் இதயம் சுமார் 2 முதல் 3 பில்லியன் தடவை துடித்து, 50 முதல் 60 மில்லியன் காலன் இரத்தத்தை பம்ப் செய்கிறது. இந்த பணிகளை செய்வதற்கு ஏற்ப இருதய தசைகள் வித்தியாசமான குணங்களுடன் அமையப் பெற்று தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கிறது.

ஆன்றி ஆக்சிடண்ட் ( Anti Oxidant ) சத்துள்ள உணவுகள் இதய நோய்களை எதிர்க்கும் முக்கிய கருவியாய்  இருக்கிறது.

காய்கள், கீரைகள், மூலிகைகள், பழங்களில் சக்திவாய்ந்த ஆன்றி ஆக்சிடண்ட்கள் இருக்கின்றன. வைட்டமின் E இதயத்தைப் பாதுகாக்கிறது. முளைவந்த கோதுமை, கோதுமைப்புல் ஜுஸ், பார்லி போன்ற வற்றிலுள்ள ஆன்றி ஆக்சிடண்ட் என்ஸைம்கள்  இதயத்தை வலிமைப் படுத்துகின்றன. திராட்ஷைப் பழக்கொட்டையிலுள்ள ஆன்றி ஆக்சிடண்ட் இருதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இதயத்தில் இரத்தம் கட்டியாகாமல் இருக்க ஆஸ்பிரின் உதவும். ஆனால் நெடுநாள் உண்ணும் போது அதனால் பக்க விளைவுகள் ஏற்படும். ஆஸ்பிரினுக்குப் பதில் அன்னாசிப் பழம் நல்லது. வெள்ளைப்பூண்டு இருதயத்திற்குரிய சிறந்த ஆன்றி ஆக்சிடண்ட். வெள்ளைப்பூண்டு இரத்தத்தில் கொலஸ்ட்ராலையும் குறைக்கிறது, இரத்தத்தில் கட்டி ஏற்படுவதையும் தடுக்கிறது. பச்சையாக உண்ணும் பூண்டு இரத்த சுகரை குறைக்கிறது.

இரத்தக் கொலஸ்ட்ரால் விகிதம் கட்டுக்குள் இல்லை என்றாலும் அதிக உடல் எடையாலும் மன அழுத்தத்தை குணப் படுத்தாவிட்டாலும் நல்ல கொழுப்புச் சத்து குறைபாட்டாலும் இரும்புத்தாது அதிகமாவதாலும் இருதயம் ஆபத்துப் பாதையில் போய் விடுகிறது.

உடலில் இருதய ஆரோக்கியம் சத்தான உணவுகளால் சரி செய்யப்பட்டு குணப்படுத்தக்கூடிய ஒரு அவையமாகும்.

இதயநோய் மரணம் ஏற்படும் காரணங்கள் அனைத்திலும் முதன்மை வகிக்கிறது. இளவயது மரணத்திலும் முதற் காரணமாக இருக்கிறது.

புகைத்தல், அதிக உடல் எடை, உடற்பயிற்சியின்மை, மோசமான உணவுப்பழக்கம் போன்றவை இதயநோய் மரணத்துக்கான தெரிந்த காரணங்கள்.

சிறந்த உடற்பயிற்சி, உணவுப் பயிற்சி, மனப் பயிற்சி போன்றவை களால் இருதய நோயை குணப்படுத்த முடியும். நோய் வராமல் தடுக்கவும் முடியும்.




Image result for இருதயம்



ஆஸ்துமா

                                                                      ஆஸ்துமா 

ஒவ்வாமை       ( புகை, மணம், தூசு, காற்றோட்டமின்மை )             மன அழுத்தம்
( பயம், பரிதவிப்பு, கவலை ) மூச்சுக் குழாய் பலவீனம்,  பரம்பரை போன்ற காரணங்களால் மூச்சுப் பாதையில் தடிப்பு, அல்லது வீக்கம் ஏற்படுகிறது.

மூச்சுப் பாதையிலுள்ள குழாய் களில் தடிப்போ அல்லது வீக்கமோ ஏற்படுவது ஆஸ்துமா ஆகும். வீக்க மானது மூச்சுப்பாதையின் வலிமைத்தன்மையை குறைந்த நிலைக்கு கொண்டுவந்து விடுகிறது. மூச்சுக் காற்றில் இருக்கும் ஏதாவது துகள்கள் பட்டவுடன் வீக்கமான இடம் அதனை வலிமையுடன் எதிர்க்க ஆரம்பிக்கிறது. மூச்சுப் பாதையில் ஏற்படும் வீக்கம் எளிதாக போய்க்கொண்டிருந்த மூச்சை சிரமப்படுத்துகிறது. மூச்சுவிடும் இயக்கத்திலிருக்கும் தசைகளை இறுக்க மடையச்  செய்கிறது. இதனால் மூச்சுப்பாதை மேலும் குறுகுகிறது. இம் மாற்றங்களினால் நுரையீரலுக்குச் செல்லும் காற்று குறைகிறது. மிகுந்த சிரமப்பட்டு மூச்சு விடவேண்டியதாகிறது. மூச்சுப் பாதையிலிருக்கும் திசுக்கள் அதிகமான அளவு சளியை உண்டுபண்ணுகிறது. இதனால் மூச்சு விடுவதற்கு மேலும் சிரமப்படவேண்டிய தாக இருக்கிறது.

யோகாசனம், துரித நடைப் பயிற்சி, ஆழமாக மூச்சு விடும் பயிற்சி, மன அமைதி பயிற்சி போன்றவைகளால் ஆஸ்துமாவின் தீவிரத்தைக் குறைக்கலாம்.,   


                     

Sunday, 14 February 2016

ஆரோக்கியத்தை காப்பது எப்படி

                                   ஆரோக்கியத்தை காப்பது எப்படி 

சிறப்பான ஆரோக்கியத்திற்கு தேவையானவை மூன்று.1.  காற்று 2. தண்ணீர்
3.இயற்கை உணவுகள்.

இளமையில் முதுமைத் தன்மை வராமலிருக்க, அல்லது முதுமைநோய்கள் வராமலிருக்க சரியான உணவு எது, தவறான உணவு எது  என்று தெரிந்து உண்ணுவதை பழக்கப்படுத்திக்கொள் ளவேண்டும்  

1900 க்குப்பிறகு தான் மின் உற்பத்தி, இயந்திரங்கள் பெருக்கம் அதிக மானது. சுத்திகரித்த சீனி, அரிசி, எண்ணெய் சந்தைக்கு தாராளமாக வந்தன. உணவில் வியாபாரம் புகுந்தது. ஆரோக்கியம் பிரச்சினையானது.  

இரசாயன உரம், பூச்சிக்கொல்லி இரசாயனம், உணவில் இரசாயனம், பிளாஸ்டிக்  என்பது அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. உணவகங்களில் உண்பது,   தயார் உணவு, துரித உணவு, வெளிநாட்டு காய், கனிகள்,  உணவுகள், குளிர் பானங்கள், பழரசங்கள்  சாதாரணமாகி விட்டன.

இதனால், சுத்தி கரித்த உணவுகள் (Refined Grains,oil,sugar ) மாறிய கொழுப்பு உணவுகள் (Trans Fat), விஷத்தன்மை உணவுகள் (Oxidants) போன்றவைகளை மிக அதிகமாக உண்கிறோம். மது, மாத்திரை, மாசுபட்ட சுற்றுச்சூழல் அனைத்தும் பக்கவிளைவு களை உடையதாக இருக் கிறது. 

சரியான உணவுகள்:- முழுத்தானியம், நட்ஸ், சீட்ஸ், உள்ளூர் காய், கனி, கீரை, கிழங்கு, மூலிகைகள், கருப்பட்டி, நாட்டுவெல்லம், தேன், பனங்கற்கண்டு,   தண்ணீர் முதலியன.

தவறானஉணவுகள்:-சுத்திகரித்த தானியங்கள், எண்ணெய்கள், சீனி, வெல்லம், கொதிக்கிற எண்ணெயில் செய்த மாமிசஉணவுகள், சிற்றுண்டிகள், இனிப்புகள்,  தின்பண்டங்கள், சீனி இனிப்புகள், இராசாயனம் சேர்த்து பாதுகாக்கப் பட்ட காய், கனி, குளிர்பானங்கள், உணவுகள் முதலியன.. 

எறும்பூர  கல்லும் தேயும் என்பது போல தவறான உணவுகளை நாட்ப் பட உண்பதால் பலருக்கும் பலவிதமான  ஆரோக்கிய கேடுகள்  ஏற்படுகிறது.

இதை நினைவில் நிறுத்தி உணவுப் பழக்கத்தை கொஞ்சம், கொஞ்சமாக மாற்றிக் கொள்ள வேண்டியது அவரவர் பொறுப்பாகும். ஏனென்றால், பரம்பரை யினாலோ,  பிறவிக்குறை பாடாலோ, ஒவ்வொருவர் உடலிலும் ஏதாவது ஒன்று அல்லது பல உறுப்புகள் பலவீனமாக அமைந்து விடுகிறது. அந்த உறுப்புகள் தவறான உணவுகளால் சீக்கிரமாக மேலும் பலவீனமாகிறது.

நாம் சரியான உணவை உண்கிறோமா, அல்லது தவறான உணவை உண்கிறோமா என்பதைப் பொறுத்துத்தான்  நமது ஹார்மோன்கள் வேலை செய்கின்றன. ருசியான உணவிற்கும் ஹார்மோன்கள்  இயக்கத்திற்கும் சம்பந்தம் கிடையாது. ஆனால் உணவு ருசியாக இருந்தால் கட்டுப்பாடுகளை சமாதானப் படுத்திவிட்டு, விரும்பி சாப்பிடுகிறோம்.

முடி உதிர்தல், மூச்சு வாங்குதல், பல் வலி, பார்வை குறைபாடு போன்றவை முதல் பெரிய நோய்கள் வரை இளம் வயதில் ஏற்பட தவறான உணவுகள் முக்கிய காரண மாக இருக்கிறது.  

உணவுகளை அதன் இயற்கைத் தன்மையை  மாற்றாமல் உண்ணும் போது அவற்றிலிருந்து  உடலானது தனக்கு வேண்டிய எல்லா சத்துக் களையும் தயாரித்துக் கொள்கிறது. பசுவானது வெறும் பச்சைப்புல்லையும் தண்ணீரை யும் குடித்து விட்டு எல்லா ச்சத்து க்களையும் உடைய பாலை சுரப்பதை நாம் அறிவோம்.

நாம்மனிதர்கள். சூழ்நிலையாலும், எண்ணங்களாலும் உணர்ச்சி வயப்படக் கூடியவர்கள். உணர்ச்சிகள் உடல் இயக்கத்தை நடத்தக்கூடியவை. மூச்சின் வேகமும், இதயத்தின் துடிப்பும் உணர்ச்சிகளால் மாறக்கூடியவை. இதை நினைவில் கொண்டு மூச்சுப் பயிற்சியினை  முக்கியமாக  கடை பிடிக்கவேண்டும். 
          -----------------------------------------------------------------

Tuesday, 26 January 2016

புரோஸ்ட்டேட் வளர்ச்சி

                                            புரோஸ்ட்டேட் வளர்ச்சி
                                         BPH- ( BENIGN PRO-STATIC  HYPERPLASIA )


ஆண்கள் உடலில் சிறுநீர்பையிலிருந்து செல்லும் சிறுநீர் குழாயும்,டெஸ்டிஸி ருந்து வரும் விந்து குழாயும் சந்திக்கும் இடத்தில் உள்ள ஒரு இரு வழி வால்வு ( Two Way Valve ) போன்று செயல் படும் தசையை  புரோஸ்ட்டேட் என்கிறார்கள். சிறுநீர், அல்லது விந்து இதில் ஏதாவதுஒன்றைவெளியேஅனுப்பும்பணியினை  புரோஸ்ட்டேட் செய்கிறது.

                                       Image result for PROSTATE

குழந்தைப் பருவத்தில் மிகச்சிறிய தாகவும், இருபது வயதுகளில் முழுவளர்ச்சி யும்  புரோஸ்ட்டேட் அடைகிறது. நாற்பது வயதிற்குப்பின் தேவையற்ற வளர்ச்சியினை புரோஸ்ட்டேட் அடைகிறது. ஐம்பது வயதினை அடையும் போது  வீக்கம் போல் ஆகி விடுகிறது. மேலும் வயதாகும் போது பிரச்சினையா கிறது. எழுபது வயதை அடையும் பெரும்பாலான ஆண்களுக்கு புரோஸ்ட் டேட் பலவித தொந்தரவுகளை ஏற்படுத்துகிறது, ஹார்மோன் செயல்பாடு களால்  புரோஸ்ட்டேட் வாழ் நாள் முழுவதும் வளர்ந்து கொண்டே போகிறது.

இதற்கு சிகிச்சை எடுக்காமல் விட்டால் சிறுநீரை வெளியே விடாமல் பல இடை யூறு களைத் தருகிறது. சிறுநீர் போக்கின் அழுத்தம் குறையும். நாளடை வில் சொட்டுச் சொட்டாக போகும். சிறுநீர் வெளியே வரமுடியாமல் தயங்கும். சிறுநீர் போன திருப்பதி இருக்காது. இரவில் அடிக்கடி சிறுநீர் போக வேண்டி வரும். உறக்கம் கெடும்.சிகிச்சை எடுக்காமல் விட்டால் திடீரென ஒருநாள் மொத்தமாக சிறுநீர் போகமுடியாமல் ஆகிவிடும்.அறுவை சிகிச்சைமூலம் குணப்படுத்தலாம்.இதற்குரிய மாத்திரை களால் பல வித பக்க விளைவுகள் ஏற்படுகின்றன.

 பரம்பரை, ஹார்மோன் கோளாறு, உணவு இவைகளைப்  பொறுத்து புரோஸ்ட் டேட் பிரச்சினை ஏற்படுகிறது.

உணவுப்பழக்கம்  ஹார்மோன்களை  தாக்குகிறது. பலவருடங்களாக உண்டு வந்த  மாறிய கொழுப்பு ( Trans Fat ) வகை உணவுகள் புரோஸ்ட்டேட் ஆரோக்கி யத்தை கெடுத்து விடுகிறது. எண்ணெயில் வறுத்த உணவுகளை நிறுத்தி விட்டு, நட்ஸ், சீட்ஸ்  களை உண்ணவேண்டும். முக்கியமாக திராட்சை விதை, பூசணி விதை, ஆழி விதை களை உண்டு வந்தால்   அதிலுள்ள கொழுப்புகள் மிக நல்லதாகும்.

சிறுநீர் போவதில் பிரச்சினை தெரிந்தால் அலட்சிய மாய் இருப்பது நல்ல தல்ல.  இது நெடுநாள் நோயாக மாறி, புரோஸ்ட்டேட் ல் பழுப்பு, சிறுநீர் அடைப்பு, சிறுநீர்ப்பை, சிறுநீரகம் போன்ற ப்பக்கத்து அவையவங்களையும் பாதிக்கும்.புரோஸ்ட்டேட்  ன் வளர்ச்சி கான்சராகவும் மாறிவிடுகிறது.

 புரோஸ்ட்டேட் கான்சர் 

புரோஸ்ட்டேட் கான்சரை அமைதியான கான்சர்  ( Silent Cancer ) என்கிறார்கள். பெரும்பாலும் எழுபது வயதிற்கு மேற்பட்டவர் களுக்கு  புரோஸ்ட்டேட் கான்சர் வருகிறது. நிறைய ஆண்களுக்கு  புரோஸ்ட்டேட் கான்சர் இருப்பது தெரிவதில்லை. இரத்தத்தில் PSA Value ( Prostate Specific Antigen) சோதனை மூலம் புரோஸ்ட்டேட் கான்சரை உறுதி செய்யலாம்.  புரோஸ்ட்டேட் கான்சர் உடலில்  எலும்புகளைத் தாக்கி பலவீனப்படுத்துகிறது. 

புரோஸ்ட்டேட் பிரச்சினையை அறவே தவிர்க்க விரும்பு பவர்கள் மாறிய கொழுப்பு உணவுகளை அறவே தவிர்த்து விடவேண்டும். 1900 ம் ஆண்டுகளுக்கு முன் புரோஸ்ட்டேட்  கான்சர் என்பது மிகவும் அரிதாக இருந்தது. இக்காலத்தில் புரோஸ்ட்டேட்  கான்சர் மிக அதிக மாக காணப்படுகிறது. காரணம் 1900 க்குப்பிறகு மின் உற்பத்தி, இயந்திரங்கள் பெருக்கம் அதிக மானது. சுத்திகரித்த சீனி, அரிசி, எண்ணெய் சந்தைக்கு தாராளமாக வந்தது. இரசாயன உரம், பூச்சிக்கொல்லி இரசாயனம், உணவில் இரசாயனம், பிளாஸ்டிக்  என்பது அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. உணவகங்களில் உண்பது,   தயார் உணவு, துரித உணவு, வெளிநாட்டு காய், கனிகள்,  உணவுகள், குளிர் பானங்கள், பழரசங்கள்  சாதாரணமாகி விட்டது. இதனால்  மாறிய கொழுப்பு(Trans Fat), சுத்திகரித்த உணவுகள் (Refined Grains,oil,sugar ) விஷத்தன்மை உணவுகள் (Oxidants) போன்றவைகளை  மிக அதிகமாக உண்கிறோம். இதனால் பலருக்கும் பலவிதமான ஆரோக்கிய கேடுகள் ஏற்படுகிறது.

ஜப்பானில் வளர்க்கப்படும் Maitake என்னும் காளான் உணவு  புரோஸ்ட்டேட் மற்றும் எல்லாவகை கான்சருக்கும் மிக அருமையான உணவு. சீரகம் சிறுநீரகப் பிரச்சினைகளுக்கு ஒரு சிறந்த உணவாக இருக்கிறது .ஹோமியோபதியிலும் புரோஸ்ட்டேட் க்கு சிறந்த மருந்துகள் உள்ளன. அமெரிக்கா வில் வளரும் Saw Palmetto என்னும் மரத்தில் விளையும் பழத்தின் சாறு வளர்ந்த புரோஸ்ட்டேட் மற்றும் சிறுநீர்பிரச்சினைகளை குணப் படுத்துகிறது. பொதுவாக Anti Oxidant உணவுகளை தினசரி சாப்பிட்டு வருவதை உறுதி செய்து கொள்ளவேண்டும். 

                                      ----------------------------------------------











Friday, 15 January 2016

உடல் இயங்கும் விதம்

                                            உடல் இயங்கும் விதம்  

மனித உடலைப் பிரித்து போட்டால் அதை ஏழு பெரும் பகுதிகளாக பிரிக்கலாம்  என்கிறார்கள்.

A.உடலின் ஆதாரம். 
B, உடலின் உட்பகுதி.
C.மூச்சு ஓட்டமும் இரத்தஓட் டமும். 
D. சுரப்பிகளின் வகை. 
E. ஜீரணமும் கழிவும்   
F. உணர்ச்சி மற்றும் தகவல் உறுப்புக்கள்.
G. வெளிப்பாகங்கள்.

இதில் ஒரு சில பாகங்களைப்பற்றிய சிறு விளக்கங்கள் வருமாறு.

A. உடலின் ஆதாரம் :-    
1. CELL:-  உயிருள்ள அனைத்து ஜீவன்களும் செல் களால் ஆனது. மனிதன் பல ஆயிரங்கோடி செல் களால் ஆன ஜீவன். செல்கள் சத்துக்களை சக்தியாக மாற்றுகிறது. தனக்குத்தானே வழிகாட்டி நடந்து கொள்கிறது.தேவைக்கேற்ப மேலும் உற்பத்தி செய்துகொள்கிறது. பல செல்கள் சேர்ந்து ஒரு திசு வாக வும் , பல திசுக்கள் சேர்ந்து ஒரு உறுப்பாகவும், பல உறுப்புக்கள் சேர்ந்து ஒரு முறையான இயக்கத்தை செய்யவும், பல இயக்கங்கள் சேர்ந்து ஒரு உடலாக செயல் படவும் செய்கிறது.

2.DNA :- Deoxyribonucleic Acid என்கிற பரம்பரையால் வருகின்ற பொருள். உடலின் ஒவ்வொரு செல்லிலும் அதே DNA காணப்படுகிறது.

3.GENE:-  செல்லிலுள்ள DNA வின் ஒரு பகுதி GENE ஆகும். உடலின் தேவை அனைத்தையும் உண்டு பண்ணக் கூடிய சக்தி உடையதாகும். அதிக மான GENE கள் சேர்ந்து குரோமோசம் ஆகிறது.

4.MITOCHOMDRION:-  செல்களில் சக்தியை உற்பத்தி செய்கிறது.

5.PROTEIN:-  ஜீரணமாகி  சக்தியாகவும், வளர்ச்சிக்கும் உதவுகிறது.

6.STEM CELLS:- இதை தாய் செல் என்கிறார்கள். உடலில் எந்த செல்லாகவும் மாறும் சக்தி உடையது.இரத்தம், இதயம், எலும்பு, தோல், தசை, மூளை என எந்த செல் ஆகவும் மாறக்கூடியது.

7.EGG:- குழந்தை பேறு அடைய பெண் இனத்தில் முட்டை உற்பத்தி ஆகிறது.

8.NERVE CELL:- தனக்கு தூண்டுதல் கிடைத்த உடன் மின்சாரத்தை உண்டாக்கி
தகவல் அனுப்புகிறது.

9.RED CELL:-ஒரு சொட்டு இரத்தத்தில் பல லட்சம் சிகப்பு அணுக்கள் உள்ளன.எலும்பு இதனை உற்பத்தி செய்கிறது. சிகப்பு அணுவில் இருக்கும் .ஹீமோ குளோ பின் என்னும் புரோட்டீனில் இருக்கும் இரும்பு ஆக்சிஜனை சுமந்து செல் களுக்கு கொடுத்து விட்டு, செல் களில் இருக்கும் கழிவுப் பொருளான கரிமல வாயு வை சுமந்து வந்து வெளி ஏற்றுகிறது. சிகப்பு அணு இல்லையேல் மரணம்.

10.WHITE BLOOD CELL:- இரத்தத்தில் கிருமியோ, தொற்று நோயோ புகுந்து விட்டால்  வெள்ளை அணுக்கள் அவற்றை வெளியேற்றுகின்றன.ஒரு சொட்டு இரத்தத்தில் 7000 முதல் 25000 வரை வெள்ளை அணுக்கள் உள்ளன.

11. OSTCO BLAST :-  இது ஒரு வகை செல்.இதிலிருந்து எலும்பு வளர்கிறது. எலும்பு தொடர்ந்து தன்னை புதுப்பித்துக் கொண்டே இருக்கிறது.

12.BODY TISSUE:- உடலில் நான்கு விதமான திசுக்கள் உள்ளன.1.  epitheliai 
( உடலின் உள்ளேயும், வெளிமூடிக்கொள்கிறது ) 2. connective  ( எலும்பு மண்டலத்தையும் பிற பாகங்களையும் தாங்கிக்கொள்கிறது.) 3. muscle 4. nerves ஒவ்வொன்றும் குறிப்பிட்ட செயலை செய்கிறது.

B, உடலின் உட்பகுதி
1.BONE:- எலும்பின் அமைப்பு.

2.MUSCLE:- தசையின் அமைப்பு.

3.SKELETAL MUSCLE:- எலும்போடு  சேர்ந்திருக்கும் தசைகள்.உடல் அசைவிற் கேற்ப சுருங்கி விரிகிறது.

4.CARTILAGE:- கடினமான தசை.  காதின் வெளிப்புறம், மூக்கு போன்ற இடத்தி லுள்ள தசைகளாகும்.

5.SKULL:- மண்டையோடு எலும்பாலான அமைப்பு. உள்பக்கமாக மூளையை யும்,  வெளிப்பக்கமாக முகத்தையும் தாங்கிக்கொள்கிறது.குழந்தை பிறந்த உடன் இரப்பர் போன்றி ருக்கும் மண்டையோடு நாளடைவில் உறுதியான எலும்பாகி விடுகிறது.

6.SPINE:- முதுகுத் தண்டு மூன்று பாகங்களாகும். முதல் 7 டிஸ்கு களை CERVICAL VERTEBRAE   என்றும், அடுத்த 12 டிஸ்கு களை THORACIC VERTEBRAE என்றும், கடைசி 5 டிஸ்கு களை LUMBAR VERTEBRAE  என்றும் கூறுகிறார்கள்.

C.மூச்சு ஓட்டமும் இரத்தஓட் டமும்
1.HEART:-பிராண வாயு கலந்த இரத்தம்  உடல் முழுவதும் போய் சேர பம்ப் பண்ணி அனுப்பும் வேலையை இதயம் செய்கிறது. ஆரோக்கியமான இதயம் எதையும் சமாளிக்கிறது. உடலில் இதயம் சத்தான உணவுகளால் சரிசெய்யப்பட்டு குணப்படுத்தக்கூடிய ஒரு அவையமாகும். முளை வந்த கோதுமை, திராட்சை பழக் கொட்டை, அன்னாசிப்பழம், பூண்டு போன்று காய், கனிகளிலுள்ள அன்றி ஆக்சிடெண்ட் ( vitamin A, E, C ) இதய நோய்களை எதிர்க்கும் முக்கிய கருவியாய்  இருக்கிறது.

2.CARDIAC MUSCLE:-இதயத்தின் தசைகள் தன்னைத்தானே சுருக்கிக்கொண்டு, தானியங்கியாக ஒரு ஒழுங்கில் செயல்பட்டு ஒரு ஜீவனின் வாழ்நாளுக்கு காரணமாக இருக்கிறது.

3.BLOOD:-இரத்தம் செல்களுக்கு பிராணவாயு வையும், உணவிலுள்ள சத்துக்களையும் எடுத்துச் சென்று கொடுத்துவிட்டு, செல்களில் ஏற்படும் கழிவுகளை எடுத்துக்கொண்டுவந்து வெளியேற்று கிறது.மனித உடலில் 5 லிட்டர் இரத்தம் உள்ளது.

4.LUNGS:-நெஞ்சுப் பகுதியில் இருக்கும் நுரையீரல் காற்றிலிருந்து பிராணவாயுவைப் பிரித்து இரத்தத்திற்கு கொடுத்து, இரத்தத்திலிருக்கும் கழிவுகளை பிரித்து வெளியேற்றும் வேலையை செய்கிறது..

5.DIAPHRAGM:-மூச்சு விடும் செயல் ஒரு குடைபோன்ற அமைபபுடைய தசையாலான Diaphragm என்பதன் உதவியால் நடைபெறுகிறது. Diaphragm கீழ் நோக்கி சுருங்கி வயிற்றை அழுத்தும் போது மூச்சுக் காற்று உள்ளே செல்கிறது. Diaphragm மேல்நோக்கி இயல்பு நிலைக்கு வரும்போது வெளிமூச்சு ஏற்படுகிறது வயறானது உள்ளே செல்கிறது.

6.ARTERY:-இதயத்திலிருந்து பிராணவாயுவை சுமந்துகொண்டு செல்களுக்கு செல்லும் இரத்த குழாய்களை Artery  என்கிறார்கள்.

7.CAPILLARY:-இவை திசுக்களின் உள்ளே இருக்கின்றன. இரத்தத்தை Artery லிருந்து Vein க்கு எடுத்துச்செல்கின்றன. பிராணவாயு, சத்துக்கள், கரிமல வாயு, கழிவுகள் முதலியன  Capillary   யில் பரிமாறிக்கொள்ளப் படுகின்றன.

8.VEIN:-செல்களிலுள்ள கழிவுகளை Capillary  வழியாக எடுத்துக்கொண்டு    இருதயத்தை நோக்கிச்  செல்லும் இரத்தக் குழாயை  Vein  என்கிறார்கள்.

D. சுரப்பிகளின் வகை
1. LYMPH                                        5. PANCREAS                 9. PITUITARY
2.TEAM IMMUNITY                     6. THYROID                  10. OVARY 
3. SPLEEN                                       7. ADRENAL                 11. TESTES
4. HORMONES                               8. PINEAL                     12.PROSTATE
                                                                                                  13. SEX LIFE 
E. ஜீரணமும் கழிவும்  
1. ENZYMES                                   5. INTESTINES                9. LIVER
2. SALIVA                                       6. SMOOTH MUSCLE   10.KIDNEYS 
3.TEETH                                         7. GUT BACTERIUM     11.BLADDER
4.STOMACH                                  8. GALL BLADDER       12. WASTE MATTER
                                                                                                    13. ELECTROLYTES

F. உணர்ச்சி மற்றும் தகவல் உறுப்புக்கள். 
1. BRAIN
2. SPINAL CORD
3. NERVES
4. EYE
5. EAR
6. NOSE
7. TOUCH
8. TONGUE

G. வெளிப்பாகங்கள்.
1. SKIN
2. HAIR
3. NAIL
4. SWEAT GLAND

நாம் தெரிந்துகொள்ள வேண்டியவைகள் 

நமது உடலிலுள்ள ஒவ்வொரு உறுப்புக்களும் செய்யும் பணிகள் அனைத்தையும் விரிவாகப் பார்த்தால் ஆச்சரியமாகவும், அதிசயமாகவும் இருக்கிறது.

நமது இதய தசைகள் வாழ் நாள் முழுவதும் ஒய்வு இல்லாமல் இயங்கிக் கொண்டிருக்கிறது.

நமது கல்லீரல், நுரையீரல், சிறுநீரகம், கணையம் போன்ற உறுப்புகள் ஒவ்வொன்றும் ஒரு பெரிய தொழிற்சாலைக்கு சமமான பணிகளை செய்கின்றன. நாம் உண்ணும், குடிக்கும் அனைத்தும்  ஜீரணப்பகுதியை கடந்து, கல்லீரலுக்கும், சிறுநீரகத்துக்கும் போய்வருகின்றன.
 
நமது மூளை பலநூறு கணணிகளுக்கும் மேலான பணிகளை செய்கிறது.

நமது நரம்பு மண்டலம் ஒப்பிட முடியாத அளவு வேகத்தில் உணர்வுகளை கடத்தவும், உத்தரவுகளை பெறவும் செய்கின்றன.  


மேற்கண்ட நமது அவையவங்கள் யாவும் நாம் பிறந்ததிலிருந்து சரியாகவே இயங்கக்கூடியவை. அதற்கு சரியான உணவு, காற்று, தண்ணீர், சூரிய ஒளி, உறக்கம், சரியான எண்ணம் இவைகளை கொடுத்து வந்தால் அவைகளும் சரியாக இயங்கும். ஆனால், பல்வேறு காரணங்களால் நாம்மால் அவைகளை கடைபிடிக்க முடியவில்லை.  

உணவிலுள்ள சத்தையும், காற்றிலுள்ள பிரணவாயுவையும் செல்கள் சக்தியாக மாற்றி நம்மை செயல் பட வைக்கின்றன.

பல காரணங்களால் நாம் தவாறன உணவுகளை உண்ணப்பழகி விட்டோம். வியாதி என்று வந்த பின்னரே உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்கிறோம்.

முதலில் இனிப்புச்சத்து. நாம் உட்கொள்ளும் உணவு ஜீரணமாகி இரத்தத்துக்கு வரும் போது அதிலுள்ள இனிப்பு சத்துக்களில் ( sugar & starch ) இன்சுலினும் இருந்தால்தான் செல்கள்  ஏற்றுக் கொள்கின்றன. இன்சுலின் இல்லாத இனிப்பை  ஏற்றுக் கொள்ளாமல் நிராகரித்து விடுகின்றன.

இதனால் இரத்தத்தில் சுகர் கூடி செல்களை நோய்ப்  படுத்தி விடுகின்றன உடல் பலவீன மாகி விடுகிறது.

இரண்டாவது கொழுப்புச்சத்து. நட்ஸ், சீட்ஸ் களில் இருக்கும் கொழுப்பு நல்ல கொழுப்பாகும் ( Un Saturated Fat ). நாம் அதிலிருந்து கொழுப்பை மட்டும் பிரித்தெடுத்து உபயோகப்படுத்தும் பொழுது பலசத்துக்கள் பிரிந்து போய் விடுகின்றன.

உணவு ஜீரணமாகி இரத்தத்தில் தேவைக்குமேல்  அதிகமாக வரும் இனிப்புக்களை அவை இன்சுலின் கூட வந்தாலும் தேவையில்லை என்று சொல்லி செல்கள் நிராகரித்து விடுகின்றன. அப்போது அந்த இனிப்புகள் கொழுப்பாகமாறி உடலில் தேங்கி உடல் எடையை கூட்டுகின்றன.

நாம் உண்ணும் பால், பால்வகைஉணவுகள், எல்லா மிருக வகை உணவுகள், எல்லாவற்றிலும் கரையாத கொழுப்பு ( Saturated Fat ) இருக்கிறது.

எண்ணெயில் வறுத்த உணவுகளில் மிகவும் கெட்ட கொழுப்பான மாறிய ( Trans Fat )  கொழுப்பு இருக்கிறது.

ஆக, நமது உடலுக்கு நான்கு வகையான உணவு வழிகளில் கொழுப்பு கிடைக்கிறது. ஆனால் நமது உடலுக்குத் தேவையான கொழுப்பில் 75% த்தை நமது உடலே தயாரித்துக் கொள்கிறது. உடலுக்கு உணவு வழியாக வரும் தேவைக்கு அதிகமான கார்போஹைட்ரேட் ( இனிப்பு ) கொழுப்பாக மாறுவ தாலும்,  மற்றும் கொழுப்புள்ள உணவுகளை தேவைக்கு அதிகமாக உண்ணுவதாலும் உடலுக்குள் கொழுப்பு நிறைய சேர்ந்து விடுகிறது. இதனால் அவரவருக்கும் பல்வேறு ஆரோக்கிய குறைவுகள்  ஏற்படுகின்றன. கொழுப்புகள் உடலில் தங்கி உடல் எடையை கூட்டிவிடுகிறது. கூடிய எடையை குறைக்க மிகவும் சிரமப்பட வேண்டியுள்ளது.

பசுவானது வெறும் பச்சைப்புல்லையும் தண்ணீரையும் குடித்து, வெண்மைநிற, சரிவிகித, எல்லச்சத்துக்களையும் உடையப் பாலைத்தருகிறது,

அதுப்போல் நமது பழங்கால முன்னோர்கள் வெறும் கிழங்கு, காய், கனிகளை மட்டும் உண்டு எந்த சத்துக்குறைவும் இல்லாமல் திடமாக வாழ்ந்து மடிந்தார்கள்.

இயற்கையாக கிடைக்கும்  முழு உணவுகளை மற்றம் ஏதும் செய்யாமல்  நாம் உட்கொண்டால் அந்த உணவுகளிலிருந்து  உடல் தனக்கு வேண்டிய அனைத்துசத்துக்களையும் தயாரித்துக்கொள்ளும் வகையில் நமது உடல் இயக்கம் அமைந்திருக்கிறது. ஆனால் நாம் அலட்சியமாய் இருந்து நாகரீகம், முன் னேற்றம்  என்று சொல்லி நல்லனவற்றை புறந்தள்ளி  இயற்கை உணவு களில் பல மாற்றங்கள் செய்து வியாபார மாக்கி உண்ணுகிறோம். அடிப்படையை மறந்து விட்டோம்.

நாம்வெள்ளை அரிசி, வெள்ளை  மாவு, எண்ணெய்,சீனி என சுத்திகரிப்பு  மூலம்
( Refined Process )  எல்லா சத்துக்களையும் நீக்கிவிட்டு உண்ணுகிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். சுத்திகரித்த மற்றும் கெட்டகொழுப்பு உணவுகளை நாம் தேவைக்கு அதிகமாக உண்பதால் நமது  ஆரோக்கியத்தில் பலருக்கும் பலவிதமான குறைபாடுகள் ஏற்படுகின்றன.

மூன்றாவது பிராணவாயு. உடலின் ஆரோக்கியமான இயக்கத்திற்கு சீரான பிராணவாயு  மிக முக்கியம். ஆனால், நமது மூச்சு ஓட்டம் நமது மன உணர்ச்சிகளுக்கு ஏற்ப சாதாரணமாகவும், அசாதாரணமாகவும் இருக்கிறது. சரியாக மூச்சுவிடுவதை பழகிக் கொண்டால் சில உபாதைகளை மருத்துவம் இல்லாமலே தடுத்து விடலாம்.

நான்காவது உடற்பயிற்சி. நமது உடல்  நடக்கவும், ஓடவும், ஏறவும், இறங்கவும் ஆன செயல்களை செய்வதற்காக அமைக்கப்பட்டது. உண்ணும் உணவிலுள்ள சத்துக்கள் எரிக்கப்பட்டு விடவேண்டும் என்பது நியதி. உழைப்பிற்கேற்ற அளவு உணவு, அல்லது உணவிற்கேற்ற அளவு உழைப்பு . இந்த சமநிலை மிக அவசியமாக இருக்கிறது.

நாம் தெரிந்து கொண்டவைகளை உறுதி செய்து, உறுதி செய்தவைகளை, நினைவில் நிறுத்தி, அந்த உண்மைகளை இயன்றவரை கடைபிடிப்பது ஒன்று தான் நமக்காக உழைக்கும் நமது உடல் உறுப்புக்களுக்கு நாம் கொடுக்கும் மரியாதையாகும்.

                                       --------------------------------------------------------










தின் பண்டங்கள் (SNACKS))

                                        தின் பண்டங்கள் (SNACKS))


எண்ணெய்யில் செய்யப்படும் காரவகைகள், இனிப்புகள், மற்றும் பால் சேர்க்கப் பட்ட பிஸ்கட், கேக், குக்கீஸ் போன்ற வைகளில்  அதிக அளவு உப்பு, இனிப்பு, கொழுப்பு போன்றவை உள்ளன.

தின்பண்டங்கள் நல்ல ஆரோக்கியத்திற்கு கெடுதலான உணவுகள்.

தின்பண்டங்களை அதிக அளவில் வாங்கி வீட்டில் இருப்பில் வைத்திருப்ப தால் அடிக்கடி உண்ணக் காரணமாகிறது. சாப்பிட வேண்டுமென்று த்தோன்றி னால் மிகச்சிறிய அளவாய்  வாங்கி அங்கேயே சாப்பிட்டு விட்டு வருவது நல்லது.

வியாபாரம் அதிகம் நடைபெறவேண்டும் என்கிற நோக்கத்தில் ருசிக்காக உப்பு, இனிப்பு, கொழுப்பு போன்றவைகளை வியாபாரங்களில் அதிக மாகவே சேர்க்கிறார்கள்.

கடைகளில் சீனியில் செய்த இனிப்புத்தான் எளிதாக  கிடைக்கும். வெல்லத்தில் செய்த இனிப்பு கிடைப்பது அரிது.

நம் முன்னோர்கள் கருப்பட்டி, வெல்லம், தேன் போன்றவற்றில் இனிப்புகள் செய்து சாப்பிட்டார்கள். சுண்டல் போன்ற காரம் செய்து சாப்பிட்டார்கள். அந்த மாதிரி தின்பண்ட வகைகளை  இப்போதுள்ள நாகரீக உணவுகள் ஓரம் கட்டி விட்டன.    

உணவகங்களிலும், வீட்டிலும் வறுக்கப்பட்ட உணவுகளையே அதிகம் விரும்பிச் சாப்பிடுகிறோம். உணவகங்களில்  அதே எண்ணெயை திரும்பத், திரும்ப சூடாக்கி உணவு தயாரிக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

விசேஷ வீடு களில் சமையல்காரார் தனது சமையல் ருசியாக இருக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் தான் சமைப்பரே தவிர உடலுக்கு கெடுதல் பற்றி அவர் கவலைப் படமாட்டார். சீனி, டால்டா, பாமாயில், மில்க்மெய்டு எல்லாம் பயன் படுத்தி மலிவாகவும் ஆகவும், ருசியாகவும் உணவு வழங்குவார்.

சிறு குழந்தைகளை ஈர்க்கும் வகையில் ஐந்து ரூபாய்க்கும், பத்து ரூபாய்க்கும் பாக்கெட்டுகளில் பலவகையான நொறுக்குத் தீனிகள் கிடைக்கின்றன. இவை குழந்தை களின் ஆரோக்கியத்திற்கான  நல்ல உணவுகள் அல்ல. அவைகளை வீட்டில் வாங்கிவந்து உண்பது நாமே குழந்தைகள் பழகுவதற்கு காரணமாகி விடு கிறோம்.

மேலும் தின்பண்டங்கள் நெடுநாள் வரை கெட்டுப் போகாமலிருக்க எண்ணெய்களை 400 degree F மேல் சூடுபடுத்தி, அதில் ஹைட்ரஜன் என்னும் இரசாயனத்தை செலுத்தி அதை ஹைட்ரோஜிநேட் டட் ஆயில் என்று பெயரிட்டு அதில் தின் பண்டங்களை செய்து விற்கிறார்கள். இந்த பண்டங்கள் நெடுநாள் வரை கெட்டுப்போவதில்லை. இது மாறிய கொழுப்பு ( Trans Fat )  வகை உணவாகும்.

பொதுவாக நாம் உண்ணும் தின்பண்டங்கள் அனைத்தும்  மாறிய கொழுப்பான எண்ணையில் செய்த காரம்,உப்பு  மாக இருக்கிறது, அல்லது சீனியில் செய்ததாக இருக்கிறது.

தின்பண்டங்களின் தன்மை தெரிந்து அதை அளவோடு உண்ணவும், நிராகரிக்கவும் நமக்கு தெரிந்திருக்க வேண்டும்.

பொதுவாக எதை உண்ணவேண்டும் எதை உண்ணக் கூடாது என  உணவுகளின் தன்மையை  தெரிந்து உணவுப் பழக்கத்தை வீட்டு  சமையலில்  மேற்கொண்டால், உணவகம், விருந்து போன்று  வெளியில் உண்ண வேண்டி வரும்போது கிடைப்பதை ஓரளவு சாப்பிடலாம். அல்லது நோய்கள் நம்மை உணவுக்கட்டுப்பாட்டில் தள்ளிவிடும். இலையில் இருந்தாலும் ருசிபார்க்க முடியாமல் ஆகிவிடும். 

                                               ----------------------------------------













இனிப்பு (SWEET)

                                                     இனிப்பு   (SWEET)

இனிப்பு சுவையை அனைவரும் விரும்புகிறோம். அதனைப்பற்றிய முக்கியமான விவரங்களை தெரிந்து வைத்திருப்பது அவரவர் கடமையாகும். .

நாம் உண்ணும் சீனி,சிரப்,குளுக்கோஸ்  போன்ற வைகளை கல்லீரல் கெட்ட  கொழுப்பாக மாற்றுகிறது. இந்த கொழுப்பு இரத்த உயர் அழுத்தத் திற்கும்,  இருதய நோய்க்கும் காரணமாகிறது. இனிப்பு இன்சுலின் குறை பாட்டிற்கும், அதிக உடல் எடைக்கும்  காரணமாகிறது.  

விளம்பரப்படுத்தி கடையில் விற்கப்படும் சுவையான குளிர்பானங்கள், பழரசங்கள் அனைத்தும் சீனி,சிரப் பயன்படுத்தியே செய்யப்படுகின்றன. இந்த வகை உணவுகளும், பானங்களும் ஆரோக்கியத்தின் முதல் எதிரி. 

பழங்களில் இருக்கும் இனிப்பு நார்ச்சத்து, வைட்டமின்,எலெக்ட்ரோலைட்  போன்றவைகளுடன் சேர்ந்து இருப்பதால் நன்மையாக இருக்கிறது. நார்ச்சத்தை பாதுகாக்க முடியாது,  எனவே பழங்களிலுள்ள நார்ச்சத்தை நீக்கிவிட்டு பழரசங்களை பாட்டிலில் அடைத்து விற்கிறார்கள். இதில் இனிப்பைத்தவிர வேறெந்த சத்தும் இல்லை. அதைக்குடித்தவுடன்  இரத்தத்தில் சுகர் அதிகமாகி விடுகிறது.

சீனிஇனிப்பு, மாவுப்பொருளில் இருக்கும் இனிப்பை விட எட்டு மடங்கு அதிக மானது. இனிப்பாக இருந்து மரணத்திற்கு அழைத்துச்செல்லக் கூடியது.  சீனியை மெல்லக் கொல்லும் ஒரு விஷம் என்கிறார்கள்.

சீனி, கரும்புச்சாரிலுள்ள தாதுக்களையும், வைட்டமின்களையும் இழந்து தனி கார்போஹைட்ரேட் ஆக இருக்கிறது. தனி கார்போஹைட்ரேட் ஆரோக்கியத் திற்கு நல்லதல்ல.

கார்போஹைட்ரேட்டை வைட்டமின் களுடன்தான் உண்ணவேண்டும்.
உடலுள் சீனியை ஜீரணிக்க தேவையான வைட்டமின் சத்துக்களை உடலின் சேமிப்பிலிருந்து எடுத்துக்கொள்வதால் வைட்டமின் இழப்பு ஏற்பட்டு உடல் நோய் வாய் ப்படுகிறது. தினமும் பலவகை யான உணவு, பானங்கள் மூலம் அதிக அளவு இனிப்பை நாம் உட்கொள் கிறோம்.

அடிக்கடி, குளிர்பானம், பழரசம் சாப்பிடுபவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பாதுகாக்கப்பட்ட பானங்களை தொடர்ந்து உட்கொள்ளும் போது  மதுவைப்போன்று கல்லீரலை பாதிக்கிறது.

கார்போஹைட்ரேட் உணவுகளை, புரோட்டீன், கொழுப்பு, காய்கள் போன்ற உணவுகளுடன் சேர்த்து உண்ணும் போது  இன்சுலின் தேவை குறைவாகவும், சீராகவும் இருக்கிறது. சீனி அதிகம் உள்ள உணவுகள் உடல்ச்சமநிலையை   கெடுத்துவிடுகிறது.

குறைவான சீனி, மிகுந்த கொழுப்பு உண்பவர்களைவிட, அதிக சீனி, குறைந்த கொழுப்பு உணவு உண்பவர்களுக்கு கொலஸ்டிரால்  பிரச்சினை  அதிக மாய் இருக்கிறது.

சீனி இயற்கையான உணவு அல்ல. 1900 ம் ஆண்டுகளுக்கு பிறகுதான் பிரபலமான ஒரு புதிய உணவாகும். எந்த சத்தும் இல்லாத, உடலுக்கு தேவையே இல்லாத ஒரு உணவாகும். தற்போது சீனியை விட மோசமான மக்கா சோளத்திலிருந்து எடுக்கப்படும்  "கார்ன் சிரப்"  பிரபலமாகி வருகிறது.

செயற்கையாக அல்லாமல் இயற்கையாகத்  தயாரிக்கப்படும் வெல்லம், கருப்பட்டி, பனங்கற்கண்டு, தேன் முதலிய வைகளை கிடைக்கும் இடம் தேடி அலைந்து வாங்கி உபயோகிப்பது நல்லது.

இளமையில் முதுமை நோய்கள் என்பது சாதாரண மாகிவிட்டதை ஆஸ்பத்திரிகளில் காணலாம்.

                                          ------------------------------------------























Thursday, 14 January 2016

உப்பு ( SODIUM )

                                                         உப்பு  ( SODIUM  )

உப்பு உணவின் சுவையைக் கூட்டுகிறது. உணவுகள் கெட்டுப் போகாமல் இருப்பதற்கும் ருசியாக இருப்பதற்கும் உணவுகளில்  அதிக அளவு உப்பை சேர்க்கிறார்கள்.

கடல் நீரை நிலத்தில் தேக்கி அதிலுள்ள தண்ணீர் ஆவியாகும் போது, உப்பு படிந்துவிடுகிறது. இதை கல் உப்பு என்கிறோம். கல் உப்பில் சிறிதளவு மெக்னீசியம்,பொட்டசியம்,கால்சியம் போன்ற தாதுக்களும் உள்ளன.

சுரங்கங்களில் படிந்திருக்கும் உப்பில் டேபிள் சால்ட் தயாரிக்கப்படுகிறது. டேபிள் சால்ட் கட்டிப்பிடிக்காமல் இருக்க அடிட்டிவ் சேர்க்கப்படுகிறது.

இரண்டு வகை உப்பிலும் ஒரே அளவான சோடியம் இருக்கிறது. இப்பொழு தெல்லாம் உப்பில் அயோடின் சேர்க்கப் படுகிறது. அயோடினும் உப்பும் பலவகையான பழம், காய் களில் காணப்படுகிறது. ஆனால் இது உடலுக்கு போதுமானதாக இல்லை. இதனால் உப்புடன் அயோடின் சேர்த்து விற்கிறார் கள்.கடல் நீரிலிருந்து பிரித்தெடுக்கப்படும் உப்பு சிறந்ததாகும். 

தைராய்டு,மூளை, கர்ப்பம்,மனச்சோர்வு, உடல் சக்தி,உடல் எடை பராமரிப்பு, முடி,நகம், உலர்ந்த தோல், இதயத்துடிப்பையும், இரத்த அழுத்தத்தையும் ஒழுங்கு படுத்த, போன்ற பல விதமான செயல் பாட்டிற்கு அயோடின் தேவைப்படுகிறது.

பொதுவாக உப்பை குறைக்கவேண்டும். ஏனென்றால் நாம் உண்ணும் பெரும்பாலான உணவுகளில் உப்பு இருக்கிறது. பாதுகாக்கப்பட்ட( Preserved ) அனைத்து உணவுகளிலும், கோக் போன்ற குளிர்பானங்களிலும், உப்பு சேர்க்கப் படுகிறது.

அதிக உப்பு உடலிலிருக்கும் கால்சிய சத்தை வெளியேற்று கிறது. சோடா உப்பு உணவிலிருக்கும் மெக்னீசியம் சத்தை உடலுள் உறிஞ்ச விடாமல் தடுக்கிறது.

அதிகப்படியான் உப்பு ஜீரண உறுப்புக்களை பாதிக்கிறது. உயர் இரத்த அழுத்தம், பக்க வாத ஆபத்து, வாதக்கோளாறு, எலும்பு பலவீனம் போன்ற உபாதை களை ஏற்படுத்துகிறது. 

உப்பு உடலில் நீரைத்தேக்கவும், தசைகள் இயக்கத்திற்கும் முக்கியமானதாக இருக்கிறது.
உப்பு உடலில் திசுக்களின் உள்ளேயும், வெளியேயும் உள்ள அழுத்தத்தை சீராக வைத்திருக்கிறது.
உப்பு தண்ணீர் தாகத்தைக் கொடுத்து  தண்ணீரை குடிக்க வைக்கிறது. கால்சியம் போன்ற சில தாதுக்களை இரத்தத்தில் தங்கவைக்கிறது.உப்பு அதிகமாகும் போது  கால்சியத்தை வெளியேற்றி விடுகிறது.
சன் ஸ்ட்ரோக் , வெப்பத்தின் தாக்கம் இவைகளைத் தடுக்கிறது.
உறக்கத்தை ஒழுங்கு படுத்துகிறது. 
வாயில் உமிழ் நீர் சுரக்க பயன்படுகிறது.
உணவு ஜீரணத்திற்கும், சத்துக்களை உறிஞ்சுவதற்கும் பயன் படுகிறது. 
உப்பு உடலில் எலெக்ட்ரோ லைட் ஐ சம நிலையில் வைத்திருக்கிறது.
மனித இரத்தத்தில் 0.9 % உப்பு இருக்கிறது.
உப்பு அதிக மானால் உடலில் நீர் அதிக மாகும், இரத்த அழுத்தம் அதிகரிக்கும்.
உப்பு குறையும் போது உடலில் நீர் குறையும் , இரத்த அழுத்தமும் குறையும்.
பால், காரட், முள்ளங்கி, இனிப்பு கிழங்கு, காலி ப்ளோவர், முட்டை கோஸ் திராட்சை, தக்காளி, கீரை போன்றவைகளில் உப்பு இருக்கிறது. பால் உணவுகள், சாஸ், கெட்சப், ஊறுகாய், போன்ற பதப்படுத்தும் உணவுகளில் உப்பு அல்லது பாக்கிங் சோடா சேர்க்கிறார்கள்.
உப்பை உணவுகளில் குறைந்த அளவு சேர்த்தால் போதும்.
உடலில் உப்பு குறையும் போது பல பிரச்சினை களை ஏற்படுத்துகிறது. உடலில் உப்பு அதிகமாகும் போது ஆரோக்கியத்தைப் பாழாக்கு கிறது.  

                                               -----------------------------------

  

                 



Wednesday, 13 January 2016

வைட்டமின் & தாதுச்சத்துகள்

                                      வைட்டமின் & தாதுச்சத்துகள் 

உடலின் சீரான இயக்கத்திற்கு வைட்டமின் மற்றும் தாதுக்கள் மிக அவசியம். உண்ணும் உணவின் மூலம் வைட்டமின்களும், தாதுக்களும் உடலுக்கு கிடைக்கிறது.

மனித உடலில் 50 திற்கும் மேம்பட்ட தாதுக்களின் மூலகங்கள் காணப்படு கின்றன.

வைட்டமின்  A, B,  C,  D,  E  காய்,கனிகளில் இருக்கின்றன.

தாதுக்கள் செலினியம், கால்சியம், பொட்டாசியம்,  மெக்னீசியம், மாங்கனீஸ், துத்தநாகம், குரோமியம், செம்பு, அயோடின், இரும்பு  போன்றவை முழுத் தானியம்,  நட்ஸ்,சீட்ஸ், பால், கீரை, காய் களில் கிடைக்கின்றன.

என்ஸைம்கள் உணவின் பலவித மாற்றங்களுக்கு கிரியா ஊக்கியாக செயல்படுகிறது. இவைகளை உடல் தயாரித்துக்கொள்கிறது.

வைட்டமின்கள் கொழுப்பில் கரையக்கூடியது, தண்ணீரில் கரையக்கூடியது என இரண்டு வகையானது. A, D, E, K என்கிற வைட்டமின்கள், கொழுப்பில் கரையக்கூடியது.கொழுப்பில் கரையக்கூடிய இந்த வைட்டமின்களை உடல் சேமித்து வைத்துக்கொள்கிறது.

C, B Complex  போன்ற வைட்டமின்கள் தண்ணீரில் கரையக்கூடியவை. தண்ணீரில் கரைந்த வைட்டமின்களை குடல் உறிஞ்சிக்கொள்கிறது. இந்த வகை வைட்டமின்களை உடலால் சேமித்து வைக்க முடிவதில்லை. இவ்வகை வைட்டமின்களை தினசரி உணவிலிருந்தே உடல் பெற்றுக்கொள் கிறது.

வைட்டமின்களை தாவரங்களும், உயிரினங்களும் உற்பத்தி செய்து கொள் கின்றன.

Organic & Inorganic  தாதுக்களை மண்ணிலிருந்தும், தண்ணீரிலிருந்தும் தாவரங்கள் உறிஞ்சிக் கொள் கின்றன. உயிரினங்கள் அந்த தாவரங்களை உட்கொண்டு தாதுக்களை பெறுகின்றன,

கால்சியம் போன்ற சில தாதுக்கள் உடலுக்கு அதிக மாக த்தேவைப்படுகிறது. அவை உடல் வளர்ச்சிக்கும், நீடித்த ஆரோக்கியத்திற்கும் இன்றியமையாத வைகளாக இருக்கின்றன.

 குரோமியம், செம்பு, அயோடின், இரும்பு, செலீனியம்,  துத்தநாகம் போன்ற தாதுக்கள் மிக குறைவான அளவே தினசரித் தேவைப்படுகிறது. இவ்வகை தாதுக்களை Trace Minerals என்கிறார்கள்.

 வைட்டமின்களும் தாதுக்களும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. உடல் குணம் பெற வும, வளர்ச்சி யடையவும் துணை செய் கின்றன. திசுக்களும், அவையவங்களும் அதனதன் வேலைகளை செய்ய உதவுகின்றன.உடல் இயக்கத்தை ஒழுங்கு படுத்த உதவுகிறது. உதாரணமாக, காரட் உண்பது கண்களுக்கு நல்லது. பச்சை கீரை களிலிருக்கும் வைட்டமின் K இரத்த உறைவுக்கு உதவுகிறது. உடலுக்கு அதிகமாகத் தேவைப்படும் வைட்டமின் C பச்சை நிற கீரைகள், காய்கள், பால், தயிர் மூலம் உடலுக்குக் கிடைக்கிறது.

சூரிய ஒளியிலிருந்து உடல் வைட்டமின் D யை த்தயாரித்துக்கொள்கிறது. வைட்டமின் D உணவிலிருந்து கால்சிய  சத்தை உறிஞ்சுகிறது. உடலில் வைட்டமின் D இல்லை எனில் கால்சிய சத்தும் குறைந்து விடும்.

உணவுகளை அதிகமாக வறுப்பதாலும், கொதிக்க வைப்பதாலும், அதிலுள்ள வைட்டமின் ,தாதுக்கள் அழிந்துவிடுகின்றன.

அதிக அளவு காப்பி, டீ, கோக், கோலா, மது  போன்றவை வைட்டமின், தாதுக்களை உணவிலிருந்து உறுஞ்சு வதில்லை. அவை சிறுநீர் வழியே வெளியேறி விடுகின்றன.

மருத்துவர் கூறாமல் நல்லதுதானே என்று நாமே வைட்டமின், தாதுக்கள் மாத்திரைகளை  உண்ணக்கூடாது. சத்தே ஆனாலும் அளவிற்கு அதிக மாகும் போது ஆபத்தாகி விடுகிறது.

வைட்டமின் மாத்திரைகளை காப்பி, டீ  யுடன் உண்ணக்கூடாது.

 பிற மாத்திரைகளுடன் வைட்டமின் மாத்திரைகளை உண்ணக்கூடாது.

500 mg கால்சியம் மாத்திரையை ஒரே தடவையாக உண்ணக்கூடாது.
இரும்புச்சத்து (Iron) மாத்திரையை உணவுடன் சேர்த்து உண்ணக்கூடாது.உடலால் உறிஞ்சிக்கொள்ள முடியாது
சோடியம் (உப்பு ) இரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்கிறது.
அதிக அளவு கால்சியம், வைட்டமின் C போன்ற வை சிறுநீரகத்தில் கல்லாக சேருகிறது.

காப்பி பொட்டசிய சத்தை உறிஞ்ச விடாமல் தடுக்கிறது. பொட்டசிய சத்து இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. வாழைப்பழம், உருழை கிழங்கில் பொட்டசிய சத்து இருக்கிறது.

மெக்னீசியம் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. சோடா மெக்னீசியத்தை உறிஞ்ச விடாமல் தடுக்கிறது.

எல்லா காய் களையும்,பழங்களையும், முழுத்தானியங்களையும், கீரை களையும், நட்ஸ், சீட்ஸ் களையும் மாற்றி, மாற்றி உண்ணும் போது உடலுக்குத் தேவையான எல்லா சத்துக்களும் கிடைத்துவிடும். நட்ஸ்,சீட்ஸ் சிறந்த இடை வேளை உணவாகும். உப்பு, இனிப்பு, எண்ணெய் சேர்க்காமல் உண்பது சிறந்தது.

காலை உணவை தவிர்க்கக்கூடாது. காலை உணவில் காய், பழம், முழுத்தானியங்கள், பால்  அவசியம் இருக்கவேண்டும்.

                                            ------------------------------------------------



Tuesday, 12 January 2016

கொழுப்புச்சத்து.

                                                      கொழுப்புச்சத்து.

கொழுப்பின் ஒரு வகையை கொலஸ்ட்ரால்  என்கிறார்கள்.  இதற்கு சரியான பெயர் லிபிட்ஸ் ' Lipids' என்பதாகும். ஆனால் லிபிட்ஸ் என்கிற வார்த்தையை யாரும் பழக்கப்படுத்திக்கொள்ளவில்லை.

இது நீரில் கரையாத கொழுப்பு, எண்ணெய், மெழுகு போன்ற ஒரு பொருள். இரத்தத்தில் கொழுப்பு என்று நாம் பொதுவாக ச் சொல்வது இந்த லிபிட்சைத் தான்.

இரத்தத்தில் கொலஸ்ட்ரால் என்பது கெட்ட பொருள் அல்ல. ஆரோக்கிமாக வாழ உடலுக்கு கொலஸ்ட்ரால் தேவைப்படுகிறது. இரத்தத்தில் அதன் அளவு அதிக மாகும் போது உடலில் மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது.

கொலஸ்ட்ரால் வழ,வழப்பாக எண்ணெய் போன்று இரத்தத்தில் இருப்பதால் இரத்த ஓட்டம் எளிதாக நடைபெற உதவுகிறது. ஆண்பால், பெண்பால் ஹார்மோன் உற்பத்திக்கு கொழுப்பு அவசியப்படுகிறது. சூரிய ஒளி உடலில்ப்பட்டு தோல் வழியாக உள் சென்று கொலஸ்ட்ராலை வைட்டமின் D ஆக மாற்றுகிறது. நரம்பு நாளங்களுக்கு கவசமாய் இருக்கிறது. சிலவகை நோய்களை எதிர்க்கிறது.

 கொலஸ்ட்ராலை  குறைப்பதற்காக உண்ணும் மாத்திரைகள் பக்கவிளைவு உடையதாக இருக்கிறது.

உடலுக்கு கொலஸ்ட்ரால்இரண்டு வழிகளில் கிடைக்கிறது. கல்லீரல் மற்றும் உடல் திசுக்கள் 75 சதம் கொலஸ்ட்ராலை உற்பத்தி செய்கிறது.மிஞ்சியுள்ள கொலஸ்ட்ராலை உணவுகளிலிருந்து உடல் எடுத்துக்கொள்கிறது.

கொழுப்பில் பல வகை இருக்கிறது. எல்லா கொழுப்பும் ஒன்றல்ல. கரையும் கொழுப்பு, கரையாத கொழுப்பு, மாறிய  கொழுப்பு,ட்ரைகிளிசிரைட்ஸ் கொழுப்பு ( Un saturated Fat, Saturated Fat, Trans Fat, Triglycerides Fat ) என பல பிரிவாக இருக்கின்றன.

இதில் மாறிய கொழுப்பு என்பது மிக மோசமான கொழுப்பாகும். இது இதயத்தை வெகுவாகப் பாதிக்கிறது. இது இரத்தத்தில் LDL கொலஸ்ட்ராலை அதிகப்படுத்தி, HDL கொலஸ்ட்ராலை குறைத்து விடுகிறது.

கரையாத கொழுப்பு உணவுகள்   LDL & Triglyceride கொலஸ்ட்ராலை அதிகப்படுத்துகிறது

கரையும் கொழுப்பு உணவுகள்  இரத்தத்தை ஆரோக்கியமாக்குகிறது.

கரையாத கொழுப்பு மிருக வகை உணவுகளிலும், பால் வகை உணவுகளிலும், முட்டை மஞ்சள் பகுதியிலும் அதிக மாக இருக்கிறது.

மாறிய கொழுப்பு என்பது எண்ணெய்யை கொதிக்க வைக்கும் போது எண்ணெய் கெட்டித்தன்மையை பெறுகிறது.அந்த எண்ணெய்யை மாறிய கொழுப்பு என்கிறார்கள்.கொதிக்கிற எண்ணையில் செய்யப்படும் காரம், இனிப்பு, வறுத்த உணவுகள் அனைத்திலும் மாறிய கொழுப்பு இருக்கிறது.லாப நோக்கில் கடைகளில் அதே எண்ணெய்யை திரும்ப, திரும்ப சூடாக்கி செய்கிறார்கள். இது மிகவும் கெடுதலானது.

இனிப்பு, ஸடார்ச், மாறிய கொழுப்பு உணவு வகை களை அதிக மாக உண்ணும் போது இரத்தத்தில் கொலஸ் ட்ரா ல்  அதிகமாகிவிடுகிறது.

 கொழுப்புகள் இரத்தத்தில் அதிகமாகிப்போனால் LDL ஐ அதிகப்படுத்துகிறது. அதிகமான LDL இரத்தக்குழாய் களில்  படிந்து விடுகிறது. இதனால் இரத்தக்குழாய்கள் குறுக ஆரம்பிக்கிறது. இதனால் மிக மெல்லிய பகுதிகளுக்கு இரத்தம் போவதில் சிரமம் ஏற்படுகிறது. முக்கிய மாக மூளை, இருதயம் போன்ற பகுதிகளுக்கு  இரத்தம் போகாமல் தடை ஏற்படும் போது பக்கவாதம், இருதய நோய், மாரடைப்பு போன்றவை ஏற்படுகிறது.

கரையும் கொழுப்பில் பாலி, மோனோ, ஒமேகா 3-6-9  என பல வகை இருக்கிறது. இவை அனைத்துமே இதயத்தை ஆரோக்கியமாக வைத்து உடலின் பொது ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.

கொழுப்பு எதிரியல்ல. கொழுப்பு அளவுக்குள் இருக்கவேண்டும். எந்த கொழுப்பு உணவுகளை உண்ண வேண்டும், எந்த கொழுப்பு உணவுகளை நிராகரிக்க வேண்டும் என தெரிந்து உணவுகளை சாப்பிட்டுவந்தால் கொழுப்பு நண்பனாய் இருக்கும்.

உடலில் கொழுப்பு குறைந்து விட்டால் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.

கெட்ட கொழுப்பு வகையான கரையாத கொழுப்பு, மாறிய கொழுப்பு உணவுகள் உடல் எடையை அதிகரித்து, இரத்தக்குழாய்களில் படிந்து உயர் இரத்த அழுத்தம், இருதய நோய், சுகர் என தொடராக நோய்கள் ஏற்படுவதற்கு காரணமாகிறது.    

இரத்தத்தில் HDL குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். LDL அதிகமாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மாறிய கொழுப்பு வகை உணவுகள் இரத்தத்தில்   HDL ஐ  குறைத்து   LDL  ஐஅதிகப்படுத்திவிடும்.  உடற்பயிற்சி இரத்தத்தில்    HDL ஐ அதிகப்படுத்தி,    LDL ஐ குறைக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

கரையாத கொழுப்பு, மாறிய கொழுப்பு உணவுகளை உண்பதாலும், அதிக உடல் எடை, உடற்பயிற்சி இன்மை, முதுமை,சுகர்,சிலவகை மாத்திரைகள் போன்ற வைகளே கொலஸ்டிரால்  நோய்க்கு காரணம். உண்ணும் உணவினால் மட்டுமே LDL அதிகமாகிறது.

இரத்தத்திலுள்ள புரோட்டீனுடன் சேர்ந்து கொலஸ்ட்ரால்  பயணிப்பதால் இந்த  கொலஸ்ட்ரால் புரோட்டீனை லிப்போ புரோட்டீன் என்று அழைக் கிறார்கள்.லிபிட்ஸ், புரோட்டீன் அடர்த்தியை பொறுத்து  அதனை HDL ( High Density Lipo Protein ) என்றும் LDL  ( Low Density Lipo Protein ) என்றும் VLDL ( Very Low Density Lipo Protein) என்றும் பிரிக்கிறார்கள்.

ட்ரைகிளிசிரைட்ஸ் கொழுப்பு இரத்தத்தில் காணப்படும் ஒருவகை கொழுப்பு. அதை உடல் சக்தியாக பயன் படுத்துகிறது. அளவோடு இருப்பது ஆரோக்கியம். அதிகமானால் அதெற்கென மருத்துவம் பார்க்க வேண்டி வரும். அதிக உடல் எடை, அதிக மதுப் பழக்கம், கெட்ட கொழுப்பு உணவுகள், உடற்பயிற்சியின்மை, போன்ற வற்றால் இரத்தத்தில் ட்ரைகிளிசிரைட்ஸ் அதிகரிக்கிறது.

இரத்தப்பரிசோதனையில் கொழுப்பின் அளவுகள்.

மொத்த கொழுப்பு                 LDL                                HDL                                    TRI            
200 க்கு குறைவாக    100 க்கு குறைவாக      60 க்கு அதிகமாக    150 க்குகுறைவாக  நல்லது.                         நல்லது.                           நல்லது.                      நல்லது.
                                                                                                                                                              
200- 239    அதிகம்          100-129  அதிகம்             40-60  நல்லது.         150-199 அதிகம் 

     -                                      130-159  அதிகம்-1                    -                          200-499 அதிகம் -1 

     -                                      160-189  அதிகம்-2                  -                                          -      

மொத்த கொழுப்பும்,  HDL ம்  3.5: 1 முதல் 5:1 என்கிற விகிதத்துக்குள் இருப்பது ஆரோக்கியம் என்கிறார்கள்.

கரையும் கொழுப்பு உணவுகள் :- ஆழிவிதை, திராட்சை விதை, வால் நட்ஸ், வேர்க்கடலை, எள்ளு, பாதாம், பிஸ்தா, முந்திரி,  தேங்காய்,போன்ற பல் வேறு நட்ஸ், சீட்ஸ் முழுத்தானியங்கள் முதலியன. .

எண்ணெய் பயன் பாடுகள்:- எண்ணெயில் வறுத்த உணவுகள் ருசிமிக்க தாக இருக்கிறது. ஆனால் இந்த கொழுப்பு இரத்தத்தில் எளிதில்  கரையாது. இரத்தத்தில் அதிகமாக சேரும்போது ஆபத்தாகி விடுகிறது.

சமையலுக்கு பலவிதமான எண்ணெய்களை பயன் படுத்துகிறோம். காலா கால மாக பயன்படுத்திவரும் தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய்,கடலை எண்ணெய் சமையலுக்கு நல்லது. இன்னும் பல எண்ணெய்கள்  உள்ளன.
எந்த எண்ணெயாக இருந்தாலும் தொழில் நுட்பத்தால் சுத்திகரிக்கும் ( Refined Oil ) எண்ணெயை வாங்காமல், நாட்டு செக்கு முறையில் பிழியும் எண்ணெய்களாய் தேடிப் பிடித்து வாங்கி உபயோகிப்பது நல்லது. தேங்காய் எண்ணெய் ஊட்டச்சத்து மிக்கது.வெப்பம் தாங்கக் கூடியது. பொதுவாக் எண்ணெய்களை மாற்றி,மாற்றி பயன் படுத்துவது நல்லது.எந்த எண்ணெயாக இருந்தாலும் அதிகமாக் பயன் படுத்துவதை தவிர்ப்பது நல்லது.

கரையும் கொழுப்பு உணவுகளை நல்லது என்று  சாப்பிட்டு, கரையாத கொழுப்பு உணவையும் சேர்த்து சாப்பிட்டால் இரத்தத்தில் மொத்த கொழுப்பும் அதிக மாகி விடும்.

ருசியான உணவுகள் எல்லாம் ஆரோக்கியம் தரும் உணவுகள் அல்ல என்பதை நினைவிற் கொண்டு தவறான உணவுகளை நிராகரித்து விடுவது நல்லது.

                                -------------------------------------------












Monday, 11 January 2016

புரதச்சத்து

                                                             புரதச்சத்து 

உடலில் தண்ணீருக்கு அடுத்ததாக புரோட்டீனே நிறைய இருக்கிறது. உடல் எடையில் 50% புரோட்டீன் இருக்கிறது.

புரோட்டீன் அதிகமாய் இருக்கும்  உணவுகள். மிருக உணவுகள், சோயாபீன்ஸ், கொள்ளு,மீன், கோழி,பால், முட்டை வெள்ளை பாகம், ஓட்ஸ்,தானியங்கள், காய்கள்  முதலியன.

தினசரி உணவில் பருப்பு,கடலை,பயறு, கொள்ளு, நட்ஸ்,சீட்ஸ், பீன்ஸ் வகைகள் போன்ற புரோட்டீன் உடைய உணவுகளை கட்டாயம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

தசைகள், உறுப்புகள் அமைய, எதிர்ப்பு சக்தி ஏற்பட புரோட்டீன் அதிக அளவு காரணமாகிறது. உடலின் ஒவ்வொரு பாகத்திற்கும் ஆக்சிஜனை எடுத்துச்செல்லும் இரத்த சிகப்பு அணுக்களில் ஹீமோகளோபினை அமைக்கிறது. உடலில் பராமரிப்பு வேலைகள் சிறப்பாக நடைபெற புரோட்டீன் உதவுகிறது.ஆரோக்கியமான முடி,தோல்,நகம், திசுக்கள் மற்றும் ஹார்மோன் உற்பத்தி போன்ற வற்றிற்கும் புரோட்டீன் முக்கியமாகும்.

புரோட்டீன் வயிற்றில் ஜீரணமாகி அமினோ ஆசிட் ஆக மாறுகிறது. புரோட்டீனுக்கு இன்சுலின் தேவை இல்லை.

காலை உணவில் புரோட்டீன் கட்டாயமாக இருக்கவேண்டும்.

கார்போஹைட் ரேட் , கொழுப்பு  போன்று அவை உடலுக்கு கிடைக்காதபோது புரோட்டீன் உடலுக்கு சக்தியை தருகிறது.

புரோட்டீன் சத்தை உடலால் சேமித்து வைக்க முடியாது. தினசரி நாம் உண்ணும் உணவில் புரோட்டீன் சத்து இருக்க வேண்டும். அதிக அளவு மிருக உணவுகளை உண்பது பலவித நோய் களை த் தருகிறது.

அதிக அளவு புரோட்டீனை உண்பது ஆரோக்கியகுறைவைத்தரும். அதிக புரோட்டீன் சிறு நீரக த்திற்கு பாரமாகிறது.

புரோட்டீன் உணவுகளை தினமும் சரியான அளவிற்கு சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறைய உதவும்.

ஸ்பைருலினா என்னும் கடற்பாசியில் உயர்ந்த வகை புரோட்டீனும், வைட்டமின், தாதுக்கள், நல்ல கொழுப்பு முதலியன இருக்கிறது.

                          ---------------------------------------------------------







கார்போஹைட்ரேட் சத்து

                                       கார்போஹைட்ரேட்  சத்து


தினசரி உண்ணும் உணவில் இருக்கும் கார்போஹைட்ரேட் சத்து உடலுக்கு அத்தியாவசியமான ஒன்று. இது உடல் இயக்கத்துக்கு வேண்டிய சக்தியை உற்பத்தி செய்யும் எரிபொருளாக இருக்கிறது. கார்போஹைட்ரேட் இரத்தத்தில் கலந்ததும் அங்கு வரும் இன்சுலினுடன் பயணிக்கிறது. செல் களில் ஆக்ஸிஜனுடன் சேர்ந்து சக்தியை உற்பத்தி செய்து திசுக்களுக்கு கொடுக்கிறது. இந்த சக்தியால் மொத்த உடலும் இயங்குகிறது.

கார்போஹைட்ரேட் உணவுகளை அளவோடு உண்ணும் போது உடல் ஆரோக்கியமாக இருக்கிறது. கார்போஹைட்ரேட் உணவுகளை மிக அதிக மாக  உண்பவர்களாக நாம் இருப்பதினால் உடலின் ஆரோக்கியம் பலருக்கும் பலவிதமாய் பாதிக்கப்படுகிறது.
 கார்போஹைட்ரேட் ஐ ஸ்டார்ச், சுகர், நார்ச்சத்து( starch, sugar, fibre ) என  மூன்று வகையாக பிரித்திருக்கிறார்கள்.
கார்போஹைட்ரேட் உணவை நல்லது, கெட்டது என இருவகைப படுத்தியிருக்கிறார்கள்.. நல்லதை கலவை கார்போஹைட்ரேட் ( complex carbohydrate) எனவும், கெட்டதை எளிமையான கார்போஹைட்ரேட் ( simple carbohydrate ) எனவும் கூறுகிறார்கள்.

சுகர்:-  இயற்கையாகவே பால்,பழம், காய் களில் இருக்கிறது.

ஸ்டார்ச் :- தானியங்கள், பீன்ஸ், கிழங்கு, கடலைகளில் காணப்படுகிறது.

நார்ச்சத்து :- பழங்களிலும், காய்களிலும், முழுத்தானியங்கள், பீன்ஸ், கடலைகளில் இயற்கையாகவே இருக்கிறது.

தவிடு நீக்கப்பட்ட வெள்ளை அரிசி, தோல் நீக்கப்பட்ட கோதுமை, கரும்புச் சாறை சுத்திகரித்து வரும் சீனி போன்ற உணவுகளில் பல சத்துக்கள் நீக்கப் பட்டு கார்போஹைட்ரேட் த்னிமையாக்கப்பட்டு விடுவதால் இவ்வகை உணவுகளை  (simple carbohydrate) எளிமையான கார்போஹைட்ரேட் என்கிறார்கள்.

தோலுடன் கூடிய முழுத்தானியங்கள், காய்கள்,கனிகள் போன்ற உணவுகளில் நார்ச்சத்து, வைட்டமின், தாதுக்கள் போன்றவைகளுடன் சேர்ந்து
கார்போஹைட்ரேட் இருப்பதினால் இவ்வகை உணவுகளை ( complex carbohydrate) கலவை கார்போஹைட்ரேட் என்கிறார்கள்.

எளிமையான கார்போஹைட்ரேட் உணவுகள் மிக எளிதாக ஜீரணமாகி, வேகமாக இரத்தத்தில் கலந்து இரத்தத்தில் சுகரை அதிகப்படுத்துகிறது.

கலவை கார்போஹைட்ரேட் உணவுகள் நார்ச்சத்துடன் இருப்பதால் ஜீரணம் மெதுவாக நடைபெறுகிறது. அதிலுள்ள சுகர் மெதுவாக, ஒரு சீராக இரத்தத்தில் சேருகிறது.

 கார்போஹைட் ரேட் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டியவை.

நாம் சாப்பிட்ட உணவு ஜீரணமாகி இரத்தத்திற்கு வந்ததும் அதிலுள்ள கார்போஹைட்ரேட்க்கு உடனடியாக இன்சுலின் தேவைப் படுகிறது. இரத்தத்தில் கார்போஹைட்ரேட் அதிகமாகும் போது இன்சுலினும் அதிகமாகத்  தேவைப் படுகிறது.

சீனியை கடையிலிருந்து குறைவாக வாங்கிவந்து காப்பி, டீ க்கு மட்டும் பயன் படுத்த வேண்டும். மேற்கொண்டு இனிப்பு களுக்கு வெல்லம், கருப்பட்டி, பனங்கற்கண்டு, தேன் போன்றவைகளை உபயோகிக்கலாம்.பாட்டில் பானங்களில் சீனி மிக அதிகமாக இருக்கும். முப்பது வயதிற்கு மேல் சீனி உண்பதை குறைக்கவேண்டும்.

வெள்ளை அரிசி, வெள்ளை பிரட்,  மைதா போன்ற தவிடு நீக்கிய உணவுகளை வீட்டில் உபயோகிப்பதை தவிர்க்கலாம்.

கார்போஹைட் ரேட் உணவை மூன்று நேரமும் அதிக மாக உட்கொள்ளும் போது அவை ஒன்று இரத்த சுகரை அதிகப் படுத்தும் அல்லது கொழுப்பாக மாறி உடல் எடையை அதிகரிக்கும்.

தோலுடன் கூடிய தானியங்களையும், காய்களையும், பழங்களையும் உண்ணும்போது கார்போஹைட்ரேட்டுடன் நார்ச்சத்தும் கிடைத்து விடும்.  . நார்ச்சத்து ஜீரணத்திற்கும், இரத்த சுகர், இரத்த கொலஸ் ட்ரால், அதிக உடல் எடை, மலச்சிக்கல், இருதய நோய் போன்றவை களுக்கும் பயனாக இருக்கும். தேவையான வைட்டமின்களும், தாதுக்களும் கிடைத்து விடும். 

குறைந்த கார்போஹைட் ரேட் உணவுகளால், உடல் எடை குறைகிறது.

எளிமையான கார்போஹைட்ரேட்  உணவுகள் ( Refined Products ) அதிக ருசியானவை. நாம் அவைகளை அதிகமாக விரும்பி அடிக்கடி சாப்பிடுகிறோம். அதனால் ஆரோக்கியத்தை இழக்கிறோம்.

கலவை கார்போஹைட் ரேட் உணவுகளும் ருசி உள்ளவை. நிறம், சிரமம் போன்ற வைகளால், நாம் குறைவாகவே விரும்புகிறோம். ஆனால், அதில் தான்  நம் ஆரோக்கியம் இருக்கிறது.

                                  --------------------------------------------------







  

Thursday, 22 October 2015










Image result for money and health


Image result for பொன்மொழிகள்


Image result for பொன்மொழிகள்



Image result for பணம்
Image result for பொன்மொழிகள்

Image result for பொன்மொழிகள்



Image result for பொன்மொழிகள்

Image result for பொன்மொழிகள்

Image result for பொன்மொழிகள்








Image result for பொன்மொழிகள்

Image result for money and health






































EFFECT OF ALCOHOL


























Image result for exercise and health








Image result for body weight  and health








Image result for body weight  and health

Image result for time and health

Image result for time and health




Key Numbers for Heart Health

3 numbers that can change your life.

1. Blood Pressure: Key to Heart Health

2. Cholesterol: Predictor of Heart Attack

3. Waist Size: The Connection to Heart Disease



Wednesday, 21 October 2015

நினைப்பும் உடல்நலமும்

                                         நினைப்பும் உடல்நலமும்

உடல் மனதின் வேலையாள். உடல் மனதிற்கு கீழ்படிந்து நடக்கிறது. சுற்றுப்புறம் உடல்நலத்தைப் பாதிப்பது போல் நினைப்புகளும் உடல் நலத்தைப்  பாதிக்கிறது. நியாயமற்ற நினப்புகளால் உடல் துரிதமான நோய்க்கும் அழிவிற்கும் காரணமாகிறது. உற்சாகமான நல்லெண்ணங்கள் உடலின் இளமையையும் ஆரோக்கியத்தையும் காக்கிறது.

நோயைப் பற்றிய மாறாத பயம் நோய்க்கு ஆட்படுத்துகிறது. பயம் எண்ணம் உடலைக்கொன்று விடுகிறது. பரிதவிப்பான எண்ணம் உடல்முழுவதையும் கெடுத்து விடுகிறது. சுத்தமில்லாத நினைப்புகளை மனதில் அடைகாக்கும் பொழுது அது செயலாகாவிட்டாலும் நரம்பு மண்டலத்தைப் பலவீனப்படுத்தி விடுகிறது.
உடலானது மிகவும் மென்மையான, மற்றும் சுருங்கு தசைகளாலானது. எண்ணங்களை வெளிப்படுத்தக் கூடியது. எண்ணங்களின் தன்மைக்கேற்றபடி மாற்றமடையக்கூடியது. உறுதியான, சுத்தமான, மகிழ்ச்சியான எண்ணங்களால் தசைகள் சக்தியும், மென்மையும் பெறக்கூடியது. நல்லெண்ணங்களை உடையமனம் நல்ல இரத்தத்தையும், நல்ல வாழ்க்கையையும் அமைக்க முயற்சிக்கும். எண்ணங்களை மாற்றாமல் உணவுகளை மட்டும் மாற்றுவதால் எந்த பயனும் ஏற்படபோவதில்லை.

மனதில் சுத்தாமான எண்ணங்களை உடையவர்கள் ஒருபோதும் அசுத்தமான உணவுகளுக்கு ஆசை படமாட்டார்கள். சுத்தமான எண்ணம் உடலை சுத்தமாக்கும். உற்சாகத்தை தரும் எண்ணங்கள் என்பவை ஒரு மருத்துவரைப் போன்று உடலை ஆரோக்கியப்படுத்தும்.

சந்தோசம், கவலை, கோபம், பயம் போன்ற எண்ணங்களை முகம் பிரதிபலிக்கிறது. கவலையால் நெற்றி சுருங்குகிறது. மகிழ்ச்சியால் முகம் பிரகாசிக்கிறது. இவைகளை நாம் முகத்தில் நேரில் காண்கிறோம். உண்மையில் இந்த உணர்வுகளால் உடல் முழுவதும் தாக்கம் பெறுகிறது. எண்ணங்களின் தன்மையை பொறுத்து ஒவ்வொரு உறுப்பு களும் கூடுதலாகவோ குறைவாகவோ தாக்கம் பெறு கின்றன.

எண்ணங்களை அதன் நோக்கத்துடன் தொடர்பு படுத்தி எண்ணப்பழக வேண்டும். தெளிவான நோக்கம் இல்லாமல் வாழ்பவர்கள் கவலை, பிரச்சினை, சுயபரிதாபம் போன்ற நிலைக்கு தள்ளப்படு கிறார்கள். நோக்கமில்லாமல் எண்ணுவதையும், பலவீனங்களையே எண்ணிக் கொண்டிருப் பதையும்   நிறுத்தப் பழகவேண்டும். எண்ணங்களுக்கு நோக்கம் இருக்க வேண்டும்.

பலசமயங்களில் நமக்குள்ளே நாம் பேசிக்கொள்கிறோம், விவாதிக்கிறோம், வழிகாண்கிறோம். யாருக்கும் பாதிப் பிருக்கக்கூடாது நியாயமாய் இருக்கவேண்டும் என்கிற நோக்கில் முடிவெடுத்தால் வெளியே  நியாயமாய் நடப்போம். தனக்குள்ளே பேசிக்கொள்ளும் போதே சுயநலத்தை முன்வைத்து முடிவெடுத்தால்  தவறாக நடந்து பிரச்சினைக்கு காரண மாவோம்.

நல்லதை விரும்புபவர் புகைபிடிப்பதில்லை, மது-போதை வஸ்துக்களை பயன்படுத்துவதில்லை. உணவு, உடற்பயிற்சி, கடமை, நியாயம், கருணை, மரியாதை என்கிற மனோபாவம் அவரிடம் இருக்கும்.

ஒரு பிரச்சினையான சூழ் நிலையில் அனைவருக்கும் பயனான ஒரு முடிவை தேடுவதே நேர்மறை எண்ணம். கெட்டதை தவிர்த்து நல்வழியை காண்பது நேர்மறை எண்ணம்.

எதிர் மறை எண்ணங்கள் சில

ஒரு சூழ்நிலையிலுள்ள தவறுகளை மட்டுமே மிகைப்படுத்தி நல்லவற்றை கவனிக்காமல் விடுவது.

தனக்கு ஒரு நல்லது கிடைக்கும் போது அதனால் வரும் பாராட்டுக்களையும் பாராட்டுபவர்களையும் நினைத்துப்பார்க்காமல், எல்லாவற்றிற்கும் தனது திட்டம் தான் காரணம் என்ற நினைப்பில் இருப்பது.

தவறாக ஒன்று நடந்துவிட்டால் தன்மீது நொந்துகொள்வது.

தொடர்ந்து தவறுகளைமட்டுமே எதிர்பார்ப்பது. காலையில் ஒன்று தவறாகிவிட்டால் அன்று முழுவதும் தவறு தான் நடக்கும் என்கிற முடிவுடன் இருப்பது.

நல்லது அல்லது கெட்டதை ( Perfection or Failure ) மட்டுமே பார்ப்பது. மத்திய வழியை மறந்து விடுவது. இவை எல்லாம் எதிர்மறை எண்ணங்களுக்கு சில உதாரணங்களாகும்.

தான் மாறவேண்டிய சில குணங்களை உணர்ந்து அதை மாற்றிக்கொள்ள திட்டமிடுவது நல்லது.

தன்னுடைய எண்ணங்கள் நேர்மறையா, எதிர்மறையா என கவனித்து அதனை சரிப்படுத்துவது நல்லது ,

தனது முடிவின் பின்விழைவுகளைப பற்றி யோசிக்காமல் ஆசையாலும், கோபத்தாலும்  உணர்ச்சி வயப்படுகிறோம் என்பதை உணருவது.

எந்த சூழலிலும் உற்சாகத்தையும் நம்பிக்கையையும் இழக்காமல் இருப்பது நல்லது  .

உடற்பயிற்சி, சரியான உணவு, மன அழுத்தத்தை மாற்றும் பயிற்சிகளில் ஈடுபடுவது நல்லது .

கவலைப் படுவதால் எதுவும் நடக்காது. கவலைக்கான காரணங்களை ஆராய்ந்து புதிய முயற்சியில் இறங்குவது நல்லது

நமது மகிழ்ச்சியிலும் வாழ்க்கையிலும் அக்கறையுள்ள அம்மா, மனைவி/கணவன், நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் போன்றவர்கள் நம்மீது குற்றம் காணும் போது அதை அலட்சியப் படுத்தாமல் சரிப்படுத்த முயற்சிக்க வேண்டும்..

சுற்றியுள்ளவர்களுக்கு உதவியாக வழிகாட்டி அதை கவனித்து கேட்டு தெரிந்துகொள்வது நல்லது .

தவறான எண்ணம் மனதில் ஏற்படும் போது இது தவறான எண்ணம் என உணர்ந்து அதற்கேற்ற சரியான நல்லெண்ணங்களை எண்ணுவது நல்லது .

பயிற்சிதான் தவறான எண்ணங்களிலிருந்து நல்லெண்ணங்களுக்கு மாற்றும். சுய விமர்சனங்களை குறைத்து விட்டு சுய ஏற்பினை அதிகப்படுத்தவேண்டும். கெட்டதை நினைத்து விட்டு நல்லதை செய்யமுடியாது. நல்ல, வலிமையான, வெற்றியானநினைப்புகள் ஆழ்மனதிற்குள் புகவேண்டும். ஏழையாக இருந்தாலும் ராஜாவாக ஆவேன் என்று கற்பனை செய்ய வேண்டும்.  

ஆழ்மனத்திலிருக்கும் சரியான எண்ணங்கள்  அதிசயிக்கும் வகையில் சக்தியையும்,வலிமையையும்,தைரியத்தையும்,தீர்மானத்தையும்  தருகிறது.
இன்று உணர்ச்சியுடன் நாம் எண்ணும்  ஒரு எண்ணம் சீக்கிரத்திலோ, தாமதமாகவோ  ஒருநாள் செயலுக்கு வருகிறது. நம் செயலுக்கேற்ப நம் வாழ்க்கை நடக்கிறது. நமது வாழ்கையை நமது எண்ணங்கள் காக்கிறது.

எண்ணங்களை ஒழுங்கு படுத்துவதன் மூலம் வாழ்கையை ஒழுங்கு படுத்தலாம். அதற்கு வெற்றி-தோல்விகளைப்பற்றி ஆராய்ந்த தெளிவால் நெருக்கடிகளை கையாள  வேண்டும். இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் மிகபெரிய சக்தி களில் ஒன்று நினைப்பு. என்ஜின் முன்னால் போவதும் பின்னால் போவதும் ஒரே சக்தியால் தான். அதேபோல் சரிக்கும்-தவறுக்கும் காரணம் எண்ண சக்திதான். உணவில்லாமல் பட்டினி கிடப்பவன் பயத்தால் செத்து விடுகிறான்.நோய் குணமாக வேண்டி பட்டினிவிரதம் என்றிருப்பவன் நோய் குணமடைந்து ஆரோக்கியம் பெறுகிறான். நம்பிக்கை எண்ணம் உடலுக்கு வலிமையைத் தருகிறது. பயம் எண்ணம் உடலைக்கொன்று விடுகிறது.

சரியான உணவுகள், உடற்பயிற்சிகள் , நல்லவனாக, நன்மையாக இருப்பது போன்ற எண்ணங்களை    பெரும்பான்மையாக எண்ணும் போது அவை ஆழ்மனதுள்  சென்று உடனடியாகவோ தாமதமாகவோ நம்மை விருப்பத் துடன் செயல்பட வைக்கிறது. மனதை  நம்முடன் ஒத்துழைக்க வைக்க இதுவே வழி. நல்ல உடல் நலத்துடன் வாழ மனத்திலிருக்கும் நினைப்புகளுக்கு முக்கியமான பங்கு இருக்கிறது.

மனம் போன போக்கில் எண்ணிக் கொண்டிருக்காமல் நல்ல எண்ணங்கள்  ஆரோக்கியத்திற்கு பயன்படுவதை அறிந்திருக்க வேண்டும்.

                                           ------------------------------------------------------